பற்களில் இருக்கும் மஞ்சள் கறை நீங்க எலுமிச்சை சாறுடன் இதை மட்டும் கலந்து தேய்த்து பாருங்க, நீங்களே வியக்கும் அளவிற்கு வெள்ளை வெளேரென மின்னும்!

lemon-teeth-cleaning
- Advertisement -

பற்களில் இருக்கும் வெண்மையான நிறம் நாளுக்கு நாள் மாறிக் கொண்டே இருக்கும். ஒரு நாளைக்கு இருமுறை பற்களை சுத்தம் செய்ய வேண்டும் என்பது தான் சரியான முறை. ஆனால் இன்று யாரும் அதை பின்பற்றுவது கிடையாது. அது மட்டும் அல்லாமல் பற்களுக்கு பாதிப்பை தரக்கூடிய பல்வேறு தேவையற்ற உணவுகளை உட்கொள்வதால் பற்களில் இருக்கும் எனாமல் வெகு விரைவாகவே தேய்ந்து விடுகிறது. இதனால் பற் கூச்சம், பற்ச்சொத்தை போன்றவை ஏற்படத் துவங்குகிறது. பற்களில் இருக்கும் மஞ்சள் கறையை 10 பைசா செலவில்லாமல் நம் வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்து எப்படி வெள்ளை வெளேரென மின்ன செய்வது? என்பதைத் தான் இந்த பதிவின் மூலம் இனி பார்க்க இருக்கிறோம்.

பற்களில் இருக்கும் மஞ்சள் கறையை நீக்குவது என்பது அவ்வளவு எளிதான விஷயம் அல்ல. கொஞ்சம் கொஞ்சமாக பற்களின் நிறம் மங்க ஆரம்பிக்கிறது. இரவில் கண்டிப்பாக சாப்பிட்டு முடித்த பின்னர் ஒரு மணி நேரம் கழித்து பற்களை துலக்கி விட்டு தூங்குவது பற்களுக்கு ஆரோக்கியமானது. இதனால் உணவு துகள்கள் இரவு முழுவதும் நம் பற்களை ஆட்சி செய்யாமல் இருக்கும்.

- Advertisement -

பற்களில் இருக்கும் உணவு துகள்கள் மூலம் உருவாக்கப்படும் கிருமிகள், நம் பற்களை கொஞ்சம் கொஞ்சமாக அரிக்க ஆரம்பித்து விடுகிறது. இது வாய் முழுவதும் துர்நாற்றத்தையும் ஏற்படுத்துகிறது. பற்களில் இருக்கும் இந்த உணவுத் துகள்கள் மூலம் உருவாக்கப்படும் மஞ்சள் கறை அப்படியே விட்டுவிட்டால் அது விடாப்பிடியான கறையாக மாறிவிடும். சாதாரணமாக டூத் பிரஷ் கொண்டு தேய்த்தால் இது அவ்வளவு எளிதாக நீங்காது. அதற்கு எலுமிச்சையை வைத்து என்ன செய்யலாம்?

அரை மூடி எலுமிச்சை சாற்றில் சிறிதளவு அரிசி மாவு சேர்த்துக் கொள்ளுங்கள். பச்சரிசி மாவு சேர்த்தால் நல்லது. அதனுடன் கொஞ்சம் மஞ்சள் மற்றும் ஒரு சிட்டிகை அளவிற்கு தூள் உப்பு சேர்த்து பேஸ்ட் போல நன்கு கரைத்துக் கொள்ளுங்கள். இதை நீங்கள் சாதாரணமாக டூத் பிரஷ் கொண்டு தொட்டு பற்கள் முழுவதும் லேசாக ஒரு ஐந்து நிமிடம் தொடர்ந்து தேய்த்தால் போதும், பற்களில் இருக்கும் மஞ்சள் கறை கொஞ்சம் கொஞ்சமாக நீங்க ஆரம்பித்து விடும்.

- Advertisement -

இதே போல தொடர்ந்து பத்து நாட்கள் செய்து பாருங்கள். உங்கள் பற்களில் இருக்கும் மஞ்சள் கறை கொஞ்சம் கூட இல்லாமல், இது நம்முடைய பற்களா? என்று நீங்களே ஆச்சரியப்படும் அளவிற்கு பற்கள் வெண்மையாக மின்ன ஆரம்பிக்கும். பற்களில் இருக்கும் மஞ்சள் கறை நீங்கினால் பற்கள் வெண்மை ஆவது மட்டுமன்றி இதனால் கிருமிகள் உருவாக்கப்படுவது, பாக்டீரியாக்கள் நம் பற்களை சேதப்படுத்துவது போன்றவையும் தடுக்கப்படும்.

விடாப்பிடியான மஞ்சள் கறை இருப்பவர்கள் இது போல ஆரம்பத்தில் முயற்சி செய்து பார்க்கலாம். பிறகு பற்கள் வெண்மையானதும் சாதராணமாக நீங்கள் தூள் உப்பு சேர்த்து எலுமிச்சை சாற்றுடன் ஒரு நாள் விட்டு, ஒரு நாள் துலக்கி வந்தால் போதும், பற்கள் எப்போதும் மஞ்சள் கறை படியாமல் வெண்மையாக சுத்தமாக இருக்கும். கூடுமானவரை ஒரு நாளைக்கு இரண்டு முறை பற்கள் துலக்குவதை வாடிக்கையாக்கிக் கொள்ளுங்கள். இது தான் ஆரோக்கியமான பற்களுக்கு சிறந்த வழிமுறையாக இருக்கும்.

- Advertisement -