பெஸ்டி தமிழ் மீனிங் | Bestie Meaning in Tamil

besti meaning in Tamil
- Advertisement -

Bestie meaning in Tamil – பெஸ்டி என்றால் என்ன

உலகில் எல்லா மொழிகளில் இருக்கின்ற வார்த்தைகளை தனக்குள்ளே, தனக்கே உரிய விதத்தில் ஈர்த்துக் கொள்ளும் தன்மை ஆங்கில மொழிக்கு உண்டு. எனினும் உலகெங்கிலும் ஆங்கில மொழி என்பது பொதுவாக பார்மல் ஆங்கிலம் மற்றும் இன்பார்மல் ஆங்கிலம் என இரண்டு முறைகளில் பேசவும், எழுதவும் படுகின்றன. இதில் பார்மல் ஆங்கிலம் என்பது பிறருடன் அதிகார பூர்வ ரீதியான தொடர்பு கொள்வதற்கு பயன்படுகிறது. இன்பார்மல் ஆங்கிலம் என்பது அதிகாரபூர்வமாக அல்லாமல் பிறருடன் சகஜமாக பேசுவதற்கும், எழுதுவதற்கும் பயன்படுத்தப்படுகிறது. பொதுவாக இன்பார்மல் ஆங்கில வார்த்தைகளை பயன்படுத்தும் பொழுது அதன் இலக்கண தன்மைக்கு அதிக முக்கியத்துவம் தரப்படாமல் வார்த்தைகளின் லயம், சுருக்கத் தன்மை போன்றவற்றிற்கு முன்னுரிமை தரப்படுகிறது. அத்தகைய வார்த்தைகளில் பல தற்கால இளைய தலைமுறையினருக்கு அன்றாட வாழ்வில் பயன்படுத்த ஏதுவாக உள்ளது. அத்தகைய வார்த்தைகளில் ஒன்று தான் Bestie என்பதாகும். நாம் இந்த பதிவில் Bestie என்றால் என்ன? Bestie என்ற வார்த்தையின் அர்த்தம் (Bestie meaning in Tamil) என்ன என்பதை விரிவாக பார்ப்போம்.

Bestie என்ற வார்த்தையின் அர்த்தம் தமிழில் – Meaning of bestie in Tamil

பெஸ்டி (Bestie) என்பது பொதுவாக நண்பர்களை குறிக்கின்ற வார்த்தையாகும். எனினும், இந்த Bestie வார்த்தையை எப்படி எல்லாம் பயன்படுத்தலாம் என்பதை இப்போது பார்க்கலாம்.

- Advertisement -

ஆங்கிலம் தமிழ் மொழிபெயர்ப்பு

  • உங்களுக்கோ அல்லது மற்றவர்களுக்கோ மிக சிறந்த நண்பராக இருப்பவரை Bestie என அழைக்கலாம்.
  • நம்பிக்கைக்குரிய மிகவும் நெருக்கமான நண்பர்களை குறிக்கவும் இந்த Bestie வார்த்தை பொருந்தும்.
  • மற்ற நண்பர்களை காட்டிலும் மிகவும் முக்கியமான நண்பரை Bestie என அழைக்கலாம்.
  • மிகவும் விருப்பத்திற்குரிய நண்பரை அல்லது தோழியை Bestie என அழைக்கலாம்.

இப்படி பெஸ்டி (Bestie) என்ற வார்த்தைக்கு பல பொருள்கள் உள்ளன. சமயத்திற்கும் நமபருக்கும் ஏற்றவாறு இந்த பெஸ்டி என்ற வார்த்தையின் பொருள் மாறுபடும்.

- Advertisement -