சமையலறையில் இரவு விளக்கை அணைத்த பின்பு, ஒரு பல்லி, ஒரு கரப்பான் பூச்சி நடமாட்டம் கூட இருக்காது. இந்த 2 பொருளை இப்படி வைத்தால்.

palli
- Advertisement -

இரவு நேரத்தில் சமையல் அறையில் விளக்குகளை அணைத்தால் போதும். பல்லிகளின் ஆட்டமும் கரப்பான் பூச்சியின் ஆட்டமும் தொடங்கிவிடும். சமையலறையில் ஜன்னல் பக்கத்தில் இருக்கக்கூடிய பல்லிகள் நடமாட்டத்தை குறைப்பது அவ்வளவு எளிதான காரியம் அல்ல. இந்த பல்லி கரப்பான் பூச்சி பிரச்சனையிலிருந்து சுலபமாக தப்பிக்க ஒரு எளிமையான வீட்டு குறிப்பு தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ள போகின்றோம். இதை தொடர்ந்து பயன்படுத்தி வந்தால் நிச்சயமாக பல்லி நடமாட்டமும் கரப்பான் பூச்சிகளின் அட்டகாசமும் குறையும்.

பல்லி கருப்பான் பூச்சி தொல்லையிலிருந்து தப்பிக்க:
இந்த குறிப்புக்கு நாம் பயன்படுத்த போகும் அந்த இரண்டு பொருள் என்ன தெரியுமா? பூச்சுருண்டை (ரச கற்பூரம்) என்று சொல்லுவார்கள் அல்லவா. அதுவும் பெரிய வெங்காயமும் தான். பூச்சி உருண்டையை எடுத்து ஒரு கல்லை வைத்து இடித்து நைசாக தூள் செய்து வைத்துக் கொள்ளுங்கள். வெங்காயத்தை எடுத்து சின்ன சின்ன துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

நறுக்கிய வெங்காயத்தை இந்த பூச்சுருண்டை தூளில் நன்றாக பிரட்டி ஒரு சின்ன பிளாஸ்டிக் டப்பாவில் திறந்தபடி வைத்து அப்படியே பல்லி நடமாட்டம் உள்ள இடத்தில் வைத்து விடுங்கள். இதே போல தயார் செய்த வெங்காயங்களை எல்லாம் ஜன்னல் பக்கத்திலும் வைத்து விட வேண்டும். ஸ்டவ்வுக்கு கீழே, சிலிண்டருக்கு கீழே, சிங்குக்கு கீழே, பீரோவுக்கு கீழே, இப்படி எல்லா இடங்களிலும் தயார் செய்த வெங்காயத்தை வையுங்கள். அந்த இடத்தில் இருக்கும் பல்லிகள் நடமாட்டம் குறையும். கரப்பான் பூச்சி தொல்லையும் குறையும். இதில் வாசம் குறைந்து விட்டால் மீண்டும் மாற்றி வைக்க வேண்டும்.

இரவு பூச்சிகள் நம்முடைய வீட்டு ஜன்னல் கதவுகளில் வந்து அமரும். வெளியே இருட்டாக இருக்கும். வீட்டிற்குள் இருக்கும் வெளிச்சத்தை தேடி சின்ன சின்ன பறக்கும் பூச்சிகள் வரும் அல்லவா. அந்த சின்ன சின்ன பூச்சிகளை சாப்பிடுவதற்கு தான் இந்த பல்லிகள் ஜன்னல் ஓரத்தில் வரத் தொடங்கி, அப்படியே நம்முடைய வீட்டிற்குள் வந்துவிடும்.

- Advertisement -

அதேபோல உங்களுடைய வீட்டில் இந்த சின்ன சின்ன பூச்சிகள் வந்து மேலே சீலிங்கில் தங்காமல் இருக்கவும், ஜன்னலில் அடித்து வைத்திருக்கும் வலைகளில் வந்து தங்காமல் இருக்கவும், ஒரு ஐடியா உள்ளது. ஒரு ஸ்பிரே பாட்டிலில் 1/2 கப் அளவு தண்ணீர், 1/2 கப் அளவு வினிகர் ஊற்றி, ஒன்றாக கலந்து கொள்ளுங்கள். இப்போது இந்த கலவையை அப்படியே ஜன்னல் வலைகளில் ஸ்பிரே செய்து விட்டால் இரவு சின்ன சின்ன கொசுக்கள் பூச்சிகள் வலையில் வந்து அமராது. இந்த பூச்சிகளை சாப்பிட பல்லியும் வராமல் இருக்கும்.

இதையும் படிக்கலாமே: இனி நாள் முழுக்க ஏசி ஓடினாக் கூட கரண்ட் பில் ஏகிறாமல் இருக்க இந்த ஒரு ட்ரிக்ஸ் மட்டும் தெரிஞ்சு வச்சுக்கிட்டா போதும். இப்ப கட்டற கரண்ட் பில்லுல கால்வாசி கூட வராதுன்னா பாருங்களேன்.

அதேபோல நம்முடைய வீட்டிற்கு உள்ளே மேலே சீலிங்கில் மூளை முடுக்குகளில் கொசு வந்து அமரும். டியூப்லெட்டுக்கு பக்கத்தில் கூட இப்படி நிறைய கொசுக்கள் வந்து தங்கும். அடிக்கடி ஒட்டடை பிடிக்கும். அந்த இடத்திலும் இந்த ஸ்பிரேவை அடித்து விடுங்கள். ஒட்டடை சிலந்தி பூச்சி கொசுக்கள் எல்லாம் அவ்வளவு எளிதில் அந்த இடத்தில் தங்காது. அதாவது இந்த வினிகரின் வாசம் இருக்கும் வரை பூச்சி தொல்லையில் இருந்து தப்பிக்கலாம். வாரத்திற்கு ஒரு முறை இதை பின்பற்றி வந்தாலே உங்களுடைய வீடு சுத்தமாகவும் ஆரோக்கியமாகவும் இருக்கும். எளிமையான இந்த வீட்டு குறிப்பு பிடித்தவர்கள் முயற்சி செய்து பார்த்து பலன் பெறலாம்.

- Advertisement -