உங்கள் நட்சத்திரத்திற்குரிய மலரை வைத்து மகாலட்சுமியை இப்படி வழிபட செல்வம் மேலும் பெருகும், தொழில் செழிக்கும் தெரியுமா?

money-lakshmi

ஒவ்வொரு நட்சத்திரக்காரர்களுக்கும் ஒவ்வொரு அதிபதிகள் தெய்வமாக இருப்பார்கள். அந்த தெய்வங்களை தொடர்ந்து அந்த நட்சத்திரகாரர்கள் வழிபட்டு வரும் பொழுது அவர்களுடைய செல்வ நிலை நிச்சயமாக உயரும். ஆனால் ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு தெய்வம், இஷ்ட தெய்வமாக இருக்கும். அவர்கள் அந்த இஷ்ட தெய்வங்களை மட்டுமே நம்பிக்கையோடு வணங்குவார்கள். அப்படி இருப்பவர்கள் மகாலட்சுமியை வழிபடலாம். செல்வத்திற்கு அதிபதியாக விளங்கும் மகாலட்சுமியை எப்படி வழிபட்டால் மேலும் செல்வம் பெருகும்? என்பதைத்தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ள இருக்கின்றோம்.

adhirshta-lakshmi1

இந்த பரிகாரத்தை வெள்ளிக்கிழமையில் செய்யலாம். அல்லது பௌர்ணமி தினம் மற்றும் பூரம் நட்சத்திரம் வரும் நாளில் செய்வது விசேஷமானது. இந்த பரிகாரத்தை பெரும்பாலும் வட இந்தியர்கள் செய்யும் ஒரு நம்பிக்கையான பரிகாரம் ஆகும். வட இந்தியர்கள் மகாலட்சுமியை அதிர்ஷ்ட தேவியாக பார்க்கின்றனர். அதிர்ஷ்டம் தரும் கடவுளாக மகாலட்சுமியை அவர்கள் வணங்குகின்றார்கள். இவரை வணங்கினால் செல்வ நிலை உயரும் என்றும், வியாபாரம் செழிக்கும் என்றும் நம்புகிறார்கள். இதனை அவர்கள் அனுபவபூர்வமாக உணர்ந்து வருகின்றார்கள். அதனை எப்படி செய்வது?

மகாலட்சுமி 26 நாமவளிகள்:
ஓம் தாராயை நம:
ஓம் வித்யாயை நம:
ஓம் முநின்யை நம:
ஓம் சரத்தாயை நம:
ஓம் ஜராயை நம:
ஓம் மேதாயை நம:

gajalakshmi

ஓம் ஸ்வதாயை நம:
ஓம் ஸ்வஸ்தியை நம:
ஓம் வர்மின்யை நம:
ஓம் பாலின்யை நம:
ஓம் ஜ்வாலின்யை நம:

- Advertisement -

ஓம் க்ருஷ்ணாயை நம:
ஓம் ஸ்மிருத்யை நம:
ஓம் காமாயை நம:
ஓம் உன்மத்யை நம:
ஓம் ப்ரஜாயை நம:

adhirshta-lakshmi

ஓம் சிந்தாயை நம:
ஓம் க்ரியாயை நம:
ஓம் க்ஷந்த்யை நம:
ஓம் சாந்த்யை நம:
ஓம் தாந்த்யை நம:

varalakshmi

ஓம் தயாயை நம:
ஓம் ஸ்வஸ்திதாயை நம:
ஓம் தூத்யை நம:
ஓம் கத்யாயை நம:
ஓம் ஷ்யாமளாயை நம:
ஓம் அதிர்ஷ்ட கலாயை நம:

adhirshta-lakshmi2

பூஜையில் கலசம் ஏந்திய மகாலட்சுமி படத்தை வையுங்கள். கலசம் இல்லை என்றால் கஜலக்ஷ்மி படத்தை வைக்கலாம். அதுவும் இல்லை என்றால் சாதாரண மகாலட்சுமி படமே போதுமானது. இந்த படத்திற்கு பூக்கள் மாலையாக கோர்த்து அலங்கரிக்க வேண்டும். சந்தனம், ஜவ்வாது கலந்த திலகம் இட வேண்டும். அதற்கு குங்குமம் வைக்க வேண்டும். பின்னர் மகாலட்சுமிக்கு பிடித்த இனிப்பு வகை எதையாவது வைக்க வேண்டும். சர்க்கரை பொங்கல், கல்கண்டு போன்ற நிவேதன பொருளையும் வைக்கலாம்.

nelli-maram1

பின்னர் அவற்றுடன் மகாலட்சுமியின் ஸ்வரூபமாக விளங்கும் நெல்லிக்கனியை கட்டாயம் வைக்க வேண்டும். இனிப்புடன், நெல்லிக்கனியையும் கட்டாயம் வைத்து மேற்கூறிய மகாலக்ஷ்மி மந்திரத்தை உச்சரிக்க வேண்டும். ஒருமுறை உச்சரித்தாலே போதும். நீங்கள் ஒவ்வொரு முறை உச்சரிக்கும் பொழுதும் உங்கள் நட்சத்திரத்திற்கு உரிய பூக்களை கொண்டு அர்ச்சனை செய்ய வேண்டும்.

archanai-poo

உங்கள் நட்சத்திரத்திற்கு உரிய பூக்கள் இதோ:
அஸ்வினி: சாமந்தி
பரணி: முல்லை
கார்த்திகை: செவ்வரளி
ரோகிணி: பாரிஜாதம்
மிருகசீரிஷம்: ஜாதி மல்லி

parijatham

திருவாதிரை: வில்வப்பூ
புனர்பூசம்: மரிக்கொழுந்து
பூசம்: பன்னீர் ரோஜா
ஆயில்யம்: செவ்வரளி
மகம்: மல்லிகை

paneer-rose-plant

பூரம்: தாமரை
உத்திரம்: கதம்பம்
அஸ்தம்: வெள்ளை தாமரை
சித்திரை: மந்தாரை
சுவாதி: பொன் அரளி
விசாகம்: இருவாட்சி

arali

அனுஷம்: சிவப்பு முல்லை
கேட்டை: பன்னீர் ரோஜா
மூலம்: வெள்ளை சங்குப்பூ
பூராடம்: விருட்சி
உத்திராடம்: சம்பங்கி

senbaga-poo1

திருவோணம்: சிவப்பு ரோஜா
அவிட்டம்: செண்பகம்
சதயம்: நீலோற்பவம்
பூரட்டாதி: வெள்ளை அரளி
உத்திரட்டாதி: நந்தியாவட்டம்
ரேவதி: செம்பருத்தி.

இதையும் படிக்கலாமே
இந்த 1 பொருளை கையில் வைத்துக்கொண்டு லட்சுமி குபேர பூஜையை செய்தாலே போதும். காலத்துக்கும் ஐஸ்வரியம் நம் வீட்டில் நிலைத்து நிற்கும்.

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.