புதன் பெயர்ச்சி பலன்கள் – மேஷ ராசிக்கு பெயர்ச்சி அடைந்தார் புத பகவான்

Budhan Peyarchi

சிறந்த அறிவாற்றலுக்கும், ஞானத்திற்கும் அதிபதியாகிய புதன் கடந்த மே 9ஆம் தேதியில் மீன ராசியிலிருந்து மேஷ ராசிக்கு சில வாரக்காலம் பெயர்ச்சியாகிறார்.குரு பகவானின் பெயர்ச்சி போலவே புதனின் பெயர்ச்சியும் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. ஏனொனில் புதன் கிரகம் ஒரு மனிதனின் உடல், மனதில் தாக்கத்தை ஏற்படுத்த வல்லது. அப்பெயர்ச்சியினால் 12 ராசியினருக்கும் ஏற்படும் பலன்களை இங்கு காணலாம்.

மேஷம்:
Mesham Rasiமேஷ ராசிக்கு 3 மற்றும் 6 ஆம் வீடுகளான மிதுன ராசிக்கும் கன்னி ராசிக்கும் அதிபதியாகிய புதன் உங்கள் ராசிக்கு பெயர்ச்சியடைந்ததால் இந்த ராசிக்காரர்களின் சிந்தனை மற்றும் செயல் திறன் அதிகரிக்கும். புதிதாகத் தொடங்கிய தொழில் வியாபாரங்களில் நல்ல லாபம் கிடைக்கும். விரும்பிய இடங்களில் பணிமாற்றம் கிடைக்கும். பெண்களுக்கு சிறிது உடல்நலக் குறைகள் ஏற்பட்டு நீங்கும். குழந்தை இல்லாதோருக்கு குழந்தைப் பேறு கிட்டும்.

ரிஷபம்:
Rishabam Rasiரிஷப ராசிக்கு 2 ஆம் மற்றும் 5 ஆம் வீடு ராசிகளான மிதுனம் மற்றும் கன்னிக்கு அதிபதியாகிய புதன் இந்த ராசிக்கு 12 ஆம் இடம் அதாவது மேஷத்தில் அமர்கிறார்.இந்த ராசிக்கு விரய ஸ்தான இடத்தில் புதன் அமர்வதால் பணப்பற்றாக்குறை ஏற்படும். உங்கள் எதிரிகளால் உங்களுக்கு தொல்லைகள் ஏற்படும். குடும்பத்திலும் பிரச்சனைகள் உருவாகும். கலைத் தொழிலில் உள்ளவர்களுக்கு வெளியூர் மற்றும் வெளிநாட்டு பயணங்களால் நன்மைகள் ஏற்படும். சிறிய உடல்நல பாதிப்புகள் ஏற்படும்

மிதுனம்:
midhunamமிதுன ராசிக்கும் இந்த ராசிக்கு 4 ஆம் வீடு ராசியான கன்னி ராசிக்குமான அதிபதியான புதன் இருப்பதால் இந்த ராசியினர் நற்பலன்களை அடைவார்கள். புதிதாக வாழ்க்கைக்கு தேவையான பொருட்களை வாங்குவார்கள். திடீர் பணவருவாய் கிடைக்கும். சொத்துக்களை வாங்கும் யோகம் உண்டாகும். மாணவர்கள் தாங்கள் விரும்பிய கல்வியில் சேர்வார்கள். பெண்களுக்கு நல்ல வரன்கள் அமைந்து திருமணம் நடக்கும். உங்களின் நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும்.

கடகம்:
Kadagam Rasiகடக ராசிக்கு புதன் 10 ஆம் இடமான மேஷ ராசியிலிருப்பதால் விவசாயத் தொழிலிருப்பவர்கள் நல்ல லாபமடைவார்கள்.உங்கள் சொந்தங்கள் நண்பர்கள் மூலம் உங்களுக்கு வருவாய் ஏற்படும். பணிபுரிவோருக்கு ஊதிய உயர்வுடன் பணிமாறுதல் கிடைக்கும். அரசியலில் இருப்போர்களுக்கு பதவிகள் கிடைக்கும்.சிறிய மருத்துவச் செலவுகள் ஏற்படும்.

சிம்மம்:
simmamசிம்ம ராசிக்கு புதன் 9 ஆம் இடத்திலிருப்பதால் நெருங்கிய உறவுகள் சிலர் உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவ செலவுகள் ஏற்படும்.வியாபாரங்களில் பெரும் லாபமில்லையென்றாலும் இருக்கும் வருவாய்க்கு குறைவேற்படாது. பிரிந்திருக்கும் தம்பதிகள் ஒன்று சேர்வார்கள். வெளிநாடுகளுக்கு செல்லும் யோகமுண்டாகும். பணவிவகாரங்களில் எச்சரிக்கை அவசியம்.பெண்களுக்கு மகிழ்ச்சியான நிகழ்வுகள் நடக்கும். குழந்தைகளால் பெருமையடைவீர்கள்.

