வாஷிங் மெஷினில் துவைக்கும் போது துணியின் நிறம் மாறாமல் இருக்க டிப்ஸ்

washing machine cloth cleaning tips
- Advertisement -

இப்போதைய சூழ்நிலையில் வாஷிங் மெஷின் இல்லாத வீடடே இல்லை என்று சொல்லலாம். அந்த அளவிற்கு இதன் பயன்பாடு பெருகி விட்டது. என்ன தான் வாஷிங் மெஷின் வாங்கி பயன்படுத்தினாலும் கூட இன்றும் இன்னும் கூட சில துணிகளை நாம் கைகளில் தான் துவைக்க வேண்டி உள்ளது. குறிப்பாக வெள்ளை நிற துணிகள் இதை மெஷினில் போடும்போது அந்த அளவிற்கு அழுக்கு போகாதோடு, நாளடைவில் நிறமும் மங்கி விடும்.

வெள்ளை துணிகள் இப்படி என்றால் மற்ற நிற துணிகள் நிலைமை கொஞ்சம் மோசம் தான். வாஷிங் மெஷினில் பயன்படுத்தும் போது புது துணிகள் கூட கொஞ்ச நாளிலே நிறம் மாறி பழைய துணிகள் போல மாறி விடுகிறது. இப்படி நம்முடைய வேலையை குறைப்பதற்காக ஒரு பொருளை வாங்கி செலவை அதிகப்படுத்திக் கொள்கிறோம் என்று சொல்லலாம்.

- Advertisement -

இந்தப் பிரச்சனைகளை சுலபமான முறையில் தீர்க்க அருமையான ஒரு குறிப்பு உள்ளது இந்த முறையில் நாம் துவைக்கும் போது வெள்ளை நிற துணிகள் அழுக்கு போவதுடன் துணியின் நிறமும் மங்காது. இது மற்ற துணிகளுக்கும் பொருந்தும் வாங்க அது என்ன டிப்ஸ் என்று வீட்டு குறிப்பு குறித்த இந்த பதிவில் பார்க்கலாம்.

வாஷிங் மெஷிலில் துவைக்கும் போது துணியின் அழுக்கு சுலபமாக நீங்க

இந்த முறையில் துணி துவைக்க நமக்கு ஒரே ஒரு பொருள் தான் தேவை. அது வேறு ஒன்றும் இல்லை படிகாரம் தான். இது பலருக்கும் தெரிந்த ஒரு குறிப்பு தான். தெரியாதவர்கள் இதன் மூலம் தெரிந்து கொள்ளுங்கள். இந்த படிகாரமானது அனைத்து கடைகளிலும் கிடைக்கும் இதை வாங்கி நன்றாக தூள் செய்து அதன் பிறகு மிக்ஸியில் போட்டு பவுடராக அரைத்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

இப்போது உங்களுடைய அழுக்குத் துணிகளை எப்போதும் போல வாஷிங் மெஷினில் சேர்த்து விட்டு லிக்விடை சேர்க்கும் இடத்தில் இந்த பவுடரை லிக்விட் உடன் சேர்த்து சேர்க்க வேண்டும். அதன் பிறகு நீங்கள் எப்பொழுதும் போல துணி துவைத்து கொள்ளுங்கள் ஒரு வேளை உங்கள் துணி அதிக அழுக்கானதாக இருந்தால் அனைவரின் மிஷினிலும் துணி ஊறவைக்கும் ஆப்ஷன் இருக்கும். அதை பயன்படுத்தி விட்டு அதன் பிறகு துவைத்து எடுங்கள் துணிகள் பளிச்சென்று இருக்கும்.

இந்த முறையில் துவைக்கும் போது அழுக்கு அதிகமான துணிகள் காலரில் கறை உள்ள துணிகள் என தனித்தனியாக நீங்கள் துவைக்க வேண்டாம். கைகளிலும் அழுத்தி தேய்க்க வேண்டிய அவசியம் கிடையாது அனைத்தையும் வாஷிங்மெஷினிலே போட்டு எடுத்து விடலாம். அதே போலத் தான் வெள்ளை நிற துணிகளும் மங்காததோடு, கறைகளும் எளிதில் நீங்கி விடும். இனி கையில் துணி துவைக்க வேண்டிய அவசியம் கிடையாது.

- Advertisement -

அதே போல் கொஞ்சம் சந்தனத்தூள், அத்துடன் ஜவ்வாது தூள் சேர்த்து அதில் கொஞ்சம் தண்ணீர் ஊற்றி கலந்து கொள்ளுங்கள். அதை நாம் வாஷிங் மெஷினில் துணி சேர்த்து கம்போர்ட் ஊற்றுவோம் அல்லவா, அதே போல இந்த தண்ணீரை துணி துவைக்கும் போது அதில் ஊற்றி விடுங்கள். இது கம்ஃபோர்ட்டின் வாசத்தை விட நல்ல நறுமணமாகவும் இருக்கும். அதே நேரத்தில் இயற்கையானதாகவும் இருக்கும்.

சிலருக்கு கம்போர்ட் வாசனை பிடிக்காது அலர்ஜி ஏற்படும். சில நேரங்களில் கம்பர்ட் வாங்கி வைக்க மறந்து விடுவோம் அது போன்ற சமயங்களில் இந்த குறிப்பை பயன்படுத்துங்கள். ஆனால் இந்த சந்தனம், ஜவ்வாது பவுடரை கலந்த பிறகு தண்ணீரை சிறிது நேரம் வைத்து விட்டு ஊற்றுங்கள் இந்த தூள் டம்ளரின் அடியில் சேர்ந்து விடும். அதை நீங்கள் கீழே ஊற்றி விடுங்கள் இல்லை என்றால் துணிகளில் எல்லாம் சந்தன பவுடர் ஒட்டிக் கொள்ளும்.

இதையும் படிக்கலாமே: வெயில் காலத்தில் ஏசி இல்லாமல் அறைகள் குளுமையாக இருக்க டிப்ஸ்

வாஷிங் மெஷினில் துணிகளை துவைக்கும் போது பயன்படுத்தக்கூடிய அருமையான இரண்டு குறிப்புகளை தெரிந்து கொண்டிருப்பீர்கள். இந்த குறிப்புகள் உங்களுக்கு பயன்படுமாயின் பயன்படுத்தி பலன் அடையுங்கள்.

- Advertisement -