இவர்தான் சிறந்த கிரிக்கெட்டர். இவர் கிரிக்கெட் விளையாடும் போட்டிகளை மைதானத்தில் நான் காசு கொடுத்து கூட பார்க்க தயார் – வாசிம் ஜாபர் பேட்டி

Jaffer

இந்திய அணியின் டெஸ்ட் கிரிக்கெட்டில் சேவாக் உடன் 2000 ஆம் ஆண்டில் தென்னாபிரிக்க அணிக்கு எதிராக அறிமுகம் ஆனவர் வாசிம் ஜாபர். இந்திய அணிக்காக இதுவரை 31 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி உள்ள வாசிம் ஜாபர் 5 சதங்களை அடித்துள்ளார்.

Wasim

40 வயதாகும் இவர் சில வாரங்களுக்கு முன்பு நடைபெற்ற ரஞ்சி போட்டியில் இரட்டைசதம் அடித்து அசத்தினார். இந்நிலையில் அவர் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலியின் பேட்டிங் குறித்து பிரத்யேக பேட்டி ஒன்றினை தொலைக்காட்சியில் அளித்துள்ளார்.

அதில் ஜாபர் கூறியதாவது : தற்போதைய கிரிக்கெட்டில் இந்திய அணியின் விராட் கோலியே சிறந்த வீரர். இவரது ஆட்டத்தினை ரசிக்க மிகப்பெரிய ரசிகர் பட்டாளம் உண்டு. இந்தியாவில் எந்த மைதானத்தில் நான் கிரிக்கெட் போட்டியை காண எனக்கு இலவச அனுமதி உண்டு. இருப்பினும், நான் விராட் கோலி ஆடும் போட்டிகளில் காசு கொடுத்து கூட பார்க்க தயார் என்று கூறினார்.

koli

பல சாதனைகளை தன்வசம் வைத்துள்ள கோலி சச்சினின் சாதனை மட்டுமின்றி அனைத்து கிரிக்கெட் வீரர்களின் சாதனைகளையும் ஒவ்வொன்றாக முறியடித்து வருகிறார்.

இதையும் படிக்கலாமே :

காதலர் தினத்தை நியூவா-வில் கொண்டாடிய விராட் அனுஷ்கா காதல் ஜோடி. நியூவா எங்கு உள்ளது தெரியுமா ? அதன் ஸ்பெஷல் என்ன தெரியுமா ? – புகைப்படம் உள்ளே

மேலும் கிரிக்கெட் செய்திகள் குறித்து உடனடி தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்து இருங்கள்