- Advertisement -

கன்னி:
Kanni Rasiஇந்த ராசியின் அதிபதியாகிய புதன் இந்த ராசிக்கு 8 ஆம் இடத்தில் அமர்வதால் வருமானத்திற்கு குறைவிருக்காது. உடலில் புதியதொரு உற்சாகம் ஏற்படும். ஈடுபடும் அனைத்து செயல்களிலும் வெற்றி பெறுவீர்கள். பிரச்சனைகள் ஏற்படாமலிருக்க வீண் விவாதங்களைத் தவிர்க்கவும். மாணவர்கள் கல்வியில் கவனமுடன் படித்தால் மட்டுமே தேர்வில் வெற்றி பெற முடியும். உடல்நலம் நன்றாக இருக்கும்.

துலாம்:
Thulam Rasiதுலாம் ராசிக்கு 7 ஆம் இடத்திற்கு புதன் பெயர்வதால் மற்றவர்களிடம் பேசும் போது வார்த்தைகளில் கவனம் தேவை. பொன், பொருள் சேர்க்கையுண்டாகும். வாகனங்கள் இயக்கும் போது கவனம் தேவை. வாங்கிய கடன்களனைத்தும் வட்டியுடன் கட்டி கடனைத் தீர்ப்பீர்கள். அரசியலிலுள்ளோர் எதிலும் சற்று எச்சரிக்கையுடன் இருப்பது அவசியம். தொலைதூரப் பயணங்களால் நன்மைகள் ஏற்படும்.

விருச்சகம்:
Virichigam Rasiவிருச்சிக ராசிக்கு 6 ஆம் இடத்தில் புதன் அமர்வதால் நோய் மற்றும் கடன் ஏற்படும். அதே நேரத்தில் அக்கடனை தீர்ப்பதற்கான வருவாயும் கிடைக்கும். பேசும் வார்த்தைகளில் கவனம் கொண்டால் வீண் வாக்குவாதங்களைத் தவிர்க்கலாம். ஆன்மிகப் பயணங்களை மேற்கொள்வீர்கள். கலைத்தொழிலில் உள்ளவர்களுக்கு பணமும் புகழும் கிடைக்கும். உடல்நலம் பாதிப்பால் சிறிய மருத்துவச் செலவுகள் ஏற்படும். திருமணமாகாதவர்களுக்கு திருமணம் நடக்கும்.

தனுசு:
Dhanusu Rasiதனுசு ராசிக்கு 5 ஆம் இடத்தில் புதன் அமர்வதால் குடும்பத்தில் மனஸ்தாபம் ஏற்படும்.நினைத்த காரியங்களில் பல தடைகளுக்கு பின்பே வெற்றி கிடைக்கும். உறவினர்களால் அனுகூலம் ஏற்படும். தொழிலிலோ, வியாபாரத்திலோ லாபத்திற்கு எந்த ஒரு குறையும் இருக்காது. பெண்களுக்கு சிறு உடல் நல பாதிப்புகள் இருக்கும். எல்லா விஷயங்களிலும் சிறிது விட்டுக் கொடுத்து செல்வது நல்லது.

மகரம்:
Magaram rasiமகர ராசிக்கு 4 ஆம் வீட்டில் புதன் இருப்பதால் அதிக பண வருவாய் கிடைக்கும்.விவசாயிகளுக்கு நல்ல லாபமேற்படும். உங்களின் அரசியல் செல்வாக்கு உயரும்.வாகனம் போன்ற பல வகையான சொத்துக்களை வாங்கிக் குவிப்பீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படும்.உடல்நலம் சீராக இருக்கும் கடன்கள் அனைத்தும் தீர்க்கப்பட்டு மனநிம்மதி அடைவீர்கள்.

கும்பம்:
Kumbam Rasiகும்ப ராசிக்கு புதன் 3 ஆம் இடத்திற்கு நகர்வதால் உங்களுக்கோ உங்களின் நெருங்கிய உறவுகளுக்கோ ஆரோக்கிய குறைபாடு ஏற்படும் அரசியல்வாதிகளுக்கு நல்ல பதவிகள் கிடைக்கும் உங்களின் பணவரவிற்கோ வருமானத்திற்கோ குறைவதும் இருக்காது உறவுகளின் சுப நிகழ்ச்சிகளில் பங்கேற்று மகிழ்வீர்கள் அயல்நாடுகளுக்கு கல்வி பணிக்குச் செல்லும் அமைப்பு உண்டாகும் பெண்களால் தனலாபம் ஏற்படும்.

மீனம்:
Meenam Rasiமீன ராசிக்கு 2 ஆம் இடத்திற்கு புதன் செல்வதால் உங்கள் பேச்சு சிறந்து அதன் மூலமாகவே உங்களுக்கான காரியங்களை சாதித்துக் கொள்வீர்கள் உங்களுக்கு வெளிநபர்களிடம் மதிப்பு கூடும் உடலில் சிறு தொந்தரவுகள் இருக்கும் நீங்கள் நினைத்தக் காரியங்கள் அனைத்தும் நிறைவேறும் குழந்தைகளால் குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படும் பெண்களுக்கு சிறந்த இடத்தில் திருமணம் நிகழும்.

தினசரி ராசி பலன், வார பலன், மாத பலன் உள்ளிட்ட ஜோதிடம் சம்பந்தமான அனைத்து பதிவுகளையும் பெற தெய்வீகம் முகநூல் பக்கத்தை லைக் செய்யுங்கள்.