அடிக்கும் வெயிலில் ரோஜா செடிகள் காய்ந்து, இலைகள் கருகாமல் இருக்க பழைய சாதம் போதுமே!

rose-leaf-sadham
- Advertisement -

எல்லோருக்குமே ரோஜா செடி வளர்க்க வேண்டும் என்பது மிகப்பெரிய ஆசையாக இருக்கும். முதன் முதலாக செடி வளர்க்க நினைப்பவர்கள் பெரும்பாலும் தேர்ந்தெடுப்பது ரோஜா செடி தான். ரோஜா செடியின் மீது உள்ள மோகம் ஆண், பெண் என்கிற வித்தியாசம் பார்க்காமல் அனைவருக்குமே உண்டு. ரோஜா செடி மட்டுமல்ல! எல்லா வகையான பூச்செடிகளும், காய்கறிச் செடிகளும் செழிப்பாக வளர நம் வீட்டில் வீணாக போகும் பழைய சாதம் இருந்தாலே போதுமானது! சரி அதை வைத்து என்ன செய்யலாம்? என்பதை இனி இப்பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம் வாருங்கள்.

rose-plant

பொதுவாக வறட்சியிலிருந்து தாக்கு பிடிக்க செடிகள் அனைத்தும் போராடிக் கொண்டிருக்கும். சரியான ஊட்டச்சத்து மற்றும் தண்ணீர் அதற்கு கொடுக்க முடியாமல் போகும் பொழுது இலைகள் கருகி, செடி பட்டுப் போய்விடும் ஆபத்து உண்டு. இப்படி இலைகள் கருகுவதை தடுப்பதற்கு இரும்புச்சத்து மற்றும் பொட்டாசியம் போன்ற சத்துக்கள் அவசியம் செடிகளுக்கு தேவை.

- Advertisement -

நம் வீட்டில் தினமும் யாரும் சரியான அளவில் சமைத்து விடுவதில்லை. எப்படியும் கொஞ்சம் சாதம் மீந்து போக தான் செய்யும். அப்படி மீந்து போகும் சாதத்தை தண்ணீர் ஊற்றி வைத்து மறுநாள் சாப்பிடுவது கூட உண்டு. இரவு தண்ணீர் ஊற்றி ஊற வைத்த சாதம் ஆனது நொதித்தல் என்கிற செயலாக்கம் பெற்று, நல்ல பாக்டீரியாக்களை உருவாக்குகிறது. அதனால் தான் பழைய சாதத்தில் இவ்வளவு சத்துக்கள் உள்ளன என்று நம் முன்னோர்கள் கூறி வைத்தனர். இதை நாம் சாப்பிடாவிட்டாலும் நம் வீட்டில் இருக்கும் செடி வகைகளுக்கு கொடுத்தால் அபரிமிதமான பலன்களை காணலாம்.

pazhaiya-sadham

மீண்டு போன பழைய சாதத்தை தண்ணீரில் நன்கு கரைத்து 10 நாட்கள் வரை ஊற வைத்துக் கொள்ளுங்கள். பத்து நாட்கள் நன்கு நொதித்த அந்தக் கரைசலில் இருக்கும் தண்ணீரை வடிகட்டி எடுத்துக் கொள்ளுங்கள். இதில் நிறைய பொட்டாசியம் மற்றும் இரும்பு சத்துக்கள் அடங்கி இருப்பதால் அதிகப்படியான வறட்சியில் இருந்து நம்முடைய செடிகள் பாதுகாக்கப்படும்.

- Advertisement -

மணிக்கொரு முறை தண்ணீரை செடிகளுக்கு ஊற்றி கொண்டே இருக்க முடியாது. எனவே இந்த தண்ணீரை நாம் தெளிக்கும் பொழுது இலை கருகல் பிரச்சனையும் தடுக்கப்பட்டு, செடி வளர்ச்சியையும் சிறப்பாக கொண்டு செல்லலாம். ஒரு லிட்டர் அளவிற்கு இந்த கரைசலை வடிகட்டி எடுத்துக் கொண்டு, அதனுடன் கண்டிப்பாக 10 லிட்டர் அளவிற்கு தண்ணீரை ஊற்றி சேர்த்துக் கொள்ள வேண்டும். அப்படியே நேரடியாக செடிகளுக்கு ஊற்றினால்! அதுவும் பிரச்சனையாக தான் இருக்கும் என்பதை மட்டும் நினைவில் கொள்ளுங்கள்.

rose2

பத்து லிட்டர் தண்ணீரில் ஒரு லிட்டர் அளவிற்கு இந்த கரைசலை சேர்த்து எல்லா வகையான செடிகளுக்கும் வேர் முதல் நுனி வரை அத்தனை பகுதிகளிலும் படும்படி நன்கு தெளித்து விட வேண்டும். தினமும் இந்த தண்ணீரை மட்டும் தெளித்து வந்தால் அதற்கு தேவையான பொட்டாசியம் மற்றும் இரும்பு சத்துக்கள் கிடைத்து இலைகள் கருகுவது, பூக்கள் உதிர்வது போன்ற பிரச்சனைகள் தடுக்கப்படும். மேலும் அதிகப்படியான வெயிலின் தாக்கத்தையும் கிரகித்து பூச்செடிகள் பச்சை பசேலென பூத்துக் குலுங்கும் துவங்கும். இனியும் பழைய சாதத்தை வீணாக்காமல் இப்படி உபயோகமான முறையில் செடிகள் செழிப்பாக வளர செய்து விடுங்கள்.

- Advertisement -