முகத்தில் அழகை எடுத்துக்காட்டுவதில் கண்களுக்கு எப்பொழுதுமே முதலிடம் உண்டு. முகத்தை நீங்கள் என்ன தான் அழகு படுத்திக் கொண்டாலும் எவ்வளவு தான் நேர்த்தியாக உடை அணிந்து கொண்டாலுமே கூட, கண்கள் பார்க்க பளிச்சென்று பிரகாசமாக இல்லாமல் கருவளையம் விழுந்து சோர்ந்து காணப்பட்டால் முகம் நன்றாக இருக்காது. ஆகையால் முதலில் கண்கள் எப்பொழுதும் சோர்வு இல்லாமல் பிரகாசமாக கண்களை சுற்றி கருவளையம் இன்றி கவனமாக பார்த்துக் கொண்டால் தான் நீங்கள் எளிமையாக அலங்காரம் செய்து கொண்டால் கூட மிகவும் அழகாகவே தெரிவீர்கள்.
இந்த அழகு குறிப்பு பதிவில் கருவளையத்தை நீக்கக் கூடிய அருமையான குறிப்பை பற்றி தான் தெரிந்து கொள்ளப் போகிறோம். இதை தொடர்ந்து ஐந்து நாட்கள் போட்டாலே உங்கள் கண் கருவளையம் மறைய தொடங்கி விடும். அதை மட்டும் இன்றி இதை தொடர்ந்து போடும் போது கருவளையம் முற்றிலுமாக நீங்கி கண் பிரகாசமாக மின்னும். வாங்க இந்த பேக்கை எப்படி தயாரிப்பது என்று தெரிந்து கொள்ளலாம்.
கண் கருவளையம் நீங்க
இதற்கு ஒரு முழு நீள கற்றாழை மடலை எடுத்துக் கொள்ளுங்கள். அதன் தோல் நீக்கி நான்கு ஐந்து முறை தண்ணீரில் சுத்தமாக கழுவிய பிறகு ஜெல்லை எடுத்து மிக்ஸி ஜாரில் அரைத்து ஒரு கிண்ணத்தில் ஊற்றிக் கொள்ளுங்கள். அடுத்து ஒரு சிறிய கிண்ணத்தில் இரண்டு ஸ்பூன் சோள மாவை சேர்த்து ரெண்டு ஸ்பூன் ரோஸ் வாட்டரும் சேர்த்து நன்றாக கரைத்துக் கொள்ளுங்கள்.
இப்போது அடுப்பில் பற்ற வைத்து மிதமான தீயில் வைத்த பிறகு நாம் அரைத்து ஊற்றி ஆலுவேரா ஜெல்லை வையுங்கள். அது லேசாக சூடான உடன் நாம் ஏற்கனவே கரைத்து வைத்த சோலமாவு கரைசலையும் மெதுவாக ஊற்றி நன்றாக கலந்து விடுங்கள். மேலும் இத்தனுடன் ஒரு ஸ்பூன் ஆலிவ் எண்ணெய் சேருங்கள். இந்த ஆலிவ் எண்ணெய் சேர்ப்பதால் இந்த கிரீம் அதிக நாட்கள் கெட்டுப் போகாமல் இருக்கும். அடுத்து இத்துடன் அரை எலுமிச்சை பழ சாறையும் கலந்து லேசாக சூடானதும் அடுப்பை அணைத்து விடுங்கள் இது நன்றாக ஆறட்டும்.
அதன் பிறகு இதை ஒரு கண்ணாடி பாட்டிலில் போட்டு பிரிட்ஜில் ஸ்டோர் செய்து வைத்துக் கொள்ளுங்கள் தினமும் இரவு தூங்கும் முன்பு முகத்தை சுத்தம் செய்த பிறகு உங்கள் கண்களை கருவளையத்தின் மேல் இந்த கிரீமை தடவி விட்டு உறங்கி விடுங்கள். ஒரு வாரத்திற்குள் கருவளையம் தொடர்ந்து போடும்போது முற்றிலுமாக நீதி முகம் பிரகாசமாக இருக்கும்.
இதையும் படிக்கலாமே: கழுத்து, கை, கால் மூட்டுகளில் இருக்கும் கருமையை நீக்குவதற்கு பீல் ஆஃபில் இந்த பொருட்களை சேர்த்து உபயோகப்படுத்தி பாருங்கள். கருமை அனைத்தையும் உரித்தெடுத்து பொன்னிறமாக மாற்றி விடும்.
அதுமட்டுமின்றி இந்த கிரீமை குளித்து முடித்த பிறகு முகத்திற்கு நார்மலாக போடும் மாய்ஸ்ட்ரைசர் போலவும் கூட பயன்படுத்திக் கொள்ளலாம். முகப்பருக்களின் மீது இதைத் தொடர்ந்து தடவி வரும் போது முகப்பரு மறைவதுடன் முகப்பரு வந்ததற்கான தழும்பும் இருக்காது. கண் கருவளையம் நீங்குவதற்கான இந்த எளிய குறிக்கும் உங்களுக்கும் பிடித்திருந்தால் நீங்கள் இதை முயற்சி செய்து பாருங்கள் நிச்சயம் கருவளையம் நீங்கி முகம் அழகாக மாறும்.