தீய சக்திகளை அழிக்கும் அஷ்டபைரவர் வழிபாடு

astabhairavar
- Advertisement -

தீய சக்திகள் பல வகைப்படும். அந்த தீய சக்திகளில் ஏதாவது ஒன்றால் பாதிக்கப்பட்டாலும் நமக்கு பலவிதமான பிரச்சனைகள் ஏற்படும். நம்முடைய முன்னேற்றத்தை பார்த்து பொறாமைப்படுபவர்களிடம் இருந்தும், எதிர்மறை ஆற்றல்கள் நிறைந்தவர்கள் என்று பலராலும் பல விதங்களில் நமக்கு தீய சக்திகளால் பாதிப்புகள் ஏற்படக்கூடும். அப்படிப்பட்ட தீய சக்திகள் நம்மை அணுகாமல் இருப்பதற்கும் அப்படியே தீய சக்திகளால் பாதிக்கப்பட்டு இருந்தாலும் அதிலிருந்து விடுபடுவதற்கும் அஷ்டபைரவர்களை எந்த முறையில் வீட்டிலேயே வழிபட வேண்டும் என்றுதான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.

பைரவர் வழிபாடு என்பது மிகவும் சிறப்புக்குரிய வழிப்பாடாக திகழ்கிறது. பைரவர் காவல் தெய்வமாக திகழ்கிறார். அனைத்து சிவாலயங்களிலும் பைரவரின் சன்னதி என்பது கண்டிப்பாக இருக்கும். பைரவரை நாம் முழுமனதுடன் வழிபடும் பொழுது நமக்கு ஏற்படுக்கூடிய பிரச்சனைகளை அவர் தீர்த்து வைப்பார். ஒவ்வொரு விதமான பிரச்சினைக்கும் ஒவ்வொரு விதமான வழிபாடு முறைகள் அவருக்கு இருக்கிறது. மகாலட்சுமியை எப்படி அஷ்டலஷ்மியாக நாம் வழிபாடு செய்கிறோமோ அதே போல் பைரவரையும் நம் அஷ்டபைரவராக வழிபாடு செய்யும்பொழுது அதன் பலன் மிகவும் அதிக அளவில் நமக்கு கிடைக்கும்.

- Advertisement -

இந்த வழிபாட்டை தேய்பிறை அஷ்டமி அன்று வீட்டிலேயே செய்யலாம். அப்படி தேய்பிறை அஷ்டமி அன்று செய்ய இயலாதவர்கள் தேய்பிறையில் வரக்கூடிய செவ்வாய்க்கிழமை அன்றோ அல்லது ஞாயிற்றுக்கிழமை அன்றோ செய்யலாம். வீட்டு பூஜை அறையில் ஒரு வாழை இலையை விரித்துக் கொள்ளுங்கள். அதில் பச்சரிசியை பரப்பிக் கொள்ளுங்கள். அந்த பச்சரிசிக்கு மேல் கருப்பு புள்ளிகள் இல்லாத நல்ல எலுமிச்சம் பழமாக பார்த்து எட்டு எலுமிச்சம் பழங்களை வாங்கி வைக்க வேண்டும்.

இப்பொழுது அந்த பச்சரிசியின் மேல் வரிசையாக 8 எலுமிச்சம் பழத்தையும் வைத்துக்கொண்டு அந்த எலுமிச்சம் பழத்திற்கு சந்தனம் குங்குமம் வைத்துக் கொள்ளுங்கள். அடுத்ததாக ஒவ்வொரு எலுமிச்சம் பழத்திற்கு முன்பாகவும் இரண்டு வெற்றிலை, இரண்டு கொட்டை பாக்கு, இரண்டு வாழைப்பழம் என்று 8 எலுமிச்சை பழத்திற்கும் வைக்க வேண்டும். இந்த எலுமிச்சம் பழங்களை நாம் அஷ்ட பைரவர்கள் ஆக பாவித்து இந்த வழிபாட்டை செய்யப் போகிறோம்.

