கோலி மட்டும் ஓகே. மற்ற இந்திய வீரர்களின் குடும்பங்கள் இனி வெளிநாட்டு சுற்றுப்பயணம் வரக்கூடாது. அதனால் இவை அனைத்தும் நடக்கிறது – பி.சி.சி.ஐ தடாலடி

team-1

இந்திய அணி சமீபகாலமாக வெளிநாட்டு தொடர்களில் அதிகமாக பயணித்து வருகிறது. இதுபோன்ற வெளிநாட்டு கிரிக்கெட் தொடர்கள் அதிக நாட்கள் நடப்பதால் இந்திய அணி வீரர்கள் தங்களது குடும்பத்தினரையும் அவர்களுடன் அழைத்து செல்லும் பழக்கத்தினை வைத்துள்ளனர். 10 வருடங்களுக்கு முன் அணியில் ஒரு சிலரே குடும்பத்தினரை அழைத்து சென்றனர்.

icc

ஆனால், தற்போது கோலி, தவான், ரோஹித் மற்றும் தோனி, புஜாரா, ரஹானே என்று பலரும் அவர்களது குடும்பத்தினரை அழைத்து செல்கின்றனர். குடும்பத்தினருடைய செலவுகளை வீரர்கள் ஏற்றுக்கொண்டாலும் அவர்களுக்கு பாதுகாப்பு அளிக்க பி.சி.சி.ஐ அதிகாரிகள் சிரமப்படுவதாக தெரிவித்துள்ளனர். மேலும் அவர்களுக்கான உணவு மற்றும் தாங்கும் இடம் போன்றவற்றிலும் பல்வேறு சிக்கல்கள் உள்ளன என்றும் தெரிவித்துள்ளனர்.

மேலும், வீரர்களின் ஈடுபாடு குடும்பத்தினரால் தடைபடுகிறது. பயிற்சி முடிந்து வீரர்கள் குடும்பத்தினருடன் சுற்றிப்பார்க்க செல்கின்றனர். குறிப்பிட்ட நேராஹேவும் மீறி அவர்கள் நேரத்தினை செலவழிப்பதனால் அவர்களின் பாதுகாப்பு பிரச்னை அதிக அளவு உள்ளதால் இனி குடும்பத்தினைரை அழைத்து செல்ல விதிமுறைகளை இந்திய கிரிக்கெட் வாரியம் வகுத்துள்ளது. அதன்படி குடும்பத்தில் அனைவரையும் அனுமதிக்காமல் சிலரை மட்டும் கூட்டி செல்லும்படி விதிமுறை வகுக்கப்பட்டுள்ளது.

team

மேலும், இரண்டு பேருந்துகள் வைத்தும் கூட பேருந்துகள் பத்தவில்லை என்ற நிலைமை வந்துவிட்டதாகவும், பணத்தை பற்றி கூட கவலை இல்லை அத்தனை நபர்களையும் ஒரே நேரத்தில் கவனித்து பாதுகாப்பு அளிப்பது சிரமமான ஒன்றாக இருப்பதால் அடுத்த வெளிநாட்டு தொடரில் இருந்து பல விதிமுறைகள் கொண்டுவரப்படும் என்று தெரிகிறது. இருப்பினும், விராட் கோலி மட்டும் பி.சி.சி.ஐ அனுமதியுடன் தனது மனைவியை மட்டும் அழைத்து செல்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்கலாமே :

4ஆவது விக்கெட்டுக்கு 308 ரன்கள் குவித்து ஆஸ்திரேலிய ஜோடி சாதனை – கான்பெர்ரா மைதானம்

மேலும் விளையாட்டு செய்திகள் குறித்து உடனடி தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்து இருங்கள்