இந்த 1 பொருளை கையில் வைத்துக்கொண்டு லட்சுமி குபேர பூஜையை செய்தாலே போதும். காலத்துக்கும் ஐஸ்வரியம் நம் வீட்டில் நிலைத்து நிற்கும்.

- Advertisement -

இன்றைக்கு நாம் சம்பாதிக்கும் பணம் ஒரு பெரிய விஷயமே கிடையாது. யார் வேண்டுமென்றாலும் எவ்வளவு பணத்தை வேண்டுமென்றாலும் சம்பாதிக்க முடியும். ஆனால், அந்த பணத்தை சாமர்த்தியமாக சேமித்து, வீண் விரயம் செய்யாமல் பணத்தை இரட்டிப்பாக்கும் வித்தையை கற்றுக் கொள்பவர்களுக்கு தான் லாபம். இந்த மாதம் சம்பாதித்த பணத்தினை, அடுத்த மாதம்  செலவழித்து விட்டால், அதன் மூலம் நமக்கு எந்த பிரயோஜனமும் இல்லை. ஆக சம்பாதிப்பதை விட சேமிபதில் தான் கஷ்டமே உள்ளது. இது நம்மில் நிறைய பேருக்கு தெரிந்திருக்கும். இருப்பினும் சேமிக்க முடியாமல் கஷ்டப்பட்டு வருகின்றோம்.

Lakshmi Guperan

நாம் சம்பாதிக்கும் பணம் நம் வீட்டில் தங்க வேண்டும் என்றால், லட்சுமி குபேரரின் ஆசீர்வாதத்தை முழுமையாக பெற வேண்டும். நம் வீட்டிற்குள் லட்சுமி குபேரரை அழைப்பது பெரிய விஷயமே கிடையாது. உண்மையான அன்போடு கூப்பிட்ட குரலுக்கு நிச்சயம் லட்சுமி தேவியும், குபேர பகவானும் வரத்தான் செய்வார்கள். அவர்களை எப்படி நம்முடைய வீட்டிலேயே நிலைநிறுத்துவது என்பதே பற்றிய ஒரு ஆன்மீக வழிபாட்டைத்தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

- Advertisement -

பொதுவாக பௌர்ணமி தினத்தில் நாம் செய்யக்கூடிய வழிபாடு எதுவாக இருந்தாலும் அது நமக்கு பல மடங்கு பலனைக் இரட்டிப்பாக கொடுக்கும் என்பதில் சந்தேகமே கிடையாது. அந்த வரிசையில் இந்த லட்சுமி குபேர பூஜையும் நீங்கள் பவுர்ணமி தினத்தன்று தொடங்குங்கள். வழக்கம் போல பூஜை என்றால் உங்கள் வீட்டு பூஜை அறையை சுத்தம் செய்து வைத்துக் கொள்ள வேண்டும். வாசனை மிகுந்த பூக்களால் சுவாமி படங்களுக்கு அலங்காரம் செய்துவிட்டு, விளக்கில் நல்லெண்ணெய் அல்லது நெய் ஊற்றி தீபம் ஏற்றிக் கொள்ளலாம்.

rudratcham-thiyanam

குறிப்பாக லட்சுமி குபேர பூஜைக்கு லட்சுமி தேவியும், குபேரரும் சேர்ந்த திரு உருவப்படம் வீட்டில் கட்டாயம் இருக்க வேண்டும். இல்லாதவர்கள் நீங்கள் ஏற்றும் தீப ஒளியை லட்சுமி குபேரராக பாவித்து பூஜை செய்யலாம். அடுத்து வரக்கூடிய நாட்களில் லட்சுமி குபேரர் திருவுருவப்படத்தை உங்கள் வீட்டில் வாங்கி வைத்துக் கொள்ளலாம். அதிலும் எந்த ஒரு தவறும் கிடையாது. குபேர பகவானுக்கும் லட்சுமி தேவிக்கும் கட்டாயம் பாலினால் செய்யப்பட்ட ஏதாவது ஒரு இனிப்பு பலகாரம் நிவேதனமாகப் படைக்க வேண்டும்.

- Advertisement -

இந்த பூஜைக்கு முக்கியமாக தேவைப்படும் அந்த ஒரு பொருள் ‘ருத்ராட்ச மாலை’. பஞ்சபூத சக்திகளை தன்னுள் அடக்கி வைத்திருக்கும் சிவனின் அம்சம் பொருந்திய, பஞ்ச முக ருத்ராட்ச மாலையை வாங்கி வைத்துக் கொள்ளுங்கள். 11 ருத்ராட்சம் சேர்ந்த மாலையாகவும் இருக்கலாம். 21 ருத்ராட்சம் சேர்ந்த மாலை ஆகவும் இருக்கலாம். அது உங்கள் வசதியை பொருத்தது. தீபம் ஏற்றி வைத்து விட்டு, லட்சுமி குபேரரை மனதார நினைத்துக்கொண்டு கையில் பஞ்சமுக ருத்ராட்ச மாலையை  உருட்டி கொண்டு ‘ஓம் லட்சுமி குபேராய நமஹ’ என்ற மந்திரத்தை உச்சரிக்க வேண்டும்.

இப்படியாக லக்ஷ்மி குபேர மந்திரத்தை ஒரு முறை உச்சரித்தால் அது ஆயிரம் மடங்கு பலனை உங்களுக்கு தரும் என்பதில் சந்தேகமே இல்லை. இந்த லக்ஷ்மி குபேர மந்திரத்தை 108 முறை உச்சரிப்பது நல்ல பலனைக் கொடுக்கும். உங்கள் குடும்பத்தோடு சேர்த்து உங்களுக்கு அடுத்து வரும் சந்ததியினரும் வறுமை இல்லாத செல்வ செழிப்போடு வாழ இந்த வழிபாட்டை தொடர்ந்து செய்து வரலாம்.

- Advertisement -

poojai arai

மாதம் தோறும் வரும் பௌர்ணமி தினத்தில் இந்த வழிபாட்டைச்  செய்யத் தவறியவர்கள், வியாழக்கிழமைகளில் இந்த பூஜையை அவரவர் வீட்டில் செய்யலாம். வியாழக்கிழமைகளில் பூஜையை செய்தால் தொடர்ந்து 3 அல்லது 5 வியாழக்கிழமைகள் பூஜை செய்வது நல்ல பலனைக் கொடுக்கும். லட்சுமி குபேரனின் ஆசீர்வாதத்தை முழுமையாக பெற, அந்த குபேரரை நம்முடைய வீட்டில் நிரந்தரமாக தங்க வைக்க ருத்ராட்ச மாலையை நீங்கள் இறுக்கிப் பிடித்துக் கொள்ளுங்கள். ஐஸ்வர்யத்தை நம் வீட்டில் நிலைத்து நிற்க வைக்க, சொல்லப்பட்டுள்ள சக்தி வாய்ந்த சுலபமான பரிகாரங்களில் இதுவும் ஒன்று.

இதையும் படிக்கலாமே
தங்கம் வாங்க முடியவில்லையே என்ற கவலை இனி வேண்டாம். குலதெய்வத்திற்கு இந்த பூஜையை செய்தால் தங்கம் தானாகவே வந்து உங்கள் வீட்டில் தங்கும்.

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

- Advertisement -