தினமும் நீங்கள் பயன்படுத்தும் தங்க நகையை வீட்டிலேயே கெமிக்கல் இல்லாமல் சுத்தம் செய்வது எப்படி தெரியுமா? இப்படி செஞ்சா புதுசு போலவே இருக்குமே!

gold
- Advertisement -

நாம் அணிந்திருக்கும் தங்க நகை வாங்கிய புதிதில் தகதகவென்று மின்னும் ஆனால் நாளடைவில் அதை பயன்படுத்த பயன்படுத்த அதன் நிறம் மங்கி போகும். இப்படி அனுதினமும் பயன்படுத்தக் கூடிய தங்க நகைகளை கெமிக்கல் எதுவும் சேர்க்காமல் நம் வீட்டிலேயே ரொம்ப சுலபமாக சுத்தம் செய்வது எப்படி? என்பதை தான் இந்த வீட்டு குறிப்பு பதிவின் மூலம் இனி நாம் அறிந்து கொள்ள இருக்கிறோம், வாருங்கள் பதிவிற்குள் போகலாம்.

தங்க நகைகளை அடிக்கடி கடையில் கொடுத்து கிளீன் செய்வதை தவிர்க்க வேண்டும். இதனால் தங்க நகை தேய்வதற்கு வாய்ப்புகள் அதிகம் உண்டு. தங்கம் தேய தேய அதன் மதிப்பும் குறையும். தங்க நகையை சுத்தம் செய்பவர்கள், அதில் பலவிதமான கெமிக்கல்களை உபயோகிக்கிறார்கள். நாள்பட்ட பழைய தங்க நகைகளை இவ்வாறு கொடுத்து சுத்தம் செய்து கொள்ளலாம், ஆனால் தினமும் அணிந்து கொள்ளக் கூடிய தங்க நகையை சுத்தம் செய்வதற்கு கெமிக்கல் பயன்படுத்த வேண்டிய அவசியம் இல்லை.

- Advertisement -

இதற்கு நம் வீட்டில் இருக்கக்கூடிய ஒரு பொருள் போதுமானது. இந்த பொருளை கொண்டு நம் தங்க நகைகளை சுத்தம் செய்யும் பொழுது அது பளிச்சென்று மின்னும். இதில் கெமிக்கல் எதுவும் சேர்க்கப்படவில்லை, எனவே பாதுகாப்பானதும் கூட! தினமும் பயன்படுத்தும் கம்மல், செயின், மோதிரம் போன்றவற்றை ரெண்டு மாதத்திற்கு ஒரு முறையாவது இப்படி நாம் சுத்தம் செய்து வைத்துக் கொள்ளலாம். இதனால் தங்க நகைகள் மங்கி போகாமல் பளிச்சென்று வாங்கிய போது புதிதில் எப்படி இருந்ததோ, அதே போல மின்னும்.

இதற்கு முதலில் நகைகள் மூழ்கும் அளவிற்கு ஒரு லிட்டர் தண்ணீரை நன்கு காய்ச்சிக் கொள்ளுங்கள். தண்ணீர் நன்கு கொதித்து வந்த பிறகு, அதில் ஒரு டேபிள் ஸ்பூன் அளவிற்கு சமையல் சோடாவை சேர்க்க வேண்டும். இது வலிமை குறைந்த அமிலம் என்பதால் தான் சில வகையான முக்கிய சமையலில் சேர்க்கப்படுகிறது. கேக் போன்றவற்றில் மிருது தன்மையை அதிகரிக்க சமையல் சோடா சேர்க்கிறார்கள். அது மட்டும் அல்லாமல் மாவை புளிக்க செய்யவும் சமையல் சோடா சேர்க்கப்படுகிறது.

- Advertisement -

இந்த சமையல் சோடாவை சமையலுக்கு மட்டும் அல்லாமல், பல வகையான வீட்டு கிளீனிங் செய்யவும் பயன்படுத்தப்படுகிறது. அதே போல நம்முடைய தங்க நகைகளையும் ரொம்பவே சுலபமாக சுத்தம் செய்து கொடுக்கக் கூடிய ஆற்றல் இதற்கு உண்டு. தண்ணீர் கொதித்ததும் ஒரு டேபிள் ஸ்பூன் அளவிற்கு சோடா உப்பை சேர்த்து தங்க நகைகளை அதில் போட்டுக் கொள்ளுங்கள். ஒரு இரண்டு அல்லது மூன்று நிமிடம் கொதித்ததும் அடுப்பை அணைத்து விடுங்கள். அதற்குள்ளாகவே நகைகளில் ஒட்டிக் கொண்டிருக்கும் அழுக்குகள் அனைத்தும் கொதிக்கும் நீரில் வெளியேறி இருக்கும். அதன் பிறகு நகைகளை வெளியே எடுத்து சாதாரண நீரில் போட்டுக் கொள்ளுங்கள்.

இதையும் படிக்கலாமே:
இனிமே இப்படிப்பட்ட பழங்களை இனாமாக, காசே வேணான்னு, யாராவது கொடுத்தால் கூட அதை நீங்க கைநீட்டி வாங்க மாட்டீங்க. பழங்களில் எது ஹைபிரிட் பழம்? எது நாட்டு பழம் என்பதை எப்படித் தான் கண்டுபிடிப்பது?

பின்னர் நீங்கள் தலைக்கு குளிக்க பயன்படுத்தும் ஷாம்பூவைக் கொண்டு லேசாக பழைய டூத் பிரஸ் கொண்டு தேய்த்தால் பாலிஷ் போட்டது போல உங்களுடைய தங்க நகைகள் அனைத்தும் மின்னும். நகைகளை போட்டு கொதிக்க வைக்க பயப்படுபவர்கள், கொதித்த தண்ணீரில் அடுப்பை ஆப் செய்த பிறகு பேக்கிங் சோடாவை போட்டு, நகைகளை போட்டு ஊற வைத்தும் இப்படி செய்யலாம்.

- Advertisement -