வீட்டில் கருப்பு நிற பிராணிகளை வளர்ப்பதன் மூலம் உண்டாகும் பலன்கள் பற்றி தெரியுமா? கருப்பு நமக்கு எந்தவித பாதிப்பை கொடுக்கிறது என்று தெரியுமா?

black-animals
- Advertisement -

கருப்பு என்றாலே நம் சமூகத்தில் இன்று வரை அபசகுணமாக தான் பார்க்கப்படுகிறது. பிறந்தநாள், திருமணநாள், இறைவனுக்கு பூஜை செய்யும் விசேஷ நாட்கள் இவ்வாறான தினங்களில் கருப்பு நிற ஆடையை தவிர்த்து விடுவார்கள். பூஜைக்கு புதிய ஆடைகள் படைப்பதாக இருந்தாலும் அதிலும் சிறு துளி கூட கருப்பு இருக்கக் கூடாது என்று சொல்வார்கள். எனவே கருப்பு என்றாலே அது எதிர்மறையாக தான் பார்க்கப்படுகிறது. இவ்வாறு கருப்பு நிறத்தின் பாதிப்புகள் மற்றும் பலன்கள் பற்றியும் கருப்பு நிற விலங்குகளை வீட்டில் வளர்ப்பதன் மூலம் உண்டாகும் நன்மைகள் பற்றியும் தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

black

கருமை நிறம் பற்றி ஆன்மீக ரீதியாகவும், அறிவியல் ரீதியாகவும் பல வித கருத்துக்கள் இருக்கின்றன. அறிவியல் ரீதியாக பார்த்தோம் என்றால் கருப்பு நிறம் அனைத்து ஒளி அலைகளையும் தன்னுள் ஈர்க்கக் கூடியது. மற்றும் அனைத்து வித அதிர்வலைகளையும் தன்னுள் ஈர்க்கக் கூடியது.

- Advertisement -

எனவே தான் கருப்பு நிற ஆடையை அணியும் பொழுது அவை சூரியனிலிருந்து வெளிப்படும் அனைத்து வித ஒளிக்கற்றைகளை தன்னுள் ஈர்த்துக் கொள்வதால் நமது உடலின் உஷ்ண தன்மை அதிக படுத்தப்படுகிறது. இதன் காரணமாகவே கருப்பு நிற ஆடைகளை கோடை காலங்களில் தவிர்க்க வேண்டும் என்று பலரும் கூறுகிறார்கள்.

black

ஆன்மீக ரீதியாக பார்த்தோம் என்றால் கருப்பு நிறத்திற்கு பலவித நன்மை கொடுக்கும் குணங்களும் இருக்கிறது. வீட்டில் வளர்க்கப்படும் விலங்குகள் மூலமாக நமக்கு வரப்போகும் ஆபத்தை முன் கூட்டியே அறிய முடிகிறது. அவ்வாறு இந்த விலங்குகளான நாய், பூனை, ஆடு, மாடு, கோழி, மீன்கள் இவை அனைத்தையும் வீட்டில் வளர்க்க முடியும்.

- Advertisement -

ஒருவர் வாழ்க்கையில் நன்றாக பணம் சம்பாதித்து மெல்ல மெல்ல உயர்ந்த நிலைக்கு சென்று கொண்டிருந்தார்கள் என்றால் அவர்களுடன் இருக்கும் அனைவரும் சந்தோஷம் கொள்வதில்லை. சிலர் அவர்களை பார்த்து பொறாமைப் படுவார்கள். அவர்களின் முன்னேற்றத்தை விரும்பாதவர்கள் அவர்களின் வாழ்க்கை முன்னேற்றத்தை தடுப்பதற்காக பில்லி, சூனியம் போன்ற ஏவல்களையும் செய்வார்கள்.

black-rope-karuppu-kayiru

இவ்வாறு ஒருவரின் எதிர்மறை எண்ணங்கள் நம்மை பாதிக்காமல் இருக்க நமது வீட்டில் வளர்க்கப்படும் கருப்பு நிற பிராணிகள் அவற்றை ஈர்த்துக் கொள்கின்றன. அவ்வாறு கருப்பு என்றாலே அதன் பொதுவான குணம் அனைத்து விதமான அதிர்வலைகளையும் தன்னுள் இழுத்துக் கொள்வதாகும். எனவே நம்மை சுற்றி வரும் எதிர்மறை அதிர்வுகளையும் இந்த விலங்குகள் உள்வாங்கிக் கொண்டு எதிர்மறை அதிர்வுகள் நம்மை பாதிக்காமல் இருக்க பாதுகாக்கின்றன.

இதற்காக கருப்பு நிற நாயை நமது வீட்டில் வளர்த்து வந்தோம் என்றால் அவை தனது எஜமானனுக்கு எந்த பிரச்சினை வந்தாலும் முதலில் தனது உயிரைக் கொடுத்தாவது அந்தப் பிரச்சினையிலிருந்து அவர்களை காப்பாற்றி விடும். ஆனால் தனக்கே தெரியாமல் எதிர்வினை சக்திகளை தன்னுள் வாங்கிக் கொண்டும் நம்மை பாதுகாக்கிறது.

black-fish

இதேபோல்தான் கருப்பு நிறத்தில் நாம் வளர்க்கும் அனைத்து விலங்குகளும் நம்மைப் பாதுகாக்கின்றன. அவ்வாறு வீட்டில் வளர்க்கப்படும் மீன்கள் எந்த வித பாதிப்பும் இல்லாமல் திடீரென இறந்து விடும். இவைகளும் நமக்கு உண்டாகும் பாதிப்பை ஏற்றுக்கொண்டு அதனால் இவற்றின் உயிரிழப்பும் நிகழ்ந்திருக்கலாம். எனவே கருப்பு என்பது நம்மைப் பாதுகாக்கும் கவசமாகவும் பார்க்கப்படுகிறது.

- Advertisement -