- Advertisement -
Homeசமையல் குறிப்புகள்கோதுமை ரவையில் இவ்வளவு மொறுமொறு தோசை செய்ய முடியுமா? இந்த தோசையை பார்க்கும்போதே ரெசிபியை தெரிஞ்சுக்க...

கோதுமை ரவையில் இவ்வளவு மொறுமொறு தோசை செய்ய முடியுமா? இந்த தோசையை பார்க்கும்போதே ரெசிபியை தெரிஞ்சுக்க ஆசையா இருக்குதுல்ல?

- Advertisement -

பொதுவாகவே சர்க்கரை வியாதி உள்ளவர்கள் இந்த சம்பா கோதுமை ரவையை உப்புமா செய்து சாப்பிடுவார்கள். சர்க்கரை வியாதி உள்ளவர்கள் தான் இப்படி இந்த கோதுமை ரவையை அதிகம் சாப்பிட வேண்டுமென்ற அவசியம் கிடையாது. வீட்டில் இருக்கும் குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் கூட உணவில் இந்த சம்பா ரவையை சேர்த்துக் கொள்வது ஆரோக்கியத்திற்கு நல்லது. சம்பா ரவையை வைத்து சூப்பரான தோசை எப்படி செய்வது என்பதைப்பற்றித் தான் இந்த பிரிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். அரிசி சேர்க்காமல் ஒரு ருசியான உணவை செய்து சாப்பிடுவது ஆரோக்கியத்திற்கு கொஞ்சம் நல்ல விஷயம் தானே.

இந்த தோசை செய்வதற்கு ஒரு அகலமான பாத்திரத்தில் சம்பா கோதுமை ரவை – 1 கப், உளுந்து – 1/2 கப்பிற்க்கும் கொஞ்சம் குறைவாக, அவல் – 1/2 கப், வெந்தயம் – 1/4 ஸ்பூன், இந்த நான்கு பொருட்களையும் போட்டு தண்ணீர் ஊற்றி நன்றாக கழுவிவிட்டு, அதன் பின்பு நல்ல தண்ணீரை ஊற்றி 4 மணிநேரம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.

- Advertisement -

ரவை உளுந்து அவல் எல்லாம் நன்றாக ஊறி வந்த பிறகு அதில் இருக்கும் தண்ணீரை வடித்துவிட்டு, இந்த எல்லாப் பொருட்களையும் மிக்ஸியில் கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து தோசை மாவு போல அரைத்துக் கொள்ள வேண்டும். தேவைப்பட்டால் இதை கிரைண்டரில் போட்டு ஆட்டி எடுத்துக் கொள்ளலாம். அது நம்முடைய விருப்பம் தான். (தேவையான அளவு தண்ணீரை ஊற்றி அரைத்துக் கொள்ளுங்கள்.)

ஆட்டி எடுத்த இந்த மாவை ஒரு அகலமான பாத்திரத்தில் போட்டு, தேவையான அளவு உப்பு போட்டு, உங்கள் கையை கொண்டு ஒரு முறை நன்றாக கரைத்து விடுங்கள். அதன் பின்பு மூடிவைத்து 6 மணிநேரம் இந்த மாவை புளிக்க வைக்க வேண்டும். மாவு நன்றாக புளித்து வந்தவுடன் கரண்டியை கொண்டு மாவை நன்றாக கரைத்து விட்டு அதன் பின்பு தோசை வார்க்க வேண்டும்.

- Advertisement -

மாவு ரொம்பவும் திக்காக இருக்கும் பட்சத்தில் தேவைப்பட்டால் கொஞ்சம் தண்ணீர் ஊற்றி கரைத்துக் கொள்ளலாம். அடுப்பில் தோசைக்கல்லை வைத்து, கல் மிதமான சூடு வந்ததும் இந்த மாவை எடுத்து கல்லில் வார்த்து அரிசி மாவு தோசை போலவே மெல்லிசாக தேய்த்து நெய் அல்லது எண்ணெய் ஊற்றி மொறுமொறுவென சிவக்க வைத்து பரிமாறி பாருங்கள்.

அரிசிமாவு தோசைக்கும் இதற்கும் பெரியதாக சுவையில் எதுவும் வித்தியாசம் தெரியாது. ஆனால் கோதுமை ரவையில் இந்த தோசையை செய்து இருப்பதால் உடலுக்கு முழுக்க முழுக்க ஆரோக்கியம் தரக்கூடிய ஒரு பிரேக்ஃபாஸ்ட் ரெசிபி ஆக இருக்கும். தேவைப்பட்டால் இதை நீங்கள் இரவு டின்னருக்கு செய்துகொள்ளலாம். உங்களுக்கு பிடித்திருந்தால் மிஸ் பண்ணாம உங்க வீட்ல இந்த சிம்பிளான தோசையை ட்ரை பண்ணி பாருங்க.

சற்று முன்