போகி அன்று செய்யக்கூடாத தவறு

bogi
- Advertisement -

ஒரு பண்டிகை வருகிறது என்றால், அதற்கு பின்னால் நம்முடைய முன்னோர்கள் நிறைய நல்ல விஷயங்களை மறைத்து வைத்திருக்கிறார்கள். அந்த வகையில் ‘பழையன கழிதலும் புதியன புகுவதும்’ தான் இந்த போகிப் பண்டியின் தாதரியமாக நமக்கு சொல்லப்பட்டுள்ளது. வீட்டை சுத்தம் செய்து, வீட்டில் இருக்கும் பழைய பொருட்களை எல்லாம் எடுத்து நெருப்பில் போட்டு பொசுக்கி, தை பிறந்ததும் புது வாழ்க்கைக்கு வழிகாட்ட, இந்த போகிப் பண்டிகையை கொண்டாடுகின்றோம்.

வெறும் பழைய பொருட்களை தூக்கி போடுவதற்காக மட்டும் இந்த பண்டிகை கிடையாது. நம்முடைய கஷ்ட நஷ்டங்கள், துன்பங்கள், கோபதாபங்கள், எல்லாவற்றிற்கும் சேர்த்து இந்த போகி நெருப்பில் நாம் தூக்கி போட்டிடனும். இதோடு சேர்த்து இந்த போகி பண்டிகை அன்று நாம் ஒரு சில விஷயங்களையும் சேர்த்து கடைப்பிடித்தாக வேண்டும். போகி பண்டிகை அன்று நாம் எதையெல்லாம் செய்ய வேண்டும். எதையெல்லாம் செய்யவே கூடாது என்பதை பற்றிய ஆன்மீகம் சார்ந்த சில தகவல்களை தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

- Advertisement -

போகி அன்று செய்யக்கூடாதவை

பொதுவாகவே இந்த போகி பண்டிகைக்கு முன்பாகவே, நம் வீட்டில் தேவையான பொருள் எது, தேவையற்ற பொருள் எது என்று ஒதுக்கி வைத்திருப்போம். அதில் முக்கியமாக நம் வீட்டில் பயன்படுத்திய பழைய பாய், பழைய துணிமணிகள், பழைய பேப்பர் காகித அட்டை, காலண்டர், பழைய முறம் பழைய துடைப்பம், இவைகள் எல்லாம் ஒரு குப்பை கூளங்களாக சேர்ந்திருக்கும். இதில் ஏதாவது நல்ல பொருட்கள் இருக்கிறது இந்த பாயை இல்லாதவர்களுக்கு கொடுத்தால் அவர்கள் பயன்படுத்துவார்கள், இந்த தலையணையை இல்லாதவர்களுக்கு கொடுக்கலாம். பழைய முறத்தை வேறு யாருக்காவது கொடுத்தால் பயன்படுத்திக் கொள்வார்கள் என்று சொல்லி இந்த பொருட்களை எல்லாம் அடுத்தவர்களுக்கு தானம் கொடுக்கவே கூடாது.

நான் படுத்து உறங்கிய பாயில் நம்முடைய தரித்திரம் இருக்கும். படுத்து உறங்கிய பழைய தலையணை, மெத்தை பெட்ஷீட் இவைகளையும் தானமாக கொடுக்கக் கூடாது. இந்த போகி பண்டிகையில் இந்த பொருட்களை எல்லாம் நெருப்போடு நெருப்பாக போட்டு பொசுக்கி விட வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

பழைய செருப்பு இருந்தால் அதை கொளுத்தலாம். ஆனால் இன்று நாம் பயன்படுத்தும் செருப்பு பெரும்பாலும் ரப்பர் சேர்த்த செருப்பாக இருக்கிறது. அதனால் அதை கொளுத்துவது சுற்று சூழலுக்கு மாசு வரும் என்பதால் அதை முறையாக வீட்டில் இருந்து அப்புறப்படுத்தி விடுங்கள். அடுத்தவர்களுக்கு தானம் கொடுக்காதீர்கள்.

ரொம்ப கிழியாத புது செருப்பு இருக்கிறது. ஒருமுறைதான் போட்டேன். இரண்டு முறை தான் போட்டேன் எனும் பட்சத்தில் அதை தண்ணீரில் கழுவி இல்லாதவர்கள் யாருக்கேனும் கொடுக்கலாம் தவறு கிடையாது. ரொம்பவும் கிழியாத புது ஆடைகள் இருக்கிறது எனும் பட்சத்தில் அதை இன்னொருவரால் பயன்படுத்த முடியும் எனும் பட்சத்தில் அதை தீக்கு இறையாக்க வேண்டாம். உப்பு சேர்த்த தண்ணீரில் அதை நினைத்து காய வைத்து அடுத்தவர்களுக்கு தானம் கொடுக்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

பழைய பாய், பழைய தலையணை, பழைய மெத்தை, பழைய பெட்ஷீட், பழைய முறம், பழைய துடைப்பம், இவைகளை யாருக்கும் தானம் செய்யாதீங்க. அவசியம் இருந்தால் புது பாய், புது பெட்ஷீட் வாங்கி தானம் கொடுங்க நல்லது. மேலே குறிப்பிடப்பட்டுள்ள இந்த பழைய பொருட்கள் எல்லாம் உங்களுக்கு தேவையில்லை இதை கொளுத்தவும் முடியாது என்றால் முறைப்படி வீட்டிலிருந்து அப்புறப்படுத்துங்கள்.

போகிப் பண்டிகை அன்று செய்ய வேண்டிய காரியங்கள்

போகிப் பண்டிகை அன்று குலதெய்வ வழிபாடு செய்வார்கள். காப்பு கட்டுவார்கள், சில ஊர்களில் மாரியம்மன்க்கு விசேஷ வழிபாடுகள் செய்யப்படும். வீட்டில் மூளை முடுக்குகளுக்கு எல்லாம் காவி தீட்டி வீடு முழுவதும் அரிசிமாவால் கோலம் போட்டு அலங்காரம் செய்வார்கள்.

இதையும் படிக்கலாமே: வாழ்க்கையில் முன்னேற்றம் ஏற்பட குலதெய்வ தீபம்

விடிந்தால் தை 1. அதை வரவேற்க போகி அன்று இரவே நம்முடைய வீட்டை பக்கவாக தயார் செய்யணும். மறந்துடாதீங்க, மேல் சொன்ன ஆன்மீகம் சார்ந்த தகவல் உங்களுக்கு பயனுள்ளபடி இருக்கும் என்ற நம்பிக்கையில் அனைவருக்கும் பொங்கல் நல்வாழ்த்துக்களை தெரிவித்து இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -