வாழ்க்கையில் முன்னேற்றம் ஏற்பட குலதெய்வ தீபம்

mavilakku
- Advertisement -

நம் குலத்தைக் காக்கும் தெய்வமாக திகழக்கூடிய குலதெய்வத்தை நாம் கண்டிப்பான முறையில் வழிபட வேண்டும் என்று நம்முடைய முன்னோர்கள் கூறியிருக்கிறார்கள். குலதெய்வத்தின் அருள் பரிபூரணமாக இருந்தால் நம் வாழ்க்கையில் இருக்கக்கூடிய தடைகள் அனைத்தும் விலகும் என்றும் கூறப்படுகிறது. இருப்பினும் குலதெய்வ வழிபாட்டை மேற்கொண்டும் ஒரு சிலரால் தங்களுடைய வாழ்க்கையில் முன்னேற முடியாத சூழ்நிலை ஏற்பட்டு இருக்கும். அப்படிப்பட்டவர்கள் குலதெய்வ கோவிலில் எப்படி தீபம் ஏற்றி வழிபட்டால் நல்ல முன்னேற்றம் கிடைக்கும் என்றுதான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.

ஏனைய பிற தெய்வங்களை வழிபடுவதற்கு முன்பாக முதலில் முழுமுதற் கடவுளான விநாயகர் பெருமானை வழிபட வேண்டும் என்று எப்படி வேதங்கள் கூறுகிறதோ அதே போல் விநாயகரை வழிபட்ட பிறகு குலதெய்வத்தையும் வழிபட வேண்டும். அப்பொழுதுதான் அதற்குப் பிறகு நாம் வழிபடக்கூடிய தெய்வங்களின் அருளை நம்மால் பரிபூரணமாக பெற முடியும்.

- Advertisement -

அதேபோல் எந்த ஒரு சுப நிகழ்ச்சிகள் வீட்டில் நடைபெற்றாலும் முதலில் குலதெய்வத்திடம் ஆசிர்வாதத்தை பெற்ற பிறகே செய்ய ஆரம்பிக்க வேண்டும் என்று கூறப்படுகிறது. வருடத்திற்கு ஒரு முறையாவது குலதெய்வ கோவிலுக்கு சென்று வழிபாடு மேற்கொள்ள வேண்டும் என்றும் கூறப்படுகிறது. தொடர்ந்து குலதெய்வத்தை வணங்குபவர்களின் வாழ்க்கையில் நல்ல முன்னேற்றமே ஏற்படும் என்றாலும் ஒரு சிலருக்கு குலதெய்வத்தை வழிபட்டாலும் முன்னேற்றம் என்பது தடைப்பட்டு இருக்கும். அப்படிப்பட்டவர்கள் குலதெய்வ கோவிலுக்கு செல்லும் பொழுது எந்த தீபத்தை ஏற்றி வழிபட வேண்டும் என்று பார்ப்போம்.

பொதுவாக குலதெய்வ கோவிலுக்கு நாம் மாதத்திற்கு ஒரு முறையாவது செல்ல வேண்டும் என்று கூறப்படுகிறது. ஆண் தெய்வமாக இருந்தால் அமாவாசை திதியிலும் பெண் தெய்வமாக இருந்தால் பௌர்ணமி திதியிலும் குலதெய்வத்தை வழிபடுவது என்பது மிகவும் சிறப்பு மிகுந்ததாக திகழ்கிறது. அவ்வாறு நாம் வழிபட செல்லும் பொழுது பச்சரிசி மாவால் செய்யப்பட்ட மாவிளக்கை செய்து அதில் தீபம் ஏற்றி வழிபட்டால் குலதெய்வத்தின் அருளை நம்மால் பரிபூரணமாக பெற முடியும்.

- Advertisement -

அப்படி மாவிளக்கு தீபம் ஏற்றும் பொழுது அந்த மாவிலத்தில் தேங்காய் எண்ணெய், விளக்கெண்ணெய், நல்லெண்ணெய் இந்த மூன்று எண்ணெய்கள் கலந்த கலவையை ஊற்றி தாமரைத் தண்டு திரி போட்டு தீபம் ஏற்ற வேண்டும். இந்த தீபமானது குறைந்தது அரை மணி நேரமாவது கோவிலில் எரிய வேண்டும். அந்த அரை மணி நேரமும் தீபத்திற்கு முன்பாக அமர்ந்து நம்முடைய வேண்டுதல் என்னவோ அதை மனதார குலதெய்வத்திடம் கூற வேண்டும்.

இப்படி செய்வதன் மூலம் குலதெய்வத்தால் ஏற்பட்ட குலதெய்வ சாபம் என்று கூறக்கூடிய சாபங்கள் கூட நிவர்த்தியாகும். இதையும் மீறி வசதி மிக்கவர்கள் 16 வகையான அபிஷேக பொருட்களை தங்கள் கைகளால் தொட்டு குலதெய்வத்திற்கு அபிஷேகம் செய்வதற்காக வழங்கி அபிஷேகத்தை பார்ப்பதன் மூலமும் நல்ல பல மாற்றங்களை தங்கள் வாழ்வில் காண முடியும்.

இதையும் படிக்கலாமே: குரு பார்வை உங்கள் மேல் விழ செல்ல வேண்டிய கோவில்

குலதெய்வத்தை மனதார வழிபடுபவர்களின் வாழ்க்கையில் எந்தவித குறையும் இருக்காது. நல்ல முன்னேற்றமே ஏற்படும்.

- Advertisement -