குத்து விளக்கை எந்த நாட்களில் துலக்கினால் என்ன பலன் தெரியுமா?

ஆன்மீகத்தில் குத்துவிளக்கு மிக முக்கிய பங்கை வகிக்கின்றது. தெய்வீக அம்சம் பொருந்திய இந்த குத்து விளக்கை ஏற்றுவதன் மூலம் பஞ்ச பூத சக்தியையும் கவர்ந்திழுத்து இறையருளை முழுமையாக நமக்கு பெற்று தருகிறது. குத்துவிளக்கின் அடிப்பாகம் பிரம்ம தேவரையும், நடுப்பாகம் மகாவிஷ்ணுவையும், மேல்பாகம் ஈஸ்வரனையும் குறிக்கிறது. அதில் ஊற்றும் நெய்யானது நாதம் என்றும், திரியானது பிந்து என்றும், சுடர்விட்டு எரியும் சுடர் ஆனது மலை மகளையும் குறிக்கிறது என்று கூறுவார்கள். பஞ்சபூத சக்தியின் பால் செயல்படுவதால் இதற்கு ஐந்து முகங்கள் இருக்கிறது. குத்து விளக்கை ஏற்றும் பொழுது நிறைய ஆகம விதிகள் கடைபிடிக்க வேண்டியது அவசியமாகும். பலபேர் இன்றைய கால கட்டத்தில் அவற்றை பின்பற்றுவது கிடையாது. எப்பொழுதும் குத்து விளக்கை ஏற்றும் பொழுது ஐந்து முகத்திலும் தீபம் ஏற்றுவது மிகவும் சிறப்பான பலன்களை தரும். திரி முதலில் போட்டுவிட்டு நெய் விடுவது தவறான முறையாகும். நெய் அல்லது எண்ணெய் ஊற்றிய பிறகு தான் திரி போட வேண்டும். அதன் பின்புதான் தீபமேற்றி வழிபட வேண்டும். இது தான் சரியான முறை ஆகும் என்கிறது சாஸ்திரம்.

ainthu-muga-vilakku

இத்தகைய மகத்துவம் வாய்ந்த குத்து விளக்கை எப்போது வேண்டுமானாலும், எந்த நேரத்தில் வேண்டுமானாலும் நமது இஷ்டப்படி துலக்குவது மிகவும் தவறான ஒரு வழிமுறையாகும். உங்களின் அவசரத்திற்கு எப்படி வேண்டுமானாலும் துலக்குவது கூடாது. அதற்கென்று பிரத்தியேக நாட்கள் உள்ளன. எந்த நாட்களில் குத்துவிளக்கை துலக்கினால் என்ன பலன்கள் கிட்டும்? என்பதை பற்றியும் எந்த நாட்களில் குத்துவிளக்கை துலக்கக் கூடாது? ஏன் துலக்கக் கூடாது? என்பதைப் பற்றியும் இப்பதிவில் நாம் விரிவாக காணலாம்.

முதலில் விளக்கை ஏனோ தானோ என்று துலக்கி வைக்கக்கூடாது. நன்கு சுத்தமாக பளிச்சிடும் வண்ணம் துலக்க வேண்டும். பச்சை பயிறு, பச்சரிசி, எலுமிச்சைத் தோல், வெந்தயம் இவற்றை உலரவைத்து அரைத்துக் கொள்ள வேண்டும். இந்த கலவையை கொண்டு துலக்கினால் புத்தம்புது விளக்கு போல் பளிச்சிடும். இதில் சிறிது சிகைக்காய் சேர்த்து துலக்கினால் மேலும் சிறப்பான ஒளியை தரும்.

vilaku

ஞாயிறு, திங்கள், வியாழன், சனி ஆகிய நாட்களில் மட்டும் தான் குத்துவிளக்கை துலக்க வேண்டும். செவ்வாய், புதன், வெள்ளி இந்த நாட்களில் குத்துவிளக்கை துலக்குவது முறையான வழிபாடு அல்ல. திங்கள் கிழமை அன்று இரவிலிருந்து புதன்கிழமை இரவு வரை குத்துவிளக்கில் குபேர மற்றும் குக குரு தாட்சாயணி போன்ற தெய்வங்கள் குடி கொண்டிருப்பதாக ஐதீகம் உள்ளது. எனவே இந்த காலகட்டத்தில் துலக்கினால் அவர்களின் சக்தி எல்லாம் நீங்கிவிடும் என்று கூறப்படுகிறது. மேலும் வெள்ளியன்று துலக்குவதால் குபேர சங்க நிதி யட்சிணி போன்ற தெய்வம் சகல வளங்களையும் அதில் குடியிருந்து அந்த குடும்பத்திற்கு நன்மையை நல்குவதாக ஐதீகம் உள்ளது. எனவே செவ்வாய், புதன், வெள்ளி இந்த மூன்று நாட்களிலும் குத்து விளக்கை துலக்குவதை தவிர்ப்பது அந்த குடும்பதிற்கு மேன்மையை தரும்.

- Advertisement -

ஞாயிறு அன்று குத்து விளக்கை துலக்குவதால் கண்கள் தொடர்பான பிரச்சனைகள் இருந்தால் நீங்கிவிடும். பிரகாசமான பார்வை கிடைக்கப்பெறும்.

திங்களன்று குத்துவிளக்கை துலக்குவதால் மனஇறுக்கம் நீங்கி ஒரு தெளிவு உண்டாகும். எந்த குழப்பமும் இல்லாமல் தீர்க்கமான முடிவெடுக்கும் தன்மை மேலோங்கி காணப்படும்.

guru bagwan

வியாழனன்று குத்து விளக்கை துலக்குவதால் குருவின் பார்வை பலன் கிட்டும். குருவின் பார்வை அமைந்தாலே அனைத்தும் நன்மையாகவே நடக்கும். எப்பேர்ப்பட்ட பிரச்சனையும் சுலபமாக தீர்ந்துவிடும்.

சனிக்கிழமை குத்து விளக்கு துலக்குவதால் விபத்து நேர இருப்பதை தவிர்த்துக் கொள்ள உதவிகரமாக இருக்கும். இழந்த பொருட்களை திரும்பப் பெறும் பாக்கியமும் உண்டாகும். இதேபோல் அன்றைய தினம் வரும் பஞ்சமி திதியில் குத்து விளக்கை துலக்குவதன் மூலம் அகால மரணம் ஏற்படுவதை தடுக்கக்கூடிய பலன் உண்டு என்று கூறப்படுகிறது.

பொதுவாக தீபம் ஏற்றும் பொழுது ஒற்றைத் திரியில் ஏற்றுவதை விட இரட்டை திரியை திரித்து ஒன்றாக்கி ஏற்றுவதால் பலன்கள் இருமடங்காக கிட்டுமென்று சாஸ்திரம் கூறுகிறது.

இதையும் படிக்கலாமே
மனதிற்கு பிடித்த வேலை உடனே கிடைக்க பைரவருக்கு இப்படி மிளகு தீபம் ஏற்றுங்கள்.

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

English Overview:
Here we have Vilakku wash. Kuthu vilakku in Tamil. Kuthu vilakku palangal. Kuthu vilakku thulakkum natkal in Tamil.