நாளை போகி அன்று, இந்த வழிபாட்டை செய்ய மறக்காதீர்கள். குலதெய்வ குற்றமாகிவிடும்.

amman2

பொங்கலை வரவேற்பதற்கு முன்பாக, போகிப் பண்டிகையை, நாளை சிறப்பாக கொண்டாட இருக்கின்றோம். இந்த போகிப் பண்டிகையில் முடிந்தவரை பிளாஸ்டிக் பொருட்களை எரித்து, சுற்றுச்சூழலுக்கு மாசு இல்லாமல், வெறும் பாய், துடைப்பம், போன்ற இயற்கைக்கு கேடு விளைவிக்காத பொருட்களை மட்டும் எரித்து போகி கொண்டாடுவோம். இப்படிப்பட்ட பொருட்கள் இல்லாத வீட்டில், போகி கொளுத்தியே தான் ஆக வேண்டும் என்ற எந்த அவசியமும் கிடையாது. உங்களுடைய மனதில் இருக்கும் ஏதாவது ஒரு கெட்ட எண்ணத்தை ஆத்மார்த்தமாக தீயில் இட்டு விட்டு, இந்த போகியை வரவேற்று கொள்வோம்.

bogi

போகியன்று நாம் செய்யவேண்டிய முக்கியமான ஒரு வழிபாட்டை பற்றித்தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். சில கிராமங்களில் போகி அன்று நோய்நொடி இல்லாத வாழ்க்கையை வாழ வேண்டும் என்பதற்காக மாரியம்மனை தங்களுடைய வீட்டில் மாலை நேரத்தில் 6 மணிக்கு மேல் வழிபாடு செய்வார்கள். அவரவர் வீட்டு வழக்கப்படி, மாரியம்மனுக்கு நிவேதனமாக சைவம் அல்லது அசைவ சாப்பாட்டை படைத்து பூஜையை செய்வார்கள் என்பது குறிப்பிடத்தக்க ஒன்று.

சிலருக்கு வீட்டில் போகி அன்று இந்த பூஜையை செய்யும் பழக்கம் இருக்காது. இருப்பினும் உங்களுடைய வீட்டை நீங்கள் பொங்கலுக்கு முன்பாக, போகி அன்று முழுமையாக சுத்தம் செய்து இருப்பீர்கள். அதாவது கோவிலுக்கு நிகரானது நம்முடைய வீடு. கோவிலை எப்படி கும்பாபிஷேகம் செய்யும்போது, கர்ப்ப கிரகத்தில் இருக்கும் தெய்வத்தினை வேறு இடத்தில் பிரதிஷ்டை செய்து, அதன் பின்பு கொண்டு வந்து கோவிலில் அமர வைக்கிறார்களோ, அதேபோல் தான்! நம்முடைய இல்லம் எனும் கோவிலை பொங்கலுக்கு வெள்ளை அடித்து சுத்தம் செய்கின்றோம். வீட்டில் இருக்கும் பொருட்களை எல்லாம் வெளியே எடுத்து வைத்துவிட்டு, வீட்டிற்கு வெள்ளை அடித்து அதன் பின்பு எல்லா பொருட்களையும் கொண்டுபோய் உள்ளே வைப்போம்.

house

நம் வீட்டை முழுமையாக சுத்தம் செய்யும் போது, நம்முடைய குல தெய்வமும் நம் வீட்டை விட்டு வெளியில் சென்றிருக்கும். அந்த குலதெய்வத்தை மீண்டும் நம்முடைய வீட்டில் கொண்டு வந்து அமர வைக்க, குலதெய்வத்தை நினைத்து, குலதெய்வத்தை வீட்டிற்கு அழைத்து சின்ன பூஜையை நம் வீட்டில் செய்வது மிகவும் நல்லது என்று சொல்லப்பட்டுள்ளது.

- Advertisement -

உங்களுடைய வீட்டில் போகி அன்று எந்த ஒரு பூஜை செய்யும் பழக்கம் இல்லை என்றாலும் பரவாயில்லை. வழக்கம்போல வெள்ளிக்கிழமை பூஜை எப்படி செய்வீர்களோ அதேபோல் குலதெய்வத்திற்கு என்று ஒரு சிறிய பூஜையை செய்து, குலதெய்வத்தின் பெயரை மூன்று முறை உச்சரித்து, ‘குலதெய்வம் எங்கள் வீட்டிற்குள் வர வேண்டும்’ என்று சொல்லி போகி அன்று, மாலை நேரத்தில் உங்களது வழிபாட்டை நிறைவு செய்து கொள்ளுங்கள்.

praying-god1

குலதெய்வம் தெரியாதவர்கள், மனதில் முழு நம்பிக்கையோடு, ‘எங்கள் குலதெய்வம், வீட்டிற்குள் வர வேண்டும்’ என்று மூன்று முறை உச்சரித்தாலே போதும். கண்ணுக்குத்தெரியாத குலதெய்வமாக இருந்தாலும் உங்கள் வீட்டில் குடி கொள்ளும். வரப்போகும் தைப்பொங்கலில், பொங்கி வழியும் பொங்கல் பானையை போல உங்களது சந்தோஷமும் பொங்கி வழிய இந்த வழிபாடு உங்களுக்கு வழிவகுக்கும் என்ற நம்பிக்கையோடு இந்த பதிவினை நிறைவு செய்து கொள்ளலாம்.

இதையும் படிக்கலாமே
பலமுறை முயற்சி செய்தும் தோல்வியடைந்த காரியத்தில் கூட, நிச்சயம் வெற்றி பெற முடியும். இந்த 1 பொருளை உங்களுடைய தலையை சுற்றி இப்படி தூக்கி எறிந்து விட்டு போனால், தோல்விக்கு துளியும் வாய்ப்பில்லை.

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.