விடாப்பிடியான எண்ணெய் பிசுக்குள்ள பித்தளை பாத்திரங்கள் பளபளக்க இது தெரிஞ்சா இனி கஷ்டப்படத் தேவையில்லை! கண் இமைக்கும் நொடியிலேயே சுத்தம் செய்து விடலாம் தெரியுமா?

brass-pithalai-vessels-sengal
- Advertisement -

வீட்டில் இருக்கும் பூஜை பாத்திரங்கள் முதல் மற்ற பித்தளை பாத்திரங்கள் வரை அனைத்துமே ரொம்ப சுலபமாக சுத்தம் செய்ய இதை விட சிறப்பான வழி இருக்க முடியாது. கதவுகளில் இருக்கும் பித்தளை பிடி முதல் எல்லா வகையான பித்தளை பாத்திரங்களிலும் விடாப்படியான அழுக்குகளும், எண்ணெய் பிசுக்குகளும் சில சமயங்களில் சேர்ந்து விட்டிருக்கும். இவற்றை சுத்தம் செய்வது என்பது சற்று கடினமான காரியம் என்று நினைத்திருப்போம், ஆனால் கண்ணிமைக்கும் நொடியில் ரொம்ப சுலபமாக சுத்தம் செய்யும் முறை என்ன? என்பதை தான் இந்த வீட்டுக்குறிப்பு பதிவின் மூலம் இனி தொடர்ந்து அறிந்து கொள்ள இருக்கிறோம்.

பித்தளை பாத்திரங்கள் பொதுவாக ஏழிலிருந்து பத்து நாட்களுக்குள் அதன் பொலிவை இழந்து கருமை படர்ந்து விடுகிறது. இதற்கு காரணம் காற்றில் இருக்கும் மாசுக்கள் தான். நாம் பயன்படுத்தாவிட்டாலும் கூட இவ்வகையான பித்தளை பாத்திரங்கள் எளிதில் கருமை படர்ந்து விடுகிறது. இதை தேய்த்து சுத்தம் செய்வதற்குள் போதும் போதும் என்று ஆகிவிடும்.

- Advertisement -

குறிப்பாக பூஜை அறையில் இருக்கக்கூடிய பூஜை பாத்திரங்களை சுத்தம் செய்வது கடினமாக இருக்கும். அதிலும் காமாட்சி அம்மன் விளக்கு, குத்து விளக்கு போன்றவற்றில் இருக்கக்கூடிய எண்ணெய் பிசுக்குகள் படிந்து விட்டால் அதை நீக்குவது கஷ்டமாக இருக்கும். இது போன்ற எப்பேர்பட்ட கடினமான, விடாப்பிடியான கரைகளை கூட சுலபமாக நீக்கக்கூடிய ஆற்றல் இந்த ஒரு பொருளுக்கு உண்டு.

செங்கல் அல்லது மண்ணினால் ஆன அகல் விளக்கு இருந்தால் போதும்! பழைய அகல் விளக்குகள் வீட்டில் வீணாக போட்டு வைத்திருந்தால் அதை இடித்து தூளாக்கிக் கொள்ளுங்கள். அப்படி எதுவும் உங்களிடம் இல்லை என்றால், சிறிதளவு செங்கல்லை எடுத்து தூளாக்கிக் கொள்ளுங்கள். இஞ்சி பூண்டு விழுது இடிக்கும் உரலில் போட்டு இடித்தால் கூட தூளாகி விடும் அல்லது உங்களிடம் அம்மி இருந்தால் இடித்து அரைத்து வைத்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

இந்த தூளுடன் அரை மூடி எலுமிச்சை சாறு பிழிந்து பேஸ்ட் போல கரைத்து வைத்துக் கொள்ளுங்கள். இந்த பேஸ்டை பயன்படுத்தி நீங்கள் பித்தளை பாத்திரங்களை தேய்க்கும் பொழுது கொஞ்சம் கூட கை வலி இல்லாமல், சிரமப்படாமல் உங்களுடைய பித்தளை பாத்திரங்களில் இருக்கக்கூடிய விடாப்பிடியான அழுக்குகள், கருமை ஆகியவை நீங்கி பளிச்சுன்னு புதுசு மாதிரி மின்னும். தேவைப்படும் பொழுதெல்லாம் இந்த பவுடருடன் சிறிதளவு எலுமிச்சையை இது போல செய்து கலந்து வைத்துக் கொள்ளுங்கள். பின்னர் அதை வெறும் கைகளாலேயே எடுத்து பித்தளை பாத்திரங்களின் மீது லேசாக தேய்த்துக் கொடுக்க வேண்டும். இதனுடன் வேறு எந்த பொருட்களையும் சேர்க்க வேண்டிய அவசியம் இல்லை.

இதையும் படிக்கலாமே: கிச்சன், பாத்ரூம் டைல்ஸ், சிங்க் எல்லாமே பளிச்சுன்னு மின்ன செலவே இல்லாத இந்த லிக்வீட் போதும். இது இருந்தா பல வருட உப்புக்கறை கூட பத்தே நிமிடத்தில் நீங்கி விடும்ன்னா பாருங்களேன்

இந்த மண் கலந்த கலவையை வைத்து விடாப்பிடியான எண்ணெய் பிசுக்குகள் இருக்கும் இடங்களில் தேய்த்துக் கொடுத்தால் அவை எளிதாக வந்துவிடும். முதலில் எண்ணெய் பிசுக்கு உள்ள இடங்களை ஒரு நியூஸ் பேப்பர் அல்லது டிஷ்யூ பேப்பர் கொண்டு அழுத்தி துடைத்து எடுத்து விடுங்கள். அதன் பிறகு இந்த பேஸ்ட்டை பூசி லேசாக தேய்த்தால் போதும், எண்ணெய் பிசுப்புகள் இருந்த இடமே தெரியாமல் மாயமாய் மறைந்துவிடும். நாட்பட்ட பித்தளை பாத்திரங்களை பரண் மேல் போட்டு வைத்திருந்தாலும் இந்த பேஸ்ட்டை பயன்படுத்தி நீங்கள் தேய்க்கும் பொழுது சிரமம் இல்லாமல் எளிதில் தேய்த்து விடலாம், ட்ரை பண்ணி பாருங்க.

- Advertisement -