இந்த ஐடியா தெரிந்தால் அழுக்கு படிந்த மெத்தை, சோஃபா இவைகளை 5 நிமிடத்தில் கை வலிக்காமல் சூப்பராக வீட்டிலேயே சுத்தம் செய்யலாம்.

bed
- Advertisement -

நாம் எல்லோர் வீட்டிலும் படுக்கை அறையில் இருக்கும் மெத்தை அழுக்காக தான் இருக்கும். ஏனென்றால் அதை எடுத்து நம்மால் துவைக்க முடியாது. அடிக்கடி மெத்தையை மாற்றவும் முடியாது. வேக்யூம் கிளீனர் இருந்தால் இந்த மெத்தைக்கு மேலே இருக்கக்கூடிய அழுக்கை எளிமையான முறையில் சுத்தம் செய்து விடலாம். ஆனால் எல்லோர் வீட்டிலும் வேக்யூம் கிளீனர் இருக்காது. மெத்தை, சோஃபா இந்த இரண்டு பொருட்களையும் சுத்தம் செய்ய எளிமையான ஒரு வீட்டு குறிப்பை தான் இன்று நாம் பார்க்கப் போகின்றோம். குறிப்பை படித்து பாருங்கள். பிடித்திருந்தால் முயற்சி செய்து பாருங்கள். ரிசல்டை பார்த்தல் உங்களுக்கே ஒரு மன திருப்தி ஏற்படும்.

அழுக்கு படிந்த மெத்தை சோபா சுத்தம் செய்யும் முறை:
ஒரு சிறிய கிண்ணம் எடுத்துக் கொள்ளுங்கள். அதில் 1/2 டம்ளர் வினிகர், 1/2 டம்ளர் தண்ணீர், 2 ஸ்பூன் பேக்கிங் சோடா, வாசம் நிறைந்த கம்போர்ட் 1 ஸ்பூன், பல் தேய்க்கும் பேஸ்ட் – 1/2 ஸ்பூன். இந்த பொருட்களை எல்லாம் போட்டு நன்றாக அடித்து கலந்தால் வெள்ளை நிறத்தில் உங்களுக்கு ஒரு லிக்விட் கிடைத்திருக்கும். இதை தான் நாம் அழுக்கு படிந்த மெத்தை, சோபாவை சுத்தம் செய்வதற்கு பயன்படுத்த போகின்றோம்.

- Advertisement -

இந்த லிக்விடை ஒரு காட்டன் துணியில் நனைத்து கொள்ளுங்கள். வெள்ளை நிறத்தில் இருக்கும் காட்டன் வேட்டி, அப்படி இல்லை என்றால் வெள்ளை நிறத்தில் இருக்கும் பனியன் துணியை இதற்கு பயன்படுத்தினால் நல்ல ரிசல்ட் கிடைக்கும். துணியை இந்த லிக்விடில் நன்றாக முக்கி எடுத்து, பிழிந்து கொள்ளுங்கள். ஈரமாக இருக்கும் அந்த துணியை மெத்தை மேலே வைத்து நன்றாக துடைத்து எடுத்தால் மெத்தையில் இருக்கு அழுக்கு மொத்தமும் அந்த வெள்ளைத் துணியில் ஒட்டி வரும். அதை நீங்கள் கண்கூடாகவே பார்க்கலாம்.

வெயில் சமயத்தில் நம் உடம்பிலிருந்து வெளியேறக்கூடிய வியர்வை, அழுக்கு மொத்தம் அந்த கட்டிலில் படிந்து துர்நாற்றம் வீசும். அந்த துர்நாற்றத்தைக் கூட இந்த லிக்விட் நீக்கிவிடும் என்பது குறிப்பிடத்தக்கது. இதே போல தான் உங்கள் வீட்டில் இருக்கும் சோபாவையும் இதே லிக்விடை வைத்து சுத்தம் செய்து கொள்ளுங்கள். பெட்டை எப்படி காட்டன் துணியை வைத்து துடைத்து எடுத்தீர்களோ அதே போல தான், காட்டன் துணியை இந்த லிக்விடில் முக்கி நன்றாக பிழிந்து சோபாவையும் துடைத்து எடுத்து விடுங்கள்.

- Advertisement -

அதன் பின்பு ஒரு சிறிய கிண்ணத்தில் அழுக்கு இல்லாத நல்ல தண்ணீரை எடுத்து, அதில் 1/2 ஸ்பூன் கம்ஃபோர்ட் மட்டுமே ஊற்றி, அந்த தண்ணீரில் சுத்தமான காய்ந்த வெள்ளைத் துணியை நனைத்து, மீண்டும் இந்த துணியால் மெத்தையை துடைத்து எடுத்து விட வேண்டும். அவ்வளவுதான். உங்களுடைய மெத்தை பளிச் பளிச்சென மாறிவிடும். மேலே இருந்த அழுக்கு துர்நாற்றம் எல்லாம் நீங்கி இருக்கும். நன்றாக வெயில் அடிக்கும் சமயத்தில் இதை செய்துவிட்டு ஃபேன் போட்டு விடுங்கள். காற்றில் மெத்தையில் இருக்கும் கொஞ்ச நஞ்ச ஈரமும் நன்றாக காய்ந்து விடும். அதன் பிறகு துவைத்த விரிப்பை மெத்தையின் மேலே விரித்து தூங்கி பாருங்கள். நிச்சயம் உங்களுக்கு சுத்தம் செய்ததில் மனநிறைவு இருக்கும்.

இதையும் படிக்கலாமே: சமையலறையில் இரவு விளக்கை அணைத்த பின்பு, ஒரு பல்லி, ஒரு கரப்பான் பூச்சி நடமாட்டம் கூட இருக்காது. இந்த 2 பொருளை இப்படி வைத்தால்.

சில பேர் வீடுகளில் மெத்தையில் எப்போதும் எரும்பு தொந்தரவு இருக்கும். அப்படி உங்களுடைய வீட்டில் மெத்தையில் எரும்பு இருந்தால், மெத்தையை சுற்றி முகத்திற்கு போடும் பவுடரை தூவி விட்டு அதன் மேல் பெட்சீட்டை போட்டு உறங்குங்கள். எரும்புத்தொல்லை வரவே வராது. இந்த எளிமையான வீட்டு குறிப்பு பிடித்திருந்தால் முயற்சி செய்து பார்க்கவும்.

- Advertisement -