பயனுள்ள வீட்டு மற்றும் சமையல் குறிப்புகள் 12! இத கூட தெரிஞ்சுக்காம போய்விட்டோமே என்று வருத்தப்படாதீங்க.

rasam-paniyaram-adai
- Advertisement -

எவ்வளவு காலங்கள் ஆனாலும் ஒரு சில பழைய பொருட்கள் நமக்கு மறுசுழற்சி செய்வது போல ரொம்பவே உபயோகப்படும். அந்த வகையில் வீட்டு குறிப்புகள் மட்டுமல்லாமல் ஆரோக்கியம், சமையல் போன்ற எல்லாவற்றிலும் நமக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்க போகும் இந்த 12 குறிப்புகளை பற்றிய தகவல்களை தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ள இருக்கிறோம், வாருங்கள் பதிவிற்குள் போகலாம்.

குறிப்பு 1:
தேங்காய் உடைக்கும் பொழுது அதன் தண்ணீரை சில பேர் கீழே வீணாக ஊற்றி விடுவார்கள். குடிக்க முடியாதவர்கள் அதனை நீங்கள் சமைக்கும் பொழுது ரசத்துடன் சேர்த்து சமைத்து பாருங்கள், ரசம் செமையா இருக்கும்.

- Advertisement -

குறிப்பு 2:
விடாப்பிடியான கரைகள் திடீரென உங்கள் ஆடையின் மீது சிந்திவிட்டால் உடனே அந்த கரையின் மீது கொஞ்சம் வினிகர் போட்டு ஊற வைத்து துவைத்தால் போதும் கறை இருந்த இடம் தெரியாமல் மாயமாய் மறைந்து போகும்.

குறிப்பு 3:
பணியார சட்டி, ஆப்ப சட்டி போன்றவை பயன்படுத்துபவர்கள் அதனை கழுவிய பின்பு கொஞ்சம் எண்ணெய் தடவி வைத்து விடுங்கள். அப்போது தான் நீங்கள் பணியாரம் அல்லது ஆப்பம் எல்லாம் செய்யும் பொழுது சுலபமாக இருக்கும்.

- Advertisement -

குறிப்பு 4:
ரத்தக் கொதிப்பு உள்ளவர்கள், கொதிக்க வைத்த தண்ணீரை நன்கு ஆற வைத்து அதில் சீரக பொடியை சேர்த்து 12 மணி நேரம் ஊற வைத்து பின்னர் குடித்து பாருங்கள் ரத்தக் கொதிப்பு சீராக இருக்கும்.

குறிப்பு 5:
புதிதாக மண்பாண்டம் வாங்குபவர்கள் முதலில் கொஞ்சம் எண்ணெய் தடவி அடுப்பில் வைத்து சூடு ஏற்றிக் கொள்ளுங்கள். அதன் பிறகு ஒருமுறை கழுவி காய்ந்த பின்பு பயன்படுத்துங்கள். விரிசல் விழும் செய்யாது, மண்பாண்டத்தின் வாசமும் வராது.

- Advertisement -

குறிப்பு 6:
தக்காளிச் சட்னி, காரச்சட்னி போன்றவை செய்யும் பொழுது ஒரு ஸ்பூன் எள்ளை வறுத்து சேர்த்து பாருங்கள், ரொம்பவே ருசியாக, வித்தியாசமான சுவையுடன் நிச்சயம் இருக்கும். ஆரோக்கியமும் அதிகரிக்கும்.

குறிப்பு 7:
எண்ணெயில் பொரித்த அப்பளங்கள் மிஞ்சி விட்டால் அதை ஒரு பாலித்தீன் கவரில் போட்டு இறுக்கமாகக் மூடி ஃபிரிட்ஜில் வைத்து பாருங்கள், ஒரு வாரம் ஆனாலும் மொறு மொறுப்பாக அப்படியே இருக்கும்.

குறிப்பு 8:
பாத்திரம் கழுவும் சிங் அல்லது கை கழுவும் வாஷ்பேஷன் எதுவாக அதில் ஒரு சில ரச கற்பூரத்தை போட்டு வைத்தால் பூச்சிகள் வராது, துர்நாற்றமும் வீசாது.

குறிப்பு 9:
அடை தோசை செய்ய மாவு அரைக்கும் பொழுது இரண்டு சிறிய உருளைக் கிழங்குகளை வேக வைத்து சேர்த்து அரைத்து பாருங்கள், ருசி அபாரமாக இருக்கும்.

குறிப்பு 10:
மரக் கதவுகள், கிரில் போன்றவற்றில் இருக்கும் தூசிகளை அகற்ற பழைய டூத் பிரஷ்கள் ரொம்பவே உபயோகமாக இருக்கும் எனவே அதனை தூக்கி எறிந்து விடாமல் இதற்கென தனியாக வைத்துக் கொள்ளலாம்.

குறிப்பு 11:
நீங்கள் மீன் தொட்டியை வைத்து இருக்கிறீர்கள் என்றால் அதிலிருக்கும் தண்ணீரை மாற்றும் பொழுது பழைய தண்ணீரை செடிகளுக்கு ஊற்றினால் செடிகள் செழிப்பாக வளரும்.

குறிப்பு 12:
சாப்பாடு சாப்பிடும் மேஜையில் ஈக்கள், பூச்சி தொந்தரவு இல்லாமல் இருக்க கொஞ்சம் கற்பூரத்தை தண்ணீரில் கரைத்து துடைத்து எடுத்தால் போதும்.

- Advertisement -