கழுத்து, கை, கால் மூட்டுகளில் இருக்கும் கருமையை நீக்குவதற்கு பீல் ஆஃபில் இந்த பொருட்களை சேர்த்து உபயோகப்படுத்தி பாருங்கள். கருமை அனைத்தையும் உரித்தெடுத்து பொன்னிறமாக மாற்றி விடும்.

neck
- Advertisement -

அனைவரும் தங்கள் உடல் முழுவதும் ஒரே நிறமாக இருக்க வேண்டும் என்று தான் ஆசைப்படுவார்கள். ஆனால் அதற்கு விதிவிலக்காக கழுத்தில் இருக்கக்கூடிய கருமையால் அவர்கள் முக அழகே கெட்டுவிடும். மேலும் கை, கால்களில் இருக்கும் முட்டிகளில் கருமை நிறம் படர்ந்து மிகவும் அசிங்கமாக இருக்கும். அந்த சூழ்நிலையில் வீட்டில் நாம் முகத்திற்காக உபயோகிக்கும் பீல் ஆஃபில் எந்த பொருட்களை கலந்து உபயோகப்படுத்தினால் அந்த கருமை நிறம் முற்றிலுமாக நீங்கிவிடும் என்று தான் இந்த அழகு குறிப்பு குறித்த பகுதியில் நாம் பார்க்கப் போகிறோம்.

பொதுவாகவே அனைவருக்கும் தங்கள் உடலில் சில இடங்களில் கருமை நிறம் படர்ந்து இருக்கும். அது கை முட்டி, கால் முட்டி, தொடை பகுதி, அக்குள் பகுதி அல்லது கழுத்தின் பின்புறமாகவும் இருக்கலாம். இந்த பகுதிகளில் இருக்கக்கூடிய கருமைகளை நீக்குவதற்கு உரிய மிகவும் எளிமையான குறிப்பை தான் பார்க்கப் போகிறோம்.

- Advertisement -

எந்த நிறுவனத்தை சேர்ந்த பீல் ஆஃபாக இருந்தாலும் பரவாயில்லை. உபயோகிக்கும் இடத்திற்கு ஏற்றவாறு எடுத்துக்கொள்ளுங்கள். இதில் ஒரு ஸ்பூன் அளவிற்கு கூறப்பட்டுள்ளது. அதைவிட அதிகமாக எடுத்தால் மற்ற பொருட்களை அளவையும் அதிகரித்துக் கொள்ள வேண்டும்.

பீல் ஆஃபில் ஒரு ஸ்பூன் எடுத்து ஒரு பவுலில் சேர்க்க வேண்டும். பிறகு அதில் அரை எலுமிச்சம் பழத்தை பிழிந்து விட வேண்டும். அடுத்ததாக அதனுடன் அரை ஸ்பூன் கஸ்தூரி மஞ்சள் தூளை சேர்க்க வேண்டும். கஸ்தூரி மஞ்சள் இல்லாத பட்சத்தில் சாதாரண மஞ்சள் தூளையும் பயன்படுத்திக் கொள்ளலாம்.

- Advertisement -

பிறகு அதனுடன் அரை ஸ்பூன் தேங்காய் எண்ணெயை சேர்க்க வேண்டும். இவை அனைத்தையும் நன்றாக கலந்து கொள்ள வேண்டும். கலந்த இந்த கலவையை உடம்பில் எந்த இடத்தில் கருமை இருக்கிறதோ அந்த இடத்தில் தடவி நன்றாக உலர விட வேண்டும்.

நன்றாக உலர்ந்த பிறகு அதை தோலை உரிப்பது போல் உரித்து எடுக்க வேண்டும். ஒரே உபயோகத்தில் நல்ல மாற்றத்தை உங்களால் காண இயலும். மஞ்சளை உபயோகிப்பதால் நிறம் பொன்னிறமாக மாறும். மேலும் தேங்காய் எண்ணெய் அதில் இருக்கும் அலர்ஜி தன்மையை நீக்கிவிடும். எழுமிச்சையில் இருக்கக்கூடிய ப்ளீச்சிங் ஏஜென்ட் கருமை நிறத்தை போக்க உதவும். அடர்ந்த கருமை நிறமாக இருக்கும் பட்சத்தில் வாரத்திற்கு இரண்டு முறை இதை பயன்படுத்த வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்கலாமே: காண்போரை கொள்ளை கொள்ளும் பேரழகியாக மாறி அசர வைக்கும் அழகைப் பெற கொஞ்சம் உளுந்து இருந்தால் அத்துடன் இந்த ஒரு பொருளை சேர்த்து பேக் போட்டுக் கொள்ளுங்கள்.

மிகவும் எளிமையான முறையில் நாம் இந்த பீல் ஆஃபை செய்து உபயோகப்படுத்தி கருமை நிறத்தை முற்றிலமாக நீக்குவோம்.

- Advertisement -