- Advertisement -
Homeசமையல் குறிப்புகள்பீட்ரூட் பொரியலை இப்படி மட்டும் செஞ்சு பாருங்க! யாருமே வேணான்னு சொல்லவே மாட்டாங்க. இன்னும் வேணும்...

பீட்ரூட் பொரியலை இப்படி மட்டும் செஞ்சு பாருங்க! யாருமே வேணான்னு சொல்லவே மாட்டாங்க. இன்னும் வேணும் வேணும்னு விரும்பி தான் சாப்பிடுவாங்க.

- Advertisement -

பீட்ரூட் பொரியல் என்று சொன்னாலே நிறைய பேருக்கு சுத்தமாக பிடிக்காது. இன்று மதியம் சாப்பாட்டுக்கு பீட்ரூட் பொரியலா. எனக்கு சாப்பாடு வேண்டாம், என்று தான் சொல்வார்கள். ஆனால் உடலுக்கு தேவையான ரத்தத்தின் அளவை அதிகப்படுத்த இந்த பீட்ரூட்டுக்கு முதலிடம் உண்டு என்று சொன்னால் அது மிகையாகாது. ஆரோக்கியம் தரக்கூடிய இந்த பீட்ரூட் பொரியல் மிக மிக சுவையாக செய்வது எப்படி. தெரிந்து கொள்வோம் வாருங்கள்.

beetroot1

அடுப்பில் ஒரு கடாயை வைத்துக்கொள்ளுங்கள். அதில் ஒரு ஸ்பூன் அளவு எண்ணெயை ஊற்றிக் கொள்ள வேண்டும். எண்ணெய் காய்ந்ததும் வரமிளகாய் – 2, வரமல்லி – 1 ஸ்பூன், சீரகம் – 1 ஸ்பூன், வேர்க்கடலை – 4 டேபிள்ஸ்பூன், இந்த எல்லாப் பொருட்களையும் சேர்த்து பொன்னிறமாக வறுத்து எடுத்துக் கொள்ள வேண்டும். வறுத்த பொருட்கள் நன்றாக ஆறியதும் மிக்ஸியில் போட்டு கொரகொரப்பாக  அரைக்க வேண்டும். இந்த மசாலா பொடி 90% அறைபட்டால் போதும். இந்த மசாலா பொடி அப்படியே இருக்கட்டும்.

- Advertisement -

அடுத்தபடியாக 3 மீடியம் சைஸ் பீட்ரூட்டை எடுத்து தோல் சீவி பொடியாக நறுக்கி வைத்துக்கொள்ளுங்கள். பீட்ரூட்டின் அளவு 500 கிராம் அளவு இருக்கும். 1 பெரிய வெங்காயத்தை எடுத்து பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளுங்கள். தேங்காயை இரண்டு கைப்பிடி அளவு துருவி எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும்.

Beetroot

இப்போது பீட்ரூட் பொரியல் செய்ய ஆரம்பித்து விடுவோம். அடுப்பில் ஒரு கடாயை வைத்து 2 ஸ்பூன் எண்ணெய் ஊற்றி, எண்ணெய் காய்ந்ததும் அதில் கடுகு – 1/2 ஸ்பூன், கடலைப்பருப்பு – 1 ஸ்பூன், உளுந்தம்பருப்பு – 1ஸ்பூன், கறிவேப்பிலை – 1 கொத்து, பொடியாக நறுக்கிய வெங்காயம் – 1, இவைகளை சேர்த்து வதக்க வேண்டும்.

- Advertisement -

வெங்காயம் 2 நிமிடங்கள் வரை வதங்கினால் போதும். அடுத்து வெட்டி வைத்திருக்கும் பீட்ரூட் துண்டுகளை கடாயில் சேர்த்து லேசாக தண்ணீர் தெளித்து தேவையான அளவு உப்புத் தூளைத் தூவி ஒரு மூடி போட்டு, பீட்ரூட்டை வேக வையுங்கள். பீட்ரூட்டில் தெளித்த தண்ணீர் சுண்டி பீட்ரூட் நன்றாக வெந்திருந்திருக்க வேண்டும். (அதேசமயம் பீட்ரூட்டை குழைய வேக வைத்து விடக்கூடாது. பீட்ரூட் பொரியலில் சுவை வராது.)

beetroot2

பீட்ரூட் வெந்ததும் துருவி வைத்திருக்கும் தேங்காய் துருவலை பீட்ரூட்டின் மேலே தூவி, ஒரு நிமிடம் வரை வதக்கவேண்டும். இறுதியாக பொடி செய்து வைத்திருக்கும் மசாலா பொடியை மேலே தூவி மீண்டும் இரண்டு நிமிடங்கள் பீட்ரூட் பொரியலை வதக்கி அடுப்பை அணைத்து விட்டால் போதும். சுட சுட வித்தியாசமான பீட்ரூட் பொரியல் தயார். சாதத்திற்கு குழம்பு ரசம் கூட தேவையில்லை. வெள்ளை சாதத்தில் இந்த பொரியலைப் பிசைந்து சாப்பிட்டால் அட்டகாசமாக இருக்கும். ட்ரை பண்ணி பாருங்க.

சற்று முன்