- Advertisement -
Homeசமையல் குறிப்புகள்குக்கரில் ஒரு விசில் வைத்தால் போதும். இந்த பீட்ருட் வறுவல் தயாரராகிவிடும். இப்படி ஒரு முறை...

குக்கரில் ஒரு விசில் வைத்தால் போதும். இந்த பீட்ருட் வறுவல் தயாரராகிவிடும். இப்படி ஒரு முறை செய்து சுவைத்துப் பாருங்கள். மிகவும் அருமையாக இருக்கும்

- Advertisement -

காய்கறி என்றாலே குழந்தைகள் வெறுத்து ஒதுக்குவது இயல்புதான். நாம் என்னதான் குழம்பாக செய்து கொடுத்தாலும், கலவை சாதமாக செய்து கொடுத்தாலும் அதில் உள்ள காய்கறிகளை மட்டும் தனியாக பிரித்து வைத்து சாப்பிடுவார்கள். இப்படி குழந்தைகளும் விருப்பமாக சாப்பிடும் வகையில் எப்படித்தான் சமைத்துக் கொடுப்பது என்று பலருக்கும் யோசனையாகவே இருக்கும். இப்படி குழந்தைகள் காய்கறி சாப்பிடாமல் இருப்பதற்க்கே இவ்வளவு யோசிக்கும் தாய்மார்கள் வீட்டில் உள்ள மற்றவர்களும் வெறுத்து ஒதுக்கும் ஒரு காய்கறி என்றால் அது பீட்ரூட் தான். இதனை பலரும் விரும்பி சுவைப்பது கிடையாது. ஆனால் இதில் உடம்பிற்கு தேவையான பல ஆரோக்கியமான விஷயங்கள் இருக்கின்றன. இதனை வாரத்திற்கு ஒரு முறையாவது உணவுடன் சேர்த்துக் கொள்ள வேண்டும். இப்படி ஊட்டச்சத்து அதிகம் நிறைந்த இந்த பீட்ரூட்டை எவ்வாறு செய்தால் வீட்டில் உள்ளவர்கள் விருப்பமாக சாப்பிடுவார்களோ அது போல சுவையாக செய்வது எப்படி என்று தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

தேவையான பொருட்கள்:
பீட்ரூட் – அரை கிலோ, பெரிய வெங்காயம் – 1, தக்காளி – 1, மிளகாய்த் தூள் – ஒன்றரை ஸ்பூன், மஞ்சள்தூள் – கால் ஸ்பூன், உப்பு – முக்கால் ஸ்பூன், பூண்டு – 3 பல், கடுகு – அரை ஸ்பூன், சீரகம் – அரை ஸ்பூன், எண்ணெய் – 3 ஸ்பூன், கருவேப்பிலை – ஒரு கொத்து, கொத்தமல்லித்தழை – ஒரு கொத்து.

- Advertisement -

செய்முறை:
முதலில் அரை கிலோ பீட்ரூட்டை தோல் நீக்கி பொடியாக நறுக்கி கொள்ள வேண்டும். பிறகு வெங்காயம், தக்காளியை சிறு துண்டுகளாக நறுக்கி வைக்க வேண்டும். பின்னர் ஒரு குக்கரை எடுத்துக்கொண்டு, அதில் நறுக்கி வைத்துள்ள பீட்ரூட், வெங்காயம் மற்றும் தக்காளியை சேர்க்க வேண்டும்.

பின்னர் இவற்றுடன் கால் ஸ்பூன் மஞ்சள் தூள், ஒன்றரை ஸ்பூன் மிளகாய்த் தூள் மற்றும் முக்கால் ஸ்பூன் உப்பு சேர்த்து நன்றாக கலந்து விட வேண்டும். பின்னர் இதனுடன் கால் டம்ளர் தண்ணீர் சேர்த்து கலந்து விட வேண்டும்.

- Advertisement -

ஏனென்றால் பீட்ரூட் வேகும் பொழுது அதிலிருந்து தண்ணீர் அதிகமாக வரும். எனவே தண்ணீரின் அளவை குறைவாக வைக்க வேண்டும். பிறகு குக்கரை மூடி, விசில் போட்டு, அடுப்பின் மீது வைக்க வேண்டும். பிறகு குக்கரில் ஒரு விசில் வந்ததும் அடுப்பை அனைத்துவிட வேண்டும்.

பின்னர் குக்கரில் பிரஷர் குறைந்ததும் குக்கர் மூடியைத் திறந்து, பீட்ரூட்டை நன்றாகக் கலந்து விட வேண்டும். பிறகு அடுப்பை பற்ற வைத்து, ஒரு கடாயை வைத்து எண்ணெய் ஊற்ற வேண்டும். எண்ணெய் நன்றாகக் காய்ந்ததும் கடுகு, சீரகம், கறிவேப்பிலை சேர்த்து தாளிக்க வேண்டும். பிறகு மூன்று பல் பூண்டை தட்டி சேர்த்து வதக்க வேண்டும். அதன் பின் வேக வைத்த பீட்ரூட் சேர்த்து நன்றாக கொதிக்க விடவேண்டும். வீட்டில் இருக்கும் தண்ணீர் வற்றி, நன்றாக சுருண்டு வரும் வரை வதக்கி விட்டு, அடுப்பை அனைத்துவிட வேண்டும்.

சற்று முன்