தனது ஓவரில் சிக்ஸ் அடித்த குப்திலை அவுட் ஆக்கி பழிதீர்த்த இந்திய அணி வீரர் – வீடியோ

guptill

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான 3ஆவது ஒருநாள் போட்டி இன்று பே ஓவல் மைதானத்தில் துவங்கியது. நியூசிலாந்து அணி டாஸ் வென்று முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி துவக்க வீரர்களாக குப்தில் மற்றும் முன்ரோ களமிறங்கினர்.

toss

இந்த போட்டியிலும் துவக்க ஜோடி சிறப்பான துவக்கத்தை அளிக்க தவறியது. அந்த அணியின் முன்ரோ 7 ரன்கள் அடித்து ஷமி பந்தில் வெளியேறினார். பின் குப்தில் உடன் இணைந்தார் கேப்டன் கேன் வில்லியம்சன் இவர்கள் இருவரும் நிதானமான ஆட்டத்தை தொடர்ந்தனர்.

அப்போது குப்தில் இந்தியாவின் வேகப்பந்து வீச்சாளரான புவனேஷ்வர் குமாரின் பந்துவீச்சில் ஒரு சிக்ஸ் ஒரு பவுண்டரி என அவரை அடித்தார். அதற்கு பழிதீர்க்கும் வழியாக 7ஆவது ஓவரை வீசிய புவனேஷ்வர் குமார் முதல் பந்தில் அவுட் செய்து வெளியேற்றினார். இப்போது அது வீடியோ பதிவாக வெளியாகியுள்ளது. இதோ அந்த வீடியோ இணைப்பு :

நியூசிலாந்து அணி தற்போது வரை 26 ஓவர் முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்து 101 ரன்களை அடித்து சற்று சிரமமான நிலையில் உள்ளது என்றே கூறலாம்.

இதையும் படிக்கலாமே :

இன்றைய போட்டியில் தோனி விளையாடாததன் காரணம் இதுதான் – கேப்டன் கோலி

மேலும் விளையாட்டு செய்திகள் குறித்து உடனடி தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்து இருங்கள்