இன்றைய போட்டியில் தோனி விளையாடாததன் கரணம் இதுதான் – கேப்டன் கோலி

toss

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான 3ஆவது ஒருநாள் போட்டி இன்று பே ஓவல் மைதானத்தில் துவங்கியது. டாஸ் வென்று முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. இந்திய அணி தரப்பில் 2 மாற்றங்கள் இந்த போட்டியில் செய்யப்பட்டுள்ளன என்று கேப்டன் கோலி அறிவித்தார்.

ind vs nz trophy

அதன்படி விஜய் ஷங்கருக்கு பதிலாக மீண்டும் அணியில் இடம் பிடித்தார் ஹார்டிக் பாண்டியா, தோனிக்கு பதிலாக தினேஷ் கார்த்திக் அணியில் இணைந்தார். அப்போது தோனி இந்த ஆட்டத்தில் விளையாடாதது ஏன் என்ற கேள்வியினை கோலியிடம் கேட்டார் தொகுப்பாளர்.

அதற்கு பதிலளித்த கோலி : இந்த ஆட்டத்தில் தோனி விளையாடவில்லை பதிலாக இன்று தினேஷ் கார்த்திக் விக்கெட் கீப்பிங் செய்வார் என்றும் மேலும், தோனி தொடைப்பகுதியில் ஏற்பட்ட தசைப்பிடிப்பு காரணமாக இன்று அணியில் இடம்பெறவில்லை. அடுத்த இரு போட்டிகளில் தோனி விளையாடுவார் என்று தெரிவித்தார் கேப்டன் கோலி.

நியூசிலாந்து அணி தற்போது 17 ஓவர் முடிவில் 60 ரன்களை எடுத்து விளையாடி வருகிறது. அந்த அணி 3 விக்கெட்டுகளை இழந்துள்ளது. அந்த அணியின் கேப்டன் வில்லியம்சன் ஆட்டமிழந்ததால் அந்த அணி இப்போதைக்கு நெருக்கடியில் உள்ளது என்றே கூறலாம்.

இதையும் படிக்கலாமே :

நியூசிலாந்து தொடரின் ஓய்வினை நான் இப்படியே செலவழிக்க விரும்புகிறேன் – விராட் கோலி

மேலும் விளையாட்டு செய்திகள் குறித்து உடனடி தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்து இருங்கள்