வெயில் காலத்தில் ஏசி இல்லாமல் அறைகள் குளுமையாக இருக்க டிப்ஸ்

room rice bag
- Advertisement -

முன்பெல்லாம் பெரும்பாலான வீடுகளில் ஏசி கிடையாது. வீட்டை சுற்றிலும் மரங்களும் பசுமையான இடங்களும் இருப்பதால் வெயிலை ஓரளவிற்கு சமாளித்து வாழ்ந்து வந்தார்கள். இப்பொழுதெல்லாம் பிறக்கும் குழந்தைகள் கூட ஏசியில்லாமல் தூங்குவது கிடையாது. அந்த அளவிற்கு நம்முடைய சூழ்நிலை மாறி விட்டது. இதற்கும் சூழ்நிலை காரணம் என்று சொல்லலாம்.

ஆனால் அந்த சூழ்நிலை இவ்வளவு வெப்பமாக மாறுவதற்கும் நாம் தான் காரணம் என்பதையும் ஒத்துக் கொள்ள வேண்டும். சரி இப்போது பிரச்சனை அதுவல்ல. இந்த வெயில் காலத்தில் ஏசி இல்லாமல் இருக்க முடியாது என்பது எந்த அளவிற்கு உண்மையோ, அதே போல் நாள் முழுவதும் ஏசி ஓடிக் கொண்டிருந்தால் கரண்ட் பில் பிரச்சனை வரும் என்பதும் உண்மை.

- Advertisement -

ஆனால் இந்த வெயில் காலத்தில் கூடஏசியை பயன்படுத்தாமல் கரண்டை மிச்சப்படுத்தி சுலபமான முறையில் வீட்டை குளுமையாக வைத்திருக்க முடியும். இதை கேட்கும் போது ஆச்சரியமாக இருக்கிறது அல்லவா! வாங்க அது எப்படி என்று இந்த வீட்டுக் குறிப்பு குறித்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

ஏசியே போடாமல் வெயில் காலத்தை சமாளிக்க டிப்ஸ்

இந்த முறைக்கு முதலில் ஒரு லிக்விட்டை நாம் தயாரிக்க வேண்டும். அதற்கு ஒரு கிண்ணத்தில் கொஞ்சமாக தண்ணீர் எடுத்துக் கொள்ளுங்கள். இந்த தண்ணீர் ஐஸ் வாட்டர் ஆக இருந்தால் இன்னும் நல்லது. தண்ணீரில் கொஞ்சமாக கம்ஃபோர்ட் சேர்த்துக் கொள்ளுங்கள். கம்ஃபோர்ட் வாசம் பிடிக்காது என்பவர்கள் வேறு வாசமான பொருட்கள் அதாவது ஜவ்வாது, பச்சை கற்பூரம் இப்படியானவற்றை சேர்க்கலாம்.

- Advertisement -

அடுத்தாக ஒரு அரிசி பையை எடுத்துக் கொள்ளுங்கள். அதன் நடுவில் கத்திரிக்கோலால் கத்தரித்தால் இது ஒரு நீளமான பாய் போல நமக்கு கிடைக்கும். அடுத்து நம் வீட்டில் இருக்கும் ஒரு பெரிய பெட்ஷீட் எடுத்து இந்த அரிசிப் பையின் நீளத்திற்கு தகுந்தார் போல மடித்து வைத்துக் கொள்ளுங்கள். அடுத்து அரிசி பையின் மேல் மடித்து வைத்த பெட்ஷீட்டை போட்டு விடுங்கள். அதன் மேல் கிண்ணத்தில் இருக்கும் தண்ணீரை ஊற்றுங்கள்.

இந்த தண்ணீர் பெட்ஷீட் முழுவதும் நனையும்படி இருக்க வேண்டும். பெட்ஷீட்டில் எந்த இடத்திலும் ஈரம் இல்லாமல் காய்ந்திருக்கக் கூடாது. அரிசி பையின் மேல் வைத்து தண்ணீர் ஊற்றுவதால் பையில் இருந்து தண்ணீர் கீழே இறங்காது. அதே சமயத்தில் அரிசி பையில் தண்ணீர் தங்கி பெட்ஷீட் எப்போதும் ஈரமாகவே இருக்கும்.

- Advertisement -

இந்த பெட்ஷீட்டை உங்கள் வீட்டின் அறையில் உள்ள மின்விசிறியை சுழல விட்டு அதன் கீழ் வைத்து விடுங்கள். காற்று இந்த பெட்ஷீட் மீது பட்டு இதிலிருந்து வரும் காற்று வீடு முழுவதும் குளிர்ந்த காற்றாக வீசும். அதுமட்டுமின்றி பெட்ஷீட் ஈரத்துடன் இருப்பதால் ஏற்படக் கூடிய ஈர வித வாடையும் இந்த கம்போர்ட் மூலம் நீங்கி விடும்.

இதையும் படிக்கலாமே: பித்தளை பாத்திரங்கள் பளபளக்காக டிப்ஸ்

இதன் பெட்ஷீட் டின் குளுமையே போதும். ஏசியே இல்லாமல் நம்மால் இருக்க முடியும். ஏசி பயன்படுத்தாமல் கரண்ட் பில்லையும் மிச்சப்படுத்தி ஆரோக்கியத்தையும் மேம்படுத்த அருமையான இந்த குறிப்பை இல்லத்தரசிகள் பயன்படுத்தி பாருங்கள். அனைவரின் பாராட்டையும் எளிதில் பெற்று விடலாம்.

- Advertisement -