- Advertisement -
Homeசமையல் குறிப்புகள்வெறும் 5 ஸ்லைஸ் பிரட் இருக்கா, வாங்க ஒரு அருமையான ஈவினிங் ஸ்நாக்ஸ் ரொம்ப டேஸ்டியாவும்,...

வெறும் 5 ஸ்லைஸ் பிரட் இருக்கா, வாங்க ஒரு அருமையான ஈவினிங் ஸ்நாக்ஸ் ரொம்ப டேஸ்டியாவும், ஹெல்தியாயும் சூப்பரா ரெடி பண்ணிடலாம்.

- Advertisement -

குழந்தைகளுக்கு ஈவினிங் ஸ்நாக்ஸ் கொடுக்கும் போது அதனுடன் சேர்த்து கொஞ்சம் ஹெல்தியாகவும் எதையாவது செய்து கொடுத்தால் நன்றாக இருக்கும் என்று நாம் யோசிப்பதுண்டு. அப்படி ஒரு ஹெல்தியான ஈவினிங் ஸ்நாக்ஸ் தான் இந்த பிரட் போண்டா இதில் பிரட் மட்டும் இல்லாமல் காய்கறிகளையும் சேர்த்து செய்யும் பொழுது குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள். அதே நேரத்தில் காய்கறிகளையும் அவர்களுக்கு நாம் கொடுத்து விடலாம் அந்த ஒரு ஸ்நாக்ஸ் ரெசிபி எப்படி செய்வது என்று இப்போது பார்க்கலாம் வாங்க.

தேவையான பொருட்கள்: பிரட் துண்டு – 5 , கோஸ் – 1/4 கப், கேரட் -1, குடை மிளகாய் – 1, உருளைக்கிழங்கு -1, உப்பு – 1டீஸ்பூன், கான்பிளவர் மாவு – 5 டீஸ்பூன், கோதுமை மாவு – 2 1/2 டீஸ்பூன், மிளகாய்த்தூள் – 1 டீஸ்பூன், எண்ணெய் – 250 கிராம்.

- Advertisement -

முதலில் ஐந்து பிரட் துண்டுகளை பொடியாக நறுக்கி தண்ணீர் தெளித்து பிசைந்து வைத்துக் கொள்ளுங்கள். தண்ணீர் ஊற்றக் கூடாது லேசாக தெளித்து பிசைந்து வைத்துக் கொள்ளுங்கள். அதன் பிறகு கோஸ், கேரட், குடைமிளகாய், போன்றவற்றை நல்ல பொடியாக நறுக்கிக் கொள்ளுங்கள். எந்த அளவிற்கு பொடியாக நறுக்கி கொள்ள முடியுமோ அந்த அளவுக்கு நறுக்கி கொள்ளுங்கள். உருளைக்கிழங்கை வேக வைத்து மசித்து எடுத்துக் கொள்ளுங்கள். அதன் பிறகு அதில் அரை டீஸ்பூன் மிளகாய்த்தூள், அரை டீஸ்பூன் உப்பு சேர்த்து நன்றாக பிசைந்து சிறு சிறு உருண்டைகளாக உருட்டி அப்படியே எடுத்து வைத்து விடுங்கள்.

இப்போது இதற்கு மேல் மாவு தயார் செய்ய வேண்டும். அதற்கு கான்பிளவர் மாவுடன் கோதுமை மாவு அரை டீஸ்பூன், மிளகாய்த்தூள், உப்பு சேர்த்து நல்ல ஒரு பஜ்ஜி மாவு பதத்திற்கு மாவை கரைத்து வைத்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

இப்போது அடுப்பை பற்ற வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்தவுடன் ஏற்கனவே உருட்டி வைத்திருக்கும் இந்த உருண்டைகளை தயார் செய்து வைத்திருக்கும் மாவில் முக்கி எடுத்து எண்ணெயில் போட்டு பொரித்து எடுத்து விடுங்கள். இப்போது எண்ணெய் நன்றாக சூடான பிறகு, உருண்டையை போட்டவுடன் அடுப்பை மீடியம் மாற்றிக் கொள்ளுங்கள். பிரட் சேர்த்து இருப்பதால் மேலே சீக்கிரம் நிறம் மாறி விடும்.

இதில் காய்கறிகள் எல்லாம் சேர்த்து செய்வதால் குழந்தைகளுக்கு நல்ல ஒரு ஹெல்தியான ஈவினிங் ஸ்நாக்ஸ் ஆக இருக்கும் அதே நேரத்தில் காய்கறி சாப்பிடாத குழந்தைகளை கூட இப்படி சாப்பிட வைத்து விட முடியும் இந்த பிரட் போண்டா நல்ல கிறிஸ்ப்பியாகவும் இருக்கும் குழந்தைகள் கட்டாயமாக விரும்பி சாப்பிடுவார்கள் நீங்களும் ஈவ்னிங் ஸ்னாக்ஸுக்கு இதை ட்ரை பண்ணி பாருங்க.

சற்று முன்