- Advertisement -
Homeசமையல் குறிப்புகள்ஸ்டார் ஹோட்டலுக்கு போனா கூட இப்படி ஒரு உருளைக்கிழங்கு வறுவல் கிடைக்கவே கிடைக்காது. முற்றிலும் வித்தியாசமான...

ஸ்டார் ஹோட்டலுக்கு போனா கூட இப்படி ஒரு உருளைக்கிழங்கு வறுவல் கிடைக்கவே கிடைக்காது. முற்றிலும் வித்தியாசமான பெல்லாரி உருளைக்கிழங்கு வறுவல் ரெசிபி இதோ உங்களுக்காக.

- Advertisement -

உருளைக்கிழங்கு என்றால் எல்லோருக்கும் ரொம்ப பிடிக்கும். ஆனால், உருளைக்கிழங்கை வைத்து வித்தியாசமாக எதுவும் சமைத்து சாப்பிட மாட்டோம். உருளைக்கிழங்கு வறுவல், குருமா, சிப்ஸ், இப்படித்தான் சாப்பிடுவோம். ஆனால் வழக்கத்தை விட முற்றிலும் வித்தியாசமான ஒரு சுவையில் உருளைக்கிழங்கு வறுவல் எப்படி செய்வது என்பதை பற்றி தான் இந்த சமையல் குறிப்பு பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். இதை பெல்லாரி உருளைக்கிழங்கு வருவல் என்று சொல்லுவார்கள்.

செய்முறை

300 கிராம் அளவு உருளைக்கிழங்கை எடுத்து தோல் சீவி க்யூப் வடிவில் வெட்டி தண்ணீரில் போட்டு கழுவி தனியாக எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். தண்ணீரை வடித்து உருளைக்கிழங்குகளை எடுத்துக் கொள்ள வேண்டும். அதில் கொஞ்சமாக கான்பிளவர் மாவை தூவி பிசைந்து வைத்துக்கொள்ள வேண்டும். (உங்கள் வீட்டில் கான்பிளவர் மாவு இல்லை என்றால் வெறும் உருளைக்கிழங்கை கூட வறுத்தி எடுத்துக் கொள்ளலாம்).

- Advertisement -

அடுப்பில் ஒரு கடாயை வைத்து 5 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி, இந்த உருளைக்கிழங்குகளை அந்த எண்ணெயில் போட்டு, கொஞ்சமாக உப்பு தூள் தூவி, பொன்னிறமாக வறுத்து தனியாக எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். உருளைக்கிழங்கு சாப்பிடும் பக்குவத்திற்கு வெந்து விட வேண்டும். (ஆனால் உருளைக்கிழங்கு ரொம்பவும் குழைந்து போகக்கூடாது. மேலே மொறுமொறுப்பாக வறுபட்டு கிடைக்க வேண்டும்.) இந்த உருளைக்கிழங்கை கடாயில் இருந்து எண்ணெயை வடித்து எடுத்து தனியாக ஒரு தட்டில் வைத்துக் கொள்ளுங்கள்.

அடுத்து ஒரு மிக்ஸி ஜாரை எடுத்து பச்சை மிளகாய் – 3, வரமிளகாய் – 2, கருவேப்பிலை – 2 கொத்து, தோல் உரித்த பூண்டு பல் – 4, இஞ்சி தோல் சீவியது – 1 இன்ச், சோம்பு – 1 ஸ்பூன், போட்டு தண்ணீர் ஊற்றாமல் இதை கொறகொறப்பாக அரைத்து தனியாக எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும். இதுவும் அப்படியே இருக்கட்டும்.

- Advertisement -

ஏற்கனவே உருளைக்கிழங்கு வறுத்தோம் அல்லவா. அந்த கடாயில் எண்ணெய் மீதம் இருக்கும் அல்லவா. அதில் தேவைப்பட்டால் இன்னும் கொஞ்சம் எண்ணெய் ஊற்றி, மிக்ஸி ஜாரில் அரைத்து வைத்திருக்கும் மசாலா விழுதை போட்டு, மஞ்சள் தூள் – 1/4 ஸ்பூன், மல்லித்தூள் – 1/2 ஸ்பூன், போட்டு 2 நிமிடம் போல, மசாலா பச்சை வாடை போக, வதக்கி விட்டு வறுத்து வைத்திருக்கும் உருளைக்கிழங்கை இந்த கடாயில் கொட்டி, கலந்து 2 நிமிடம், வறுத்து விட்டு, மிளகுத்தூள் – 1/2 ஸ்பூன் இதன் மேலே தூவி, தேவையான அளவு – உப்பு தூவி, 2 ஸ்பூன் தேங்காய் துருவல் தூவி, எல்லாவற்றையும் ஒன்றாக கலந்து அடுப்பை அணைத்தால், சூப்பரான உருளைக்கிழங்கு வருவல் வித்தியாசமான சுவையில் தயாராகி இருக்கும்.

இதையும் படிக்கலாமே: பிரியாணியே தோத்து போற அளவுக்கு இந்த டிஷ், செம டேஸ்டா இருக்கும். இதை முறை செஞ்சிட்டீங்கன்னா, அடிக்கடி இதையே செய்ய சொல்லி கேட்பார்கள்.

குறிப்பாக புளி சாதம், லெமன் சாதம், தயிர் சாதம், ரசம் சாதத்திற்கு, தொட்டு சாப்பிட செம சைடிஷ் இது. லஞ்ச் பாக்ஸுக்கு சைட்டிஷிஷாக கட்டிக் கொடுக்கலாம். ட்ரை பண்ணி பாருங்க.

சற்று முன்