உங்கள் வாழ்க்கை நிலையை சொல்லும் புத்தி ரேகை பற்றி தெரியுமா ?

Kai regai

ஒரு மனிதனை விலங்குகளிடமிருந்தது வேறுபடுத்திக் காட்டுவது, அம்மனிதனுக்கே உரிய சிந்தனை திறனாகும். ஒரு மனிதனின் உள்ளங்கையில் அம்மனிதனின் அறிவாற்றலைப் பற்றிக் கூறும் ரேகை தான் “புத்தி ரேகை”. இந்த ” புத்தி ரேகை” பொதுவாக ஒரு மனிதனின் அறிவாற்றல், கல்வியறிவு மற்றும் மனதைப் பற்றி கூறக்கூடியதாக கருதப்படுகிறது. அப்படிப்பட்ட புத்தி ரேகையைப் பற்றிய சில விஷயங்களை இங்கு தெரிந்து கொள்வோம்.

Budhi regai

ஒருவரின் உள்ளங்கையில் பெரு விரலுக்கும் ஆட்காட்டி விரலுக்குமான நடுப்பகுதியின் வெளிப்புற ஓரத்தில் தொடங்கி, உள்ளங்கையின் கீழ்ப்பகுதி வெளிப்புற ஓரத்தை நோக்கிச் செல்லும் அடர்நிறமான ரேகைதான் “புத்தி ரேகை”. இந்த புத்தி ரேகை நல்ல நிறமாகவும், பின்னல்கள் இல்லாமலும், நேராகவும், மற்ற ரேகைகளின் குறுக்கீடுகளில்லாமலும் இருந்தால் அந்த நபர் மென்மையான கருணையுள்ளம் கொண்டவராகவும், சிறந்த சமூகப் பண்புகளை கொண்டவராகவும் இருப்பார். கடுமையாக உழைத்து மிகுந்த செல்வதை ஈட்டும் திறனுடையவராக இருப்பார்.

இந்த புத்தி ரேகை ஆட்காட்டி விலரை நோக்கி நீண்டிருந்தால் அவர் அதிர்ஷ்டம் மிகுந்தவராகவும், சிறந்த கல்வி கற்றவர்காகவும், பெரும் செல்வந்தராகவும் இருப்பார். மேலும் கோவில் சம்பந்தமான புனித காரியங்களை எடுத்து செய்பவராகவும், சமூகத்தில் மக்கள் செல்வாக்கை ஈட்டக்கூடிய நிலையிலும் இருப்பார்.

இந்த ரேகை நடுவிரலின் அடிப்பகுதிக்கு சற்று கீழான இடம் வரை நீண்டிருந்தால் அந்நபர் யாருக்கும் அஞ்சாத குணம் கொண்டவராகவும், ஆன்மிகம் சம்பந்தமான விஷயங்களை கற்றுத் தேர்ந்தவராகவும் இருப்பார். மேலும் சூழ்நிலைகளுக்கு ஏற்ப சிறந்த முடிவுகளை எடுக்கும் புத்திசாலித்தனம் இவரிடம் நிறைந்திருக்கும்.

KAI REGAI

- Advertisement -

புத்தி ரேகை மோதிர விரல் அடியின் நடுப்பகுதி வரை மட்டுமே நீண்டிருந்தால் அந்நபர் மிகப் பெரும் கல்வியையும் அதிகம் பட்டங்கள், பெரும் யோகத்தையும் கொண்டவராக இருப்பார். மேலும் தனது அறிவாற்றல் மற்றும் செயல்பாடுகளால் அரசாங்கப் பணிகளில் உயர்ந்தப் பதவிகளைப் பெறுவார். ஒரு சிலர் பள்ளிகள், கல்லூரிகளின் தலைமைப்பேராசிரியர்களாக இருப்பார்கள்.

புத்தி ரேகை சுண்டு விரல் அடியின் நடுப்பகுதி வரை நீண்டிருந்தால் அவர் பலவகையான சாத்திரங்களை கற்றுத் தேர்ந்தவராகவும், சிறந்த அறிவாற்றல் கொண்டவராகவும் இருப்பார். மேலும் தான் கற்றறிந்த கல்வியின் மூலம் மிகப் பெரும் செல்வங்களை ஈட்டும் யோகத்தைக் கொண்டவராக இருப்பார். தான் கற்று அறிந்ததை பிறருக்கு போதித்து அவர்களை மேலே உயர்த்தும் குணம் கொண்டிருப்பார்.

ஒரு சிலருக்கு புத்தி ரேகை துண்டு, துண்டாக உடைந்து காணப்படும். அப்படிப்பட்டவர்கள் தங்கள் வாழ்க்கையில் சரியாக கல்வி கற்க முடியாதவர்களாகவும், விஷயங்களை புரிந்து கொள்ளும் திறன் சற்று குறைவாக உள்ளவராகவும், வாழ்வில் சில கஷ்டங்களை அனுபவிக்கக்கூடியவராகவும் இருப்பார். இவை புத்தி ரேகை பற்றி பொதுவான பலன்களாகும்.

இதையும் படிக்கலாமே:
தலைவிதியை தீர்மானிக்கும் ரேகைகள் உங்களை பற்றி கூறுவதென்ன?

கை ரேகை, ஜோதிடம் மற்றும் ஆன்மீகம் சார்ந்த பதிவுகளை உடனுக்குடன் பெற தெய்வீகம் மொபைல் APP ஐ டவுன்லோட் செய்துகொள்ளுங்கள்.