- Advertisement -

அடுத்ததாக இந்த எலுமிச்சம் பழங்களுக்கு பூக்களை வைத்துக் கொள்ளுங்கள். ஒரு சிறிய கிண்ணத்தில் சிறிது குங்குமத்தை கொட்டி அதில் பன்னீரை ஊற்றி கரைத்து வைத்துக் கொள்ளுங்கள். இப்பொழுது உதிரி பூக்களை எடுத்து அந்த குங்குமத் தண்ணீரில் நனைத்து “ஓம் அஷ்டபைரவாய நமஹ” என்று ஒவ்வொரு எலுமிச்சம் பழத்திற்கும் எட்டு முறை அர்ச்சனை செய்ய வேண்டும். ஒவ்வொரு முறையும் குங்கும தண்ணீரில் பூக்களை நனைத்து அர்ச்சனை செய்ய வேண்டும்.

பிறகு 8 எலுமிச்சம் பழத்திற்கும் தனித்தனியாக கற்பூர தீப தூப ஆராதனை காட்ட வேண்டும். பிறகு உங்களுடைய கோத்திரத்தை கூறிவிட்டு உங்களுடைய ஜென்ம நட்சத்திரத்தை கூறிவிட்டு உங்களுடைய பெயர் அடுத்ததாக உங்கள் வீட்டில் இருக்கும் மற்ற நபர்கள் அவர்களின் நட்சத்திரம் மற்றும் அவர்களின் பெயரை கூற வேண்டும். இவ்வாறு கூறி முடித்துவிட்டு அஷ்ட பைரவர்களை மனதார வேண்டிக் கொள்ள வேண்டும். பிறகு ஒவ்வொரு எலுமிச்சம் பழத்தையும் வடக்கு புறமாக எடுத்து உங்களுடைய தலையை மூன்று முறை சுற்றி ஒரு கவரில் போட்டுக் கொள்ளுங்கள்.

- Advertisement -

வீட்டில் இருக்கும் அனைவரையும் ஒன்றாக வைத்தும் இப்படி சுற்றலாம். இவ்வாறு சுற்றுவதன் மூலம் அஷ்ட பைரவர்கள் நம்மை சுற்றி இருப்பது போல் அர்த்தமாகும். பிறகு இதை மூன்று தெருக்கள் சந்திக்கும் இடத்தில் நான்காக நறுக்கி போட்டு விட வேண்டும். பிறகு கை கால்களை கழுவி விட்டோ அல்லது குளித்து விட்டோ வீட்டிற்குள் வரவேண்டும். வெற்றிலை, பாக்கு, வாழைப்பழம், வாழை இலை இவற்றை பசு மாட்டிற்கு தானமாக தந்துவிட வேண்டும். பச்சரிசியை யாருக்காவது தானமாக கொடுத்து விட வேண்டும்.

இந்த முறையில் மூன்று மாதங்களுக்கு ஒரு முறை செய்வதன் மூலம் நம் வீட்டில் எந்த வித தீய சக்திகளும் அணுகாது. முக்கிய குறிப்பு பெண்கள் கர்ப்பமாக இருக்கும் வீட்டில் இந்த வழிபாட்டை செய்யக்கூடாது.

இதையும் படிக்கலாமே: தேவைகள் நிறைவேற ஜாதிக்காய் பரிகாரம்

மிகவும் எளிமையான அதேசமயம் அதிசக்தி வாய்ந்த ஒரு தாந்திரீக பரிகாரமான இந்த பரிகாரத்தை முழு நம்பிக்கையுடன் செய்பவர்களுக்கு தீய சக்திகளால் எந்த வித பாதிப்பும் ஏற்படாமல் அஷ்ட பைரவர்கள் காத்து ரட்சிப்பார்கள்.

- Advertisement -