பீட்ரூட் பிரியாணி செய்முறை

beetroot briyani recipe
- Advertisement -

பிரியாணி என்றாலே அனைவருக்கும் வாயில் எச்சில் ஊரும் இதில் சிறியவர் பெரியவர் என்று எந்த பாகுபாடும் கிடையாது. ஆனால் அந்த பிரியாணி சிக்கன் மட்டன் போன்றவற்றில் செய்ததாக இருக்க வேண்டும். அசைவத்தில் செய்யும் பிரியாணிக்கு இருக்கும் மவுசு சைவத்தில் செய்யும் பிரியாணிக்கு கிடையாது. சைவம் அந்த அளவிற்கு சுவையாக இருக்காது என்பது அனைவரின் கருத்து.

இந்த சமையல் குறிப்பு பதிவில் பீட்ரூட்டை வைத்து ஒரு அருமையான பிரியாணி ரெசிபி எப்படி செய்வது என்று தான் பார்க்கப் போகிறோம். பீட்ரூட் என்றாலே ஓடி விடுவார்களே இதில் பிரியாணி வேறா என்று நீங்கள் யோசிக்கலாம். ஒரு முறை இதை செய்து கொடுத்துப் பாருங்கள். பீட்ரூட் வேண்டாம் என்று சொல்பவர்கள் கூட கேட்டு வாங்கி சாப்பிடுவார்கள். ஆரோக்கியமாக சாப்பிட வேண்டும் என நினைப்பவர்களுக்கு அருமையான ரெசிபி என்றால் அது இந்த பீட்ரூட் பிரியாணி தான். வாங்க இப்போ அது எப்படி செய்யறதுன்னு பார்க்கலாம்.

- Advertisement -

தேவையான பொருட்கள்

பீட்ரூட் -2,
பாஸ்மதி ரைஸ் -1 கப்
பச்சை மிளகாய் – 2
தக்காளி – 2,
வெங்காயம் – 2
நெய் -2 டேபிள் ஸ்பூன்,
எண்ணெய் – 2 டீஸ்பூன்,
மஞ்சள் தூள் – 1/2 டீஸ்பூன்,
மிளகாய்த்தூள் -1 டீஸ்பூன்,
சோம்பு -1/2 டீஸ்பூன்,
கறிவேப்பிலை – 1 கொத்து,
புதினா -1கைப்பிடி,
கொத்தமல்லி -1கைப்பிடி,
உப்பு -1/4 டீஸ்பூன்,
எலுமிச்சை பழம் – 1/2,
பிரியாணி இலை, பட்டை, கிராம்பு, ஏலக்காய் – தலா 2

செய்முறை

இந்த பிரியாணி செய்ய முதலில் பாஸ்மதி அரிசியை சுத்தம் செய்து தண்ணீர் ஊற்றி அரை மணி நேரம் நன்றாக ஊற வைத்துக் கொள்ளுங்கள். பீட்ரூட்டை தோல் சீவி துருவலில் துருவி எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். அதே போல் வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாயை நீளவாக்கில் நறுக்கி வைத்துக் கொள்ளுங்கள். இப்பொழுது பிரியாணி தாளித்து விடலாம்.

- Advertisement -

அடுப்பில் குக்கர் வைத்து சூடானவுடன் எண்ணெய் மற்றும் நெய் ஊற்றி காய விடுங்கள். அதன் பிறகு பட்டை, கிராம்பு, ஏலக்காய், பிரியாணி இலை, சோம்பு அனைத்தையும் சேர்த்து நன்றாக பொரிய விட வேண்டும். அதன் பிறகு நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து வெங்காயம் பொன்னிறமாகும் வரை வதக்க வேண்டும்.

வெங்காயம் பொன்னிறமாக வந்தவுடன் இஞ்சி பூண்டு விழுதை சேர்த்து அதன் பச்சை வாடை போன பிறகு பச்சை மிளகாய், தக்காளி, கறிவேப்பிலை சேர்த்து நன்றாக வதக்கிக் கொள்ளுங்கள். தக்காளி குழைந்து வந்த பிறகு துருவி வைத்த பீட்ரூட்டை சேர்த்து அதுவும் பச்சை வாடை போகும் நன்றாக வரை வதக்கி கொள்ளுங்கள்.

- Advertisement -

அதன் பிறகு மஞ்சள் தூள், உப்பு, மிளகாய் தூள், கொத்தமல்லி, புதினா அனைத்தையும் சேர்த்து ஒரு முறை நன்றாக வதக்கிய பிறகு ஒரு கப் அரிசிக்கு 11/2 கப் அளவு தண்ணீர் ஊற்றி தண்ணீர் கொதி வரும் வரை காத்திருங்கள். அதன் பிறகு ஊற வைத்த அரிசியை தண்ணீர் இல்லாமல் வடித்த பிறகு குக்கரில் சேர்த்து எலுமிச்சை சாறு பிழிந்து விட்டு குக்கரை மூடி விடுங்கள்.

இதையும் படிக்கலாமே: பலாப்பழ பணியாரம்

குக்கர் இரண்டு விசில் வந்த பிறகு அடுப்பை அணைத்து விட்டு விசில் முழுவதுமாக இறங்கிய பிறகு குக்கரை திறந்து பாருங்கள். நல்ல கம கமவென்ற வாசனையுடனும், நல்ல நிறத்துடனும் பீட்ரூட் பிரியாணி அட்டகாசமாக தயாராகி இருக்கும்.

- Advertisement -