எலுமிச்சை தீபம் ஏற்றினால் என்ன பிரச்சனை தீரும்?

elumichai-deepam

பொதுவாக ஒவ்வொரு தீபம் ஏற்றுவதற்கு பின்பும் ஆன்மீகரீதியாக பல பலன்கள் உண்டு. அதனால் ஒருவரின் குறைக்கு ஏற்ப சில வகையான தீபங்களை அவர்கள் ஏற்றினால் அந்த குறை தீரும். அந்த வகையில் எலுமிச்சை தீபம் ஏற்றுவதால் என்னென்ன பலன்கள் உண்டு என்பதை பற்றி இந்த பதிவில் நாம் பார்ப்போம் வாருங்கள்.

lemon-diyas

எலுமிச்சைக்கு மிக பெரிய சக்தி இருப்பதால் தான் அது திரி சூலத்தில் ஒரு அங்கமாக இருக்கிறது.

தீய சக்திகள் வீட்டில் நுழையாமல் தடுக்க, எலுமிச்சையை இரண்டாக அறுத்து அதை வாசற்கதவின் இருபுறமும் வைப்பது வழக்கம். அதேபோல் கண்திருஷ்டி விலக எலுமிச்சை பழத்தை சுற்றிப்போடுவதும் வழக்கம்.

இப்படி பல அபூர்வ பலன்களை கொண்ட எலுமிச்சையால் துர்கா தேவிக்கு ராகுகாலத்தில் தீபம் ஏற்றும்போது பல பிரச்சனைகள் தீரும்.

lemon lamps

ஞாயிறு மாலை 4.30 – 6.00 மணி வரை உள்ள ராகுகாலத்தில் அம்மனுக்கு எலுமிச்சை தீபம் ஏற்றினால் தீராத நோய்கள் தீரும்.

செவ்வாய் கிழமை மாலை 3.00 – 4.30 மணி வரை உள்ள ராகுகாலத்தில் அம்மனுக்கு எலுமிச்சை தீபம் ஏற்றினால் குடும்பத்தில் உள்ள பிரச்சனைகள் தீரும்.

வெள்ளிக்கிழமை காலை 10.30 – 12.00 மணி வரை உள்ள ராகுகாலத்தில் 2 எலுமிச்சை தீபம் ஏற்றி அம்மனை மனமுருகி வேண்டினால் சந்தோசமாக வாழ வழி பிறக்கும்.