தேங்காய் சிரட்டை இருந்தா போதும் உங்க பெட்டை அழுக்கு தூசி சேராம எப்பவும் புதுசு போல கிளீன்னா வச்சுக்கலாம். அது எப்படிங்க அப்படின்னு ஆச்சரியமா இருக்காக்குல வாங்க அது எப்படின்னு தெரிஞ்சுக்கலாம்.

bed cleaning coconnut sheel
- Advertisement -

வீட்டை சுத்தமாக வைத்துக் கொள்வது வீட்டில் உள்ள பொருட்களை எல்லாம் சுத்தமாக பராமரிப்பது எல்லாம் எப்படி முக்கியமோ அதே அளவு முக்கியமானது தான் நாம் தினமுமே பயன்படுத்தும் இந்த பெட்டை சுத்தப்படுத்துவது பெரும்பாலும் வீட்டில் நாம் தலகனை ஒரே பெட்ஷீட் போன்றவற்றையெல்லாம் அடிக்கடி சுத்தம் செய்வோம். ஆனால் பெட்டை பொருத்த வரையில் அப்படி சுத்தம் செய்வதை கிடையாது. சொல்லப் போனால் இந்த பெட்டில் தான் அதிக அளவு அழுக்குகள் சேர்ந்து இருக்கும் அதை நாம் நிச்சயமாக சுத்தம் செய்ய வேண்டும். அதை எப்படி சுத்தம் செய்வது என்று பலருக்கும் யோசனையாக இருக்கலாம் அதற்கான ஒரு சிறந்த எளிமையான வழியை தான் இந்த வீட்டுக் குறிப்பு பதிவில் இப்போது நாம் தெரிந்து கொள்ளப் போகிறோம்.

மெத்தையை எளிமையாக சுத்தப்படுத்தும் முறை
மெத்தையை சுத்தப்படுத்துவதற்கு முன் முதலில் பெட் மேலே இருக்கும் தூசுகளை எல்லாம் தட்டி விடுங்கள். அதன் பிறகு ஒரு கிண்ணத்தில் இரண்டு ஸ்பூன் சமையல் சோடா மாவு. இரண்டு ஸ்பூன் வினிகரை ஊற்றி கொள்ளுங்கள். வினிகர் ஊற்றியதும் நன்றாக பொங்கி வரும் இதிலேயே இன்னும் கொஞ்சம் தண்ணீரையும் ஊற்றி ஏதேனும் ஒரு குச்சி அல்லது கரண்டி வைத்து நன்றாக இதை கலந்து விடுங்கள்.

- Advertisement -

அடுத்து ஒரு தேங்காய் சிரட்டை எடுத்துக் கொள்ளுங்கள் தேங்காய் சிரட்டைக்கு பின்புறம் இருக்கும் நார் பகுதி நீக்காமல் அப்படியே வைத்துக் கொள்ளுங்கள். இப்போது ஒரு காட்டன் துணி அல்லது டர்க்கி டவல் ஏதேனும் ஒன்று எடுத்துக் விரித்து அதன் மேல் இந்த தேங்காய் சிரட்டையை வைத்து துணியை சுற்றிலும் மூடி ரப்பர் பேண்ட் போட்டுக் கொள்ளுங்கள். இந்த தேங்காய் சிரட்டை மண்ணெண்ணெய் ஊற்றும் புனல் போலவும், இந்த துணி அதை சுற்றி கட்டியது போலவும் இருக்கும்.

இப்படி தயார் செய்து வைத்து இந்த தேங்காய் சிரட்டையை நார் உள்ள பகுதிகளில் கை பிடி போல பிடித்துக் கொள்ளுங்கள். அதை அப்படியே ஏற்கனவே கலந்து வைத்திருக்கும் வினிகரில் தொட்டு உங்கள் மெத்தை முழுவதும் தேய்த்து விடுங்கள். அதில் படிந்திருக்கும் அழுக்கு கறை அனைத்தும் அப்படியே நீங்கி விடும். இந்த முறையில் சுத்தம் செய்வது மிகவும் எளிது அது மட்டும் இன்றி இதனால் எந்த ஒரு கேடும் நம்முடைய சருமத்திற்கு வராது.

- Advertisement -

அடுத்து துடைத்த இந்த மெத்தை எப்போதும் வாசனையாக வைத்திருக்க இதே போல் ஒரு கிண்ணம் அல்லது ஸ்வீட் பாக்ஸ் எடுத்துக் கொள்ளுங்கள். அதில் கொஞ்சம் தண்ணீரை ஊற்றிய பிறகு டெட்டாயிலை சேர்த்துக் கொள்ளுங்கள். இப்பொழுது எல்லாம் டெட்டால் வெவ்வேறு விதமான வாசனைகளில் வருகிறது. அதில் நல்ல வாசனை மிக்க ஏதேனும் ஒரு பிராண்டை வாங்கி கொஞ்சமாக சேர்த்துக் கொள்ளுங்கள். அதில் மேலும் கொஞ்சம் கம்போட்டை ஊற்றிக் கொள்ளுங்கள். இவை இரண்டையும் நன்றாக கலந்து கொள்ளுங்கள்.

இப்போது முன்பு துடைத்தது போல அதை தேங்காய் சிரட்டையை எடுத்துக் கொள்ளுங்கள். இந்த துணியை நன்றாக துவைத்து சுத்தம் செய்த பிறகு மறுபடியும் துணியை தேங்காய் சுரட்டை மீது வைத்து கட்டி விடுங்கள். இப்போது இந்த வாசனை கலந்த தண்ணீரில் தொட்டு அதே போல் உங்கள் மெத்தை முழுவதிலும் தேய்த்து எடுத்து விட்டாலே போதும் மெத்தை நல்ல நறுமணத்துடன் இருக்கும் பூச்சி பொட்டு எதுவும் வராது குழந்தைகள் இருக்கும் வீட்டில் இந்த முறையில் சுத்தம் செய்து இப்படி வைத்துக் கொண்டால் மிகவும் நல்லது.

இதையும் படிக்கலாமே: இனி கை வலிக்க வலிக்க வீடு முழுவதும் மாப் போட வேண்டும் என்ற அவசியமே இல்லை. சும்மா இந்த தண்ணீரை மட்டும் வீடு முழுவதும் தெளித்து விட்டால் போதும். டைல்ஸில் ஒட்டி இருக்கும் அழுக்கு எல்லாம் தானமாக சுத்தமாயிரும்.

இது வரையில் மெத்தையை எப்படி சுத்தம் செய்வது என்று தெரியாமல் குழம்பிக் கொண்டிருந்தவர்களுக்கு இந்த குறிப்பு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். ஏனெனில் மெத்தையையும் நாம் மாதத்திற்கு ஒரு முறையாவது சுத்தம் செய்வது மிகவும் முக்கியம். இந்த முறையில் சுத்தம் செய்து பாருங்கள் எளிமையாகவும் இருக்கும் அதே நேரத்தில் நம்முடைய ஆரோக்கியத்தையும் பராமரித்துக்கொள்ள உதவியாக இருக்கும்

- Advertisement -