வெறும் 7 நாட்களில் வெட்டி வைத்த ஆப்பிள் போல உங்களுடைய கன்னங்கள் மாற வேண்டுமா? அழகான பிங்க் நிறத்தை கொடுக்கும் பீட்ரூட் ஃபேஸ் பேக்.

beetroot2
- Advertisement -

அழகான பிங்க் நிற சருமத்தை பெறுவதற்கு ஒரு எளிமையான அழகு குறிப்பை தான் இன்று நாம் பார்க்கப் போகின்றோம். ஹாஸ்டலில் தங்கி படிப்பவர்கள், வேலை செய்பவர்களுக்கு கூட இந்த குறிப்பு எளிமையாக இருக்கும். வீட்டில் இருந்தே இதை நாம் தயார் செய்து, ஒரு பாட்டிலில் போட்டு எடுத்து சென்றால் தேவைப்படும்போது எடுத்து பயன்படுத்திக் கொள்ளலாம். முகத்தில் இருக்கும் சரும பிரச்சனை அனைத்திற்கும் முற்றுப்புள்ளி வைக்கும் ஒரு பாத்திங் பவுடர் தயார் செய்வது எப்படி. பதிவுக்குள் சென்று பார்ப்போம் வாருங்கள்.

பீட்ரூட் பாத் பவுடர்:
இதை தயாரிக்க நமக்கு அரிசி மாவு 1/2 கப், கடலை மாவு 1/2 கப், பீட்ரூட் சாறு 1/2 கப் தேவை. பீட்ரூட்டை கழுவி விட்டு, தோல் சீவி விட்டு துருவி மிக்ஸி ஜாரில் போட்டு அரைத்து, மிகவும் திக்காக பீட்ரூட் சாறு எடுத்துக் கொள்ள வேண்டும். ரொம்பவும் தண்ணியாக பீட்ரூட் சாறு எடுக்கக் கூடாது.

- Advertisement -

அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்துக் கொள்ளவும். குழம்பு வைத்த பாத்திரம் எல்லாம் வைக்காதீங்க. அதிலிருந்து காரம் வரும். காரம் சமைக்காத பாத்திரமாக அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து, அதில் அரிசி மாவு, கடலை மாவை, போட்டு ஒரு நிமிடம் போல சூடு செய்து கொள்ளுங்கள். பிறகு இந்த மாவில் நாம் எடுத்து வைத்திருக்கும் பீட்ரூட் ஜூஸை கொஞ்சம் கொஞ்சமாக ஊற்றி கட்டிகள் இல்லாமல் ஒரு கரண்டியை வைத்து கலந்து விட வேண்டும். (எல்லா ஜூஸையும் ஒன்றாக ஊற்ற வேண்டாம் கொஞ்சம் கொஞ்சமாக ஊற்றினால் போதும்.)

எல்லா பீட்ரூட் ஜூஸும் மாவில் ஊற்றி, மாவு நன்றாக கலந்து வந்த உடன் அடுப்பை அணைத்துவிட்டு, இந்த மாவை நன்றாக ஆற வைத்து விடுங்கள். அப்ப கூட லேசாக சின்ன சின்ன கட்டிகள் இருக்கும். ஆகவே ஆறிய இந்த மாவை மிக்சியில் போட்டு ஒரு ஓட்டு ஓட்டி எடுத்தால் பிங்க் நிறத்தில் பீட்ரூட் பவுடர் தயாராக கிடைத்திருக்கும். இதை ஒரு பிளாஸ்டிக் கண்டைனர் அல்லது கண்ணாடி பாட்டிலில் போட்டு ஸ்டோர் செய்து வைத்துக் கொள்ளுங்கள். இதுதான் நமக்கு தேவையான பாத்திங் பவுடர். இதை எப்படி எல்லாம் பயன்படுத்தலாம் என்று இப்போது பார்க்கலாம்.

- Advertisement -

வெறும் இந்த பாத்திங் பவுடரை தேவையான அளவு ஒரு கிண்ணத்தில் போட்டு, வெறும் தண்ணீரை ஊற்றி உடல் முழுவதும் தேய்த்து குளித்தாலும் சரி, அல்லது முகத்தில் ஃபேஸ் பேக் போட்டு 10 நிமிடம் கழித்து தேய்த்து குளித்தாலும் சரி. அப்படி இல்லை என்றால் இந்த குளியல் பொடியோடு கொஞ்சமாக வெட்டிவேர் பொடி, முல்தானி மெட்டி பொடி, இப்படி வாசம் நிறைந்த பொடியை போட்டு பால், தயிர், ரோஸ் வாட்டர் இவைகளை ஊற்றி கலந்து உடல் முழுவதும் தேய்த்து குளித்தாலும் உங்கள் உடம்பு அவ்வளவு பொலிவாக, அவ்வளவு வாசமாக மாறிவிடும்.

இப்படி செய்வதன் மூலம், சென்ட் போட வேண்டும் என்ற அவசியமே இருக்காது. வியர்வை துர்நாற்றம் சுத்தமாக வீசாது. கொஞ்சமாக இந்த அரிசி மாவை ஒரு கிண்ணத்தில் போட்டு ரோஸ் வாட்டர் ஊற்றி, கலந்து முகத்தில் ஃபேஸ் பேக் ஆகவும் போட்டுக் கொள்ளலாம்.

இதையும் படிக்கலாமே: ஒரு கைப்பிடி அளவு கொய்யா இலை இருந்தால் போதும். நீங்கள் மேக்கப் போட வேண்டிய தேவையே இல்லாத அளவிற்கு முகம் தேவதை போல ஜொலிக்கும்.

உங்களுக்கு எப்படி எல்லாம் இந்த பொடியை பயன்படுத்த வேண்டும் என்று தோணுதோ அப்படி நீங்கள் பயன்படுத்திக் கொள்ளலாம். பிரிட்ஜில் வைத்தால் 3 மாசம் கூட இந்த பொடி கெட்டுப்போகாது என்பது குறிப்பிடத்தக்க ஒரு விஷயம். அழகின் மீது ஆர்வம் உள்ளவர்கள் இந்த அழகு குறிப்பு பின்பற்றி பலன் பெரலாம் என்ற தகவலோடு இன்றைய பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -