கிச்சன், பாத்ரூம் டைல்ஸ், சிங்க் எல்லாமே பளிச்சுன்னு மின்ன செலவே இல்லாத இந்த லிக்வீட் போதும். இது இருந்தா பல வருட உப்புக்கறை கூட பத்தே நிமிடத்தில் நீங்கி விடும்ன்னா பாருங்களேன்

- Advertisement -

வீட்டில் சமைப்பது, துணி துவைப்பது போன்ற வேலைகள் ஒரு பக்கம் இருந்தாலும், இவையெல்லாம் செய்த பிறகு கிச்சன் பாத்ரூம் போன்றவற்றையெல்லாம் சுத்தம் செய்வது அதை விட பெரிய வேலை. அதிலும் நம் வீட்டில் உப்புத் தண்ணீர் என்றால் கேட்கவே வேண்டாம். தினமுமே துடைத்தாலும் கூட உப்பு தண்ணீர் கறை படிந்து கொண்டே இருக்கும். இந்த கறைகள் எல்லாம் எளிதில் நீங்கி வீட்டில் அனைத்து இடங்களும் பளிச்சென்று வைத்திருக்க ஒரு எளிமையான செலவில்லாத லிக்வீடை எப்படி தயாரிப்பது என்று தான் இந்த வீட்டுக் குறிப்பு பதிவில் இப்போது நாம் தெரிந்து கொள்ள போகிறோம்.

கிச்சன் பாத்ரூம் டைல்ஸ் உப்பு கறை போக லிக்வீட்
இந்த லிக்விட் தயாரிக்க முதலில் ஒரு சிறிய பவுலில் ஒரு டேபிள் ஸ்பூன் துணி துவைக்கும் பவுடரை எடுத்துக் கொள்ளுங்கள். இத்துடன் ஒரு டேபிள் ஸ்பூன் உப்பு இதற்கு கல் உப்பு சால்ட் என எதை வேண்டுமானாலும் பயன்படுத்தலாம். அடுத்ததாக நாம் வீட்டில் பயன்படுத்திய பிறகு மீதம் இருக்கும் எலுமிச்சை பழத்தின் தோலை ஒன்றை மட்டும் போட்டு அந்த பவுலில் ஒரு டம்ளர் தண்ணீர் ஊற்றி வைத்து விடுங்கள். இதை சிறிது நேரம் அப்படியே விட்டால் எலுமிச்சை பழத்தோலில் உள்ள சாறு முழுவதும் அதில் இறங்கி இருக்கும்.

- Advertisement -

அதன் பிறகு இந்த சாறை தண்ணீரில் நன்றாக பிழிந்து விட்டு எடுத்து விடுங்கள். ஒரு வேளை உங்களிடம் எலுமிச்சை பழத்தோல் இல்லை என்றால் பாதி எலுமிச்சை பழத்தின் சாறை மட்டும் பயன்படுத்திக் கொள்ளுங்கள். இப்போது இந்த லிக்விடில் மேலும் ஒரு டம்ளர் தண்ணீர் ஊற்றி நன்றாக கலந்து ஒரு ஸ்ப்ரே பாட்டில் ஊற்றி வைத்துக் கொள்ளுங்கள்.

இப்போது உங்கள் வீட்டில் கிச்சன் பைப், டைல்ஸ், ஸ்டவ் போன்றவற்றையெல்லாம் சுத்தம் செய்ய இந்த தண்ணீரை கொஞ்சமாக ஸ்ரே செய்து விட்டு அதற்கு பிறகு துடைத்து விடுங்கள். இதற்காக அதிகம் அழுத்தம் கொடுத்து கூட சுத்தம் செய்ய வேண்டிய அவசியம் இருக்காது. சிறிது நேரத்தில் கறைகள் அனைத்தும் நீங்கி பளிச்சென்று மாறி விடும்.

- Advertisement -

அதே போல் பாத்ரூமில் படிந்த உப்பு கறைகளை எல்லாம் நீக்க ஒரு சிறிய கிணத்தில் கொஞ்சம் சமையல் சோடா எடுத்துக் கொள்ளுங்கள். அதில் பாதி எலுமிச்சை பழம் அல்லது உங்களிடம் இருக்கும் எலுமிச்சை பழத்தோல் இரண்டில் ஏதாவது ஒன்றை தொட்டு கறை இருக்கும் இடத்தில் தேய்த்து விடுங்கள். இது ஐந்து நிமிடம் அப்படியே இருக்கட்டும். அதன் பிறகு நீங்கள் தயார் செய்து வைத்திருக்கும் இந்த லிக்வீடை அதன் மேல் ஸ்பிரே செய்து விட்டு துடைத்து விடுங்கள். அதிகமான கறை இருக்கும் இடங்களில் மட்டும் கம்பி நார் வைத்து லேசாக தேய்த்து விட்டாலே போதும். கறைகள் அனைத்தும் நீங்கி டைல்ஸ் பளிச்சென்று மாறி விடும்.

இதையும் படிக்காலமே: அட! இந்த தண்ணில இவ்வளவு விஷயம் செய்யலாமா? இது தெரியாம இத்தனை நாள் இதை வீணாக கீழே ஊத்திட்டமே அப்படின்னு பீல் பண்ற அளவுக்கு நிறைய டிப்ஸ் இருக்கு வாங்க பார்க்கலாம்.

இந்த எளிமையான செலவில்லாத ஒரு லிக்விட்டை நீங்கள் தயார் செய்து வைத்துக் கொண்டால் போதும். உங்கள் வீட்டில் பல வேலைகளை சுலபமாக செய்து விடலாம். அது மட்டும் இன்றி நேரமும் பணமும் பெருமளவு மிச்சம் செய்யலாம். இந்த லிக்விட் தயாரிக்கும் முறை உங்களுக்கு பிடித்திருந்தால் நீங்களும் இது போல செய்து பலன் அடையலாம்.

- Advertisement -