உலகக்கோப்பைக்கு முன் இந்த இரண்டு வீரர்களுக்கும் அதிக வாய்ப்புகளை நானே வழங்க உள்ளேன்- கோலி ஓபன் டாக்

Kohli

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான முதலாவது டி20 போட்டி நேற்று (24-02-2019) விசாகப்பட்டினத்தில் நடந்து முடிந்தது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பீல்டிங் செய்ய தேர்வு செய்தது. அதன்படி விளையாடிய இந்திய விளையாடத்துவங்கியது.

Toss

இந்திய அணி தனது இன்னிங்க்ஸை 20 ஓவர்களில் வெறும் 126 ரன்கள் மட்டுமே சேர்த்தது. இந்திய அணி சார்பில் ராகுல் மட்டுமே அரைசதம் 50 அடித்து ஆறுதல் அளித்தார். மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினர். பிறகு ஆடிய ஆஸ்திரேலிய அணி ஆட்டத்தின் கடைசி ஓவரில் 2 பவுண்டரி அடித்து வெற்றி பெற்றது. அந்த அணி சார்பாக மேக்ஸ்வெல் அதிரடியாக ஆடி 56 ரன் குவித்தார்.

இந்த தோல்விக்கு பிறகு இந்திய அணி வீரர்கள் குறித்து தனது கருத்தினை தெரிவித்த கோலி : இந்திய அணியில் இப்போது இடம்பிடித்திருக்கும் வீரர்கள் உலககோப்பை தொடரில் ஆடுவதற்கு வாய்ப்புகள் அதிகம். ஏனென்றால், தற்போது அணி நன்றாக செட்டாகி உள்ளது. மேலும், நான் ராகுல் மற்றும் பண்டிற்கு தனிப்பட்ட முறையில் நிறைய வாய்ப்புகளை வழங்க உள்ளேன்.

Team

ஏனெனில், உலகக்கோப்பை தொடருக்கு முன் அதிக வாய்ப்புகளை அவர்களுக்கு கொடுத்தால் அவர்களுக்கு நம்பிக்கை கிடைக்கும். மேலும், அந்த வாய்ப்பின் மூலம் நிச்சயம் அவர்களது திறமையினை முழுமையாக நிரூபிப்பார்கள் என்ற நம்பிக்கையும் எனக்கு உள்ளது என்று கோலி தெரிவித்தார்.

இதையும் படிக்கலாமே :

மிரட்டல் சாதனை : டி20 போட்டியில் 4 பந்தில் 4 விக்கெட் எடுத்து அசத்திய ஆப்கானிஸ்தான் வீரர் ரஷீத் கான் – வைரல் வீடியோ

மேலும் கிரிக்கெட் செய்திகள் குறித்து உடனடி தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்து இருங்கள்