பணவரவு தரும் இந்த மஞ்சளுக்கு இருக்கும் மகிமைகள் கேட்டால் நீங்களே வியந்து போவீர்கள்! அப்படி என்ன மஞ்சள் அது?

karu-manjal-cash

எல்லோருக்கும் சாதாரண மஞ்சள், கஸ்தூரி அல்லது விரலி மஞ்சள் இவைகளை தான் அதிகமாக தெரியும். ஆனால் இன்னும் ஒரு மஞ்சள் இருக்கிறது. அதைத் தான் கரு மஞ்சள் என்று கூறுவார்கள். கருத்துப் போய் உள்ள இந்த மஞ்சள் உள்ளே நீல நிறத்தில் இருக்கும். வட மாநிலங்களில் இந்த மஞ்சளை பணத்தை ஈர்ப்பதற்கு மற்றும் ஆன்மீக காரியங்களில் பயன்படுத்துவது வழக்கம். மருத்துவ குணம் நிறைந்த இந்த மஞ்சளை பற்றிய வியக்க வைக்கும் உண்மைகள் இது தான். அதனை தான் இந்த பதிவின் மூலம் இனி தெரிந்து கொள்ளப் போகிறோம். வாருங்கள் பதிவிற்குள் போகலாம்.

navagragam

பொதுவாக கிரக தோஷம் இருப்பவர்கள் இந்த மஞ்சளை கருப்பு அல்லது சிவப்பு நூலில் கட்டி கழுத்தில் போட்டுக் கொள்வார்கள் அல்லது தாயத்தாக கையிலும் கட்டிக் கொள்வார்கள். இந்த மஞ்சள் உடம்பில் இருக்கும் வரை தோஷங்கள் எதுவும் தாக்குவதில்லையாம். சக்தியுள்ள கருமஞ்சள் சனி பகவான் மற்றும் ராகுவால் ஏற்படும் பாதிப்புகளையும் குறைகிறது.

பணம் வேண்டி வெளியில் புறப்பட்டு சென்றால் இந்த மஞ்சளை சிறிது கல்லில் இழைத்து நெற்றியில் திருநீறு போல பூசிக் கொண்டு செல்லுங்கள். கண்டிப்பாக சென்ற இடத்தில் எதிர்பார்த்த பணம் கிடைக்கும். பணத்தை ஈர்ப்பதில் கிராம்பை போல, கருமஞ்சளும் முக்கிய பங்கு வகிக்கிறது.

karu-manjal

கொடுத்த பணம் வசூலாகாத சூழ்நிலையில் இந்த கருமஞ்சளை கொண்டு சென்று பாருங்கள். நீண்ட நாள் வாசூலாக பணம் கூட சுலபமாக வசூலாகிவிடும். பணத்தை கொடுத்து விட்டு அதை திரும்ப வாங்குவதற்குள் நாய் படாத பாடுதான். அதை விட கொடுமை வாங்கியவர்கள் பேசும் பேச்சு. கடனை வசூலிக்க போனோமா? இல்லை நாம் தான் அவர்களிடத்தில் கடன் வாங்கினோமா? என்பது போல ஆகி விடும். இதற்கு தீர்வாக கருமஞ்சள் உதவி செய்யும்.

- Advertisement -

அதே போல நிறைய கடனை வாங்கி விட்டு அதை அடைக்க முடியாமல் கஷ்டபடும் பொழுதும், இதே போல தான் நிலைமை இருக்கும். ஏண்டா கடன் வாங்கினோம்? என்று வெறுத்து போய்விடும். நீண்ட நாளாக அடைக்க முடியாத கடனை கூட உங்கள் பணப்பெட்டியில் இந்த கரு மஞ்சளை வைப்பதன் மூலம் அடைத்து விடலாம். கரு மஞ்சள் இருக்கும் இடத்தில் பண ஈர்ப்பு இருக்கும். பணப் பிரச்சினைகள் நீங்கும்.

money

சிகப்பு அல்லது பச்சை நிற பட்டுத்துணியில் இந்த மஞ்சளை வைத்து இறுக்கமாக கட்டி அவற்றை பணம் இருக்கும் இடங்களில் வைத்து விட்டால் போதும். அந்த இடத்தில் பணவரவு அதிகமாக இருக்கும் என்று சாஸ்திரத்தில் சொல்லப்பட்டுள்ளது. பச்சை கற்பூரம் போன்றே, கரு மஞ்சளும் பணவரவிற்கு பெருமளவு பயன்படுத்தப்பட்டு வருகிறது.

karu-manjal1

வட மாநிலங்களில் நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும் கருமஞ்சள் இங்கு சுலபமாக கிடைப்பதில்லை என்றாலும் அவைகள் கிடைத்தால் தவறாமல் வாங்கி வைத்துக் கொள்ளுங்கள். பணத்தை ஈர்க்க பெருமளவு பயன்படும் கருமஞ்சள் உங்களுடைய பிரச்சினைகளை தீர்க்கும். அது மட்டுமல்லாமல் கிரக தோஷங்கள் நீங்கவும் கருமஞ்சள் உபயோகப்படுத்தலாம்.

fight2

மேலும் கருமஞ்சள் கணவன்-மனைவி பிரச்சனையையும் தடுக்கும். கணவனுடன் மனஸ்தாபம் இருந்தால் மனைவியானவள் இந்த கரு மஞ்சளை வைத்து முகத்தில் பூசி குளித்தால் அந்த வசீகரத்தால் கணவனுடைய கோபம் தணியும் என்று கூறப்படுகிறது. கருமஞ்சள் எதைத் தொட்டாலும் பொன்னாக்கி காட்டக்கூடிய ஆற்றல் கொண்டுள்ளது என்றும், அவற்றில் காளி தேவியும், பைரவரும் வாசம் செய்வதாக சாஸ்த்திரங்கள் கூறுகிறது.

இதையும் படிக்கலாமே
இந்த 1 பொருளுக்கு இவ்வளவு மகத்துவமா? கிராம்பு பரிகாரத்தின் வியக்க வைக்கும் உண்மைகள் நீங்களும் தெரிந்து கொள்ளுங்கள்.

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.