9, 18, 27 இந்த தேதியில் பிறந்தவர்களாக இருந்தால், நீங்கள் இப்படித்தான் இருப்பீர்கள்

birth-date-rasi-palan

9, 18, 27 இந்த தேதிகளில் பிறந்த நீங்கள் உங்கள் வாழ்க்கையில் எப்படி இருப்பீர்கள் என்பதை பற்றி தெரிந்து கொள்ளுங்கள். நீங்கள் பிறந்த தேதியின் கூட்டு எண் 9 ஆக இருந்தால் உங்களுக்கு உரிய கிரகம் செவ்வாய். உங்களின் குணம், தொழில், நண்பர்கள், உடலமைப்பு, இல்லற வாழ்க்கை இவைகளெல்லாம் எப்படி இருக்கும் என்பதை இந்த பதிவில் காண்போம்.

astrology wheel

குணம்
கூட்டு எண் 9ல் பிறந்த உங்களுக்கு அறிவுத்திறனும், புத்தி கூர்மையும் நன்றாக இருக்கும். ஆனால் உங்களுக்கு தெரியாத சில விஷயங்களாக இருந்தால்கூட அது உங்களுக்கு தெரிந்தது போல காட்டிக்கொள்வதில் திறமையானவர்கள். உங்களுக்குத் தெரியாத விஷயங்களைப் பேசி மற்றவர்களிடம் மாட்டிக் கொண்டால் கூட, நீங்கள் பேசியது சரிதான் என்று வாக்குவாதம் செய்து உங்களை நியாயப்படுத்திக் கொள்வீர்கள். அப்படிப்பட்ட பிடிவாதம் குணத்தை உடைய நீங்கள், அதனால் வரும் பிரச்சினைகளை துணிச்சலோடு சமாளித்து விடுவீர்கள். எந்த அறிவுரையும் உங்களுக்கு கூறினாலும் அதை அலசி ஆராயாமல் உங்கள் மூளைக்கு கொண்டு செல்ல மாட்டீர்கள். உங்கள் மனதிற்கு பிடித்தவர்களுக்கு ஏதாவது ஒரு பிரச்சனை என்றால் உடனே வந்து முன் நிற்பீர்கள். உங்களது கௌரவத்திற்கு எந்தவித ஒரு பாதிப்பும் வந்து விடாது என்று தெரிந்த பின்புதான் ஒரு செயலில் ஈடுபடுவீர்கள். உங்கள் மனதில் உள்ள குழப்பங்களை மற்றவர்களிடம் பகிர்ந்து கொள்ள மாட்டீர்கள். உங்களது கிரகம் செவ்வாய் என்பதால் பிறப்பிலேயே உங்களுக்கு துணிச்சலான தைரியம் இருந்திருக்கும். மற்றவர்களுக்கு உங்களின் துணை இருந்தால் போதும், உங்களின் துணை கொண்டே காரியத்தை சாதித்துக் கொள்ளலாம். ஆனால் மற்றவர்களிடம் உள்ள குற்றம், குறைகளை நீங்கள் கண்டுபிடித்து விட்டீர்கள் என்றால், அதை முதலில் வெளிப்படுத்தி சந்தோஷம் அடைந்து கொள்வீர்கள்.

தொழில்
துணிச்சல் குணம் கொண்ட நீங்கள் காவல் துறை, ராணுவம், தீயணைப்பு, மின்சாரம் இப்படிப்பட்ட துறைகளில் பணிபுரிபவர்களாக இருப்பீர்கள். எந்த தொழிலாக இருந்தாலும் அதில் சிறப்பாக செயல்படும் ஆற்றல் உங்களிடம் உண்டு. துணிச்சலுடன் செயல்படும் உங்களை அனைவரும் பாராட்டுவார்கள். பெரும்பாலானோர் அரசாங்கத்தில் பெரிய பதவியில் இருப்பதற்கும் வாய்ப்பு உண்டு. மருத்துவத்தில் அறுவைசிகிச்சையாளராகவும் இருப்பார்கள்.

numbers

நண்பர்கள்
அடுத்தவர்களுக்கு பணிந்து போகும் சுபாவம் உங்களுக்கு இருக்காது. இதனால் நீங்கள் செய்யும் உதவியாக இருந்தாலும் கூட, உங்களின் பேச்சு தோரணையின் காரணமாக, நீங்கள் செய்த உதவிக்கான பாராட்டு உங்களை வந்து சேராது. பதிலாக அவர்களின் இகழ்ச்சியான பேச்சுத்தான் கிடைக்கும். கூட்டு எண் 1, 2, 3 இந்த எண்களில் பிறந்தவர்களிடம் நீங்கள் நண்பராக இருக்க முடியும். கூட்டு எண் 4, 5, 7 இந்த தேதிகளில் பிறந்தவர்களுடன் உங்களால் நட்புறவு வைத்துக்கொள்ள முடியாது.

- Advertisement -

உடலமைப்பு
பார்ப்பதற்கு கம்பீரமாகவும், நடுத்தர உயரமும், ராஜநடையும், பார்வையில் சாந்தமும் கொண்டவர்களாக இருப்பீர்கள். உங்களது உடம்பில் அடிக்கடி காயங்களினால் ஏற்பட்ட தழும்புகள் இருக்கும். சூட்டினால் ஏற்படும் மஞ்சள் காமாலை, வயிற்று வலி போன்ற நோய்கள் வருவதற்கு வாய்ப்பு உள்ளது. முடிந்தவரை நல்ல பழக்கவழக்கங்களை மேற்கொள்வதன் மூலம் உடல் நலத்தை சீராக அமைத்துக் கொள்ளலாம்.

numbers

இல்லற வாழ்க்கை
கூட்டு எண் 9 ல் பிறந்தவர்களின் இல்லற வாழ்க்கையானது சிலருக்கு நல்லபடியாக அமைந்தாலும், சிலரின் வாழ்க்கையில் குழப்பங்கள் ஏற்படும். இதனால் மன வலிமையை இழக்காமல் உறுதியோடு போராடி, அனுசரித்து செல்பவர்களுக்கு வாழ்க்கையில் வரும் பிரச்சனைகளை சமாளித்து விடலாம். உங்கள் குடும்பத்தில், உங்களின் அதிகாரத்தை சரியான வகையில் உபயோகப்படுத்த வேண்டும் இல்லை என்றால் பிரச்சினைகள் அதிகரிக்கத்தான் செய்யும். நீங்கள் பேசுவதற்கு முன்பே பின் விளைவுகளை பற்றி யோசித்து விட வேண்டும். இதன்மூலம் பிரச்சனைகளிலிருந்து தப்பித்துக் கொள்ளலாம்.

அதிர்ஷ்ட தேதி -9, 18, 27
அதிர்ஷ்ட நிறம்-சிவப்பு
அதிர்ஷ்ட திசை-தெற்கு
அதிர்ஷ்ட கிழமை-செவ்வாய்
அதிர்ஷ்ட கல்-பவளம்
அதிர்ஷ்ட தெய்வம்-முருகன்

இதையும் படிக்கலாமே:
8, 17, 26 இந்த தேதியில் பிறந்தவர்களாக இருந்தால், நீங்கள் இப்படித்தான் இருப்பீர்கள்

இது போன்ற ஜோதிடம் சார்ந்த பல தகவல்களை அறிந்துகொள்ள எங்களோடு இணைந்திருங்கள்.

English Overview:
Here we have Birth date horoscope in Tamil. Pirantha thethi palan. Pirantha thethi jathagam. Pirantha thethi rasi palangal in Tamil.