நொறுக்கு தீனியாக சாப்பிட சுவையான முறுக்கு செய்யும் முறை

muruku
- Advertisement -

வீட்டில் இருக்கும் சிறியவர் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் ஒரு ஸ்னாக்ஸ் முறுக்கு. பொதுவாக நமது அனைவரது வீட்டிலும் பண்டிகை காலமான தீபாவளி பொங்கல் போன்ற தினங்களில் முறுக்கு செய்து சாப்பிடுவது வழக்கம். இப்போது இந்த பதிவில் சுவையான முறுக்கு செய்வது எப்படி என்று பாப்போம் வாருங்கள்.

muruku_1

முறுக்கு செய்ய தேவையான பொருட்கள்:

- Advertisement -

தோல் நீக்கிய வெள்ளை உளுந்து – 1/2 கப்
கப் அரிசி மாவு – 2 கப்
பொட்டுக்கடலை மாவு – 1/4 கப்
பெருங்காய தூள் – 1/2 டீஸ்பூன்
சீரகம் – 2 டீஸ்பூன்
எள்ளு – சிறிதளவு
உப்பு – தேவையான அளவு
எண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன்

முறுக்கு செய்முறை :

தோல் நீக்கிய வெள்ளை உளுந்தினை எடுத்து கடாயில் போட்டு லேசாக நிறம் மாறாமல் வறுத்து எடுக்கவும். உளுந்தின் நிறம் மாறும் அளவிற்கு முறுக்கின் நிறம் மாறும் என்பதால், மிதமான சூட்டில் வெண்மை நிறம் மாறாமல் வறுத்து எடுக்கவும்.

- Advertisement -

muruku_2

பிறகு வறுத்து எடுத்த உளுந்தினை மிக்சியில் போட்டு அரைத்து கொள்ளவும். அரைத்து எடுத்த உளுந்தமாவுடன் 2 கப் அரிசி மாவு மற்றும் 1/4 கப் பொட்டுக்கடலை மாவு சேர்த்து அதனுடன் 1/2 டீஸ்பூன் பெருங்காய தூள் சேர்க்கவும்.

பிறகு இவற்றுடன், 2 டீஸ்பூன் சீரகம் மற்றும் சிறிதளவு எள்ளு சேர்த்து தேவையான அளவு உப்பினை சேர்க்கவும். இவைகள் அனைத்தையும் 2 டேபிள் ஸ்பூன் சூடான எண்ணெய் மற்றும் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி பிசைந்து கொள்ளவேண்டும்.

- Advertisement -

muruku_3

பிறகு முறுக்கு அச்சினில் வைத்து முறுக்கினை சற்று இடைவெளியோடு சுத்த வேண்டும். அவ்வாறாக இடைவெளிவிட்டால் தான் முறுக்கு சரியான அளவில் முழுமையாக எண்ணையில் வேகும். முறுக்கு அச்சினில் சுற்றிய முறுக்கை வாணலில் உள்ள எண்ணெய்யில் போட்டு நன்றாக வேகவிட்டு நிறம் மாறாமல் எடுத்தால் சுவையான முறுக்கு ரெடி.

muruku_4

இந்த அளவிற்கான மொத்த முறுக்குகளின் எண்ணிக்கை – 30
சாப்பிடும் நபர்களின் எண்ணிக்கை – 5

இதையும் படிக்கலாமே:
ரசகுல்லா செய்யும் முறை

இது போன்று மேலும் பல சமையல் குறிப்புக்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

Here we have Murukku recipe in Tamil. It is also called as Murukku seimurai or Murukku seivathu eppadi in Tamil or Murukku preparation in Tamil.

- Advertisement -