ஜாதக தோஷங்களை தீர்க்கவல்ல பிரதோஷ வழிபாடு.

sivan-workship

தினம் தோறும் சிவபெருமானை ஒருவர் வணங்கினாலும் பிரதோஷ காலத்தில் எம்பெருமானை ஆலயம் சென்று வணங்குவது சிறந்த பயனை அளிக்கும். மாதந்தோறும் இருமுறை – வளர்பிறை, தேய் பிறை திரயோதசி நாட்கள் பிரதோஷ தினங்களாகும். இந்த நாட்களில் சிவனை வழிபடுவதால் ஏற்படும் பலன்களை பற்றி இங்கு காண்போம் வாருங்கள்.

Lord Sivan

  • எவர் ஒருவரது ஜாதகத்தை எடுத்துக் கொண்டாலும் அதில் குறைந்தது 4 தோஷங்களாவது இருக்கும். அப்படி எத்தனை தோஷங்கள் இருந்தாலும், அந்த தோஷத்திற்கான தீய பலனை போக்கும் சக்தி பிரதோஷ வழிபாட்டிற்கு உண்டு.
  • பொதுவாக பிரதோஷ தினத்தில் மனிதர்கள் மட்டும் அல்லது முப்பத்து முக்கோடி தேவர்கள், பிரம்மா, விஷ்ணு என்னை அனைவரும் சிவனை வழிபடுவது வழக்கம். அந்த நேரத்தில் சிவனும் ஷேம நலத்திற்காக வழிபாட்டில் ஈடுபடுவார் என்பது ஐதீகம். அத்தகைய ஒரு நேரத்தில் நாமும் இறைவனை வழிபடுவதால் இதயம் கனிந்து ஈசன் நமக்கு அதிகமான நலன்களை வழங்குவார் என ஜோதிட நூல்கள் கூறுகின்றன.
  • சிவனின் வாகனமான நந்தி பகவானுக்கும் மரியாதை செய்யக் கூடிய ஒரு வழிபாடாக அமைகிறது பிரதோஷ வழிபாடு. நான்கு வேதங்கள், 64 கலைகள் என அனைத்தையும் படித்து முடித்தவர் நந்தீஸ்வரர். சிவனின் சந்தேகங்களுக்கு விளக்கமளிப்பவரும் நந்தி பகவான் என்று ஐதீகம் கூறுகிறது. அப்படி பட்ட நந்தி தேவரை பிரதோஷ தினத்தில் வழிபடுவதால் அறிவு வளரும், நினைவாற்றல் பெருகும். அதோடு ஒருவருக்கு எவ்வளவு பெரிய தோஷம் இருந்தாலும் பிரதோஷ காலத்தில் விரதம் இருந்து பசுவின் கறந்த பாலைக் கொண்டு ஈசனை அபிஷேகம் செய்து, வில்வ இலை, சங்குப்பூ வைத்து வழிபட்டால் சிறப்பான பலன் கிடைக்கும்.

  • காராம்பசுவின் பாலைக் கொண்டு நந்தியையும், சிவனையும் வழிபட்டால் பூர்வ ஜென்ம வினைகள், பிராமணனைக் கொன்ற சாபம், பெண்ணால் வந்த சாபம் உள்ளிட்டவை நீங்கும் என விரதமாலை நூல் கூறுகிறது.
  • பிரதோஷ நாளில் மாலை 4.30 மணி முதல் 6.00 மணி வரையிலான நேரம் பிரதோஷ காலமாகும். இந்த நேரத்தில் பரமசிவனை வணங்கி வழிபட்டால் மற்ற நாட்களில் ஏற்படும் துன்பங்கள் நீங்கி இன்பம் பெறலாம் என்பது நம்பிக்கை.