இடுப்பில் அல்லது காலில் கருப்பு கயிறு கட்ட போறீங்களா? அப்படின்னா இதை தெரிஞ்கிட்டு அப்புறமா கட்டிக்கோங்க!

black-rope-karuppu-kayiru1
- Advertisement -

நம் முன்னோர்கள் நமக்கு சொல்லிக் கொடுத்த ஒவ்வொரு விஷயத்தையும் நாம் கடைப்பிடிக்கிறோமோ! இல்லையோ! ஆனால் ஒரு சில விஷயங்களையாவது இன்று வரை தொடர்ந்து கடைபிடித்து வந்து கொண்டிருக்கிறோம். அந்த வகையில் இடுப்பில் கருப்பு கயிறு அணிந்து கொள்வது, கையில் கயிறு கட்டிக் கொள்வது, காலில் கயிறு கட்டிக் கொள்வது என்று திருஷ்டிக்காக ஏதாவது ஒரு இடத்தில் கருப்பு கயிறு கட்டிக் கொள்வது என்பது அனைவருமே செய்து வருகிறோம். இந்த கருப்பு கயிறு ஏன் கட்டாயம் அணிய வேண்டும்? அதை அணியும் முறை என்ன? இதைத்தான் இந்த பதிவின் மூலம் இனி தெரிந்து கொள்ள இருக்கிறோம்.

araignaan kayiru

கருப்பு கயிறு கட்டிக் கொள்வது என்பது வெறும் திருஷ்டிக்காக மட்டுமல்ல, நம் உடம்பின் ஏதாவது ஒரு பகுதியில் கருப்பு கயிறு அணிந்து கொண்டிருப்பது நம்முடைய எண்ணங்களை தெளிவாக வைப்பதற்கு மிகவும் அவசியமாகும். உதாரணத்திற்கு ஒரு விஷயத்தை உண்ணிப்பாக கவனித்து பாருங்கள். நீங்கள் கைகளில் கருப்பு கயிறு அணிந்து கொண்டிருக்கிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம். அந்த கயிறு நாளாக நாளாக இத்து போக ஆரம்பித்துவிடும்.

- Advertisement -

ஒரு கட்டத்தில் அந்த கயிறை அறுத்து விடுவீர்கள். மீண்டும் புதிய கயிறை உடனே மாற்றாமல் இருந்து பாருங்கள். கயிறு கட்டிக் கொண்டிருக்கும் பொழுது உங்களிடம் இருக்கும் நேர்மறை ஆற்றல்கள் அதிகரித்து இருக்கும். அந்தக் கயிறு அவிழ்த்தவுடன் ஏதோ ஒன்றை இழந்தது போன்ற உணர்வு ஏற்படும். மீண்டும் புதிய கயிறை மாற்றும் பொழுது உங்களை அறியாமலேயே புது பலம் பிறக்கும். கடவுள் நம்முடன் இருக்கிறார் என்கிற ஏதோ ஒரு சிறிய நம்பிக்கை தான் அதற்கு காரணம்.

black-rope

சிறுவயதிலிருந்தே நமக்கு இதை பெரியவர்கள் சொல்லி சொல்லி வைத்து வளர்த்து வந்திருப்பார்கள். அது ஆழமாக பதிந்த மனதிற்குள் கயிறு இல்லை என்றவுடன் பலம் இழந்தது போல் ஒரு உணர்வு ஏற்படுகிறது. கடவுள் நம்முடன் இருக்கிறார் என்கிற உணர்வு இருந்து கொண்டு இருந்தால் எதிர்மறை எண்ணங்களுக்கு அங்கு இடமே இல்லாமல் போய் விடுகிறது. இந்த காரணத்தினால் தான் நம் உடலில் ஏதாவது ஒரு இடத்தில் கருப்பு கயிறு இருக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.

- Advertisement -

மேலும் கருப்பு என்பது திருஷ்டியை போக்கும் நிறமாகவும் உள்ளது. உங்கள் மேல் விழும் திருஷ்டியை அந்த கருப்பு கயிறு ஆனது ஈர்த்துக் கொள்ளும். எனவே கைகளில், கால்களில், இடுப்பில், கழுத்தில் என்று ஏதாவது ஒரு இடத்தில் கட்டாயம் கருப்பு கயிறு அணிந்து கொண்டிருங்கள். மேலும் கறுப்பு கயிறு அணியும் போது சில விதிமுறைகளையும் கையாள வேண்டும். கோவில்களில் கொடுக்கப்படும் சாமி கயிறு அணியும் பொழுது அதில் இருக்கும் முடிச்சுகள் மந்திரங்கள் சொல்லி போடப்பட்டவையாக இருக்கும். அதே போல் நம் வீட்டிலும் கருப்பு கயிறு அணியும் போது மந்திரங்களைச் சொல்லி முடிச்சுகள் போட்டு கட்டிக் கொள்வது சிறந்த பலனை கொடுக்கும்.

karuppu-kayiru

நீங்கள் புதிதாக கருப்பு கயிறு கட்டிக் கொள்ள விரும்பினால் செவ்வாய் அல்லது வெள்ளிக் கிழமைகளில் கட்டிக் கொள்வது நல்லது. பூஜை அறையில் கிழக்கு நோக்கி உட்கார்ந்து கொள்ளுங்கள். நீங்கள் அணிந்திருக்கும் கயிரை உங்கள் உடம்பின் அளவிற்கு ஏற்ப கத்தரித்துக் வைத்துக் கொள்ளுங்கள். இடுப்பில் மற்றும் கழுத்தில் அணியும் கயிறு ஒன்பது முடிச்சுகளையும், கால் மற்றும் கைகளில் அணிந்து கொள்ளும் கயிற்றில் மூன்று முடிச்சுகளும் போட்டுக் கொள்ள வேண்டும்.

- Advertisement -

Perumal Sivan

ஒவ்வொரு முடிச்சை போடும் பொழுதும் ‘ஓம் நமச்சிவாய’ அல்லது ‘ஓம் நமோ நாராயணாய’ என்கிற மந்திரங்களை உங்களுக்கு பிடித்த கடவுள்களுக்கு ஏற்ப உச்சரித்துக் கொள்ளுங்கள். அதன் பிறகு அதனை எங்கு கட்டிக் கொள்ள வேண்டுமோ அந்த இடத்தில் கட்டிக் கொள்ளுங்கள். ஆறு மாதத்திற்கு ஒரு முறை இந்த கயிற்றை புதியதாக மாற்றிக் கொள்வது மிகவும் நல்லது என்பதையும் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.

இதையும் படிக்கலாமே
வீட்டு வாசலில் நீங்கள் விளக்கு ஏற்றும் பொழுது இந்த ஒரு தவறை மட்டும் செய்யாதீர்கள்! இது வந்த மகாலட்சுமியை வெளியில் துரத்துவதற்கு சமமாகும்.

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

- Advertisement -