புதனால் உங்கள் லக்கினத்திற்கு என்ன பலன் உண்டு தெரியுமா ?

Budhan Peyarchi
- Advertisement -

கிரகங்களில் புதன் கிரகம் பல சிறப்பம்சங்கள் பொருந்திய கிரகமாகும். ‘பொன் கிடைத்தாலும் புதன் கிடைக்காது”என்ற பழமொழி புதன் கிரகத்தை குறித்து தான் சொல்லப்பட்டது.ஒரு மனிதனின் கணிதத்திறன் சிந்திக்கும் ஆற்றல் கலைகளில் நிபுணத்துவம் போன்றவற்றிற்கு காரகன் புத பகவானாவார். அப்படிப்பட்ட புதனால் 12 லக்னத்தாருக்கு ஏற்படும் பலன்களை இங்கு காண்போம்.

மேஷம் :
Mesham Rasiமேஷ லக்னத்தாருக்கு புதன் தசை அவ்வளவு நன்மைகளைச் செய்யாது. இந்த லக்னத்திற்கு புத பகவான் நன்மைகளைச் செய்ய வேண்டுமென்றால் லக்னத்திற்க்கு பத்து, பதினொன்றாமிட கிரகங்களின் நட்பு வலு மட்டும் பெற்றிருக்க வேண்டும். பதினொன்றாம் இடத்தலிருப்பது சிறப்பான நிலை.

ரிஷபம் :
Rishabam Rasiரிஷப லக்னத்திற்கு புதன் பகவான் சுபராகவும், யோகராகவும் இருக்கிறார். இந்த லக்னத்தின் அதிபதியான சுக்கிரனுக்கு அவரது இன்னொரு வீடான துலாமே மூலத் திரிகோணம் மற்றும் ஆறாம் வீடாக அமைவதால், சுக்கிரன் ஆறாமிடத்திற்கு ஆறில் மறைந்து உச்சமாகவோ, எட்டில் மறைந்து லக்னத்தில் ஆட்சியாகவோ இருக்கும் நிலையில் மட்டுமே யோகம் செய்வார். இல்லையெனில் சுக்கிரத்தசையில் ஆறாமிடத்துப் பலன்களே அதிகம் நடக்கும்.

இந்த லக்னத்திற்கு மற்றொரு யோகாதிபதியான சனியும் இந்த லக்னத்திற்கு பாதகாதிபத்தியம் பெறுவதால், அவராலும் முழுமையான யோகத்தைத் தர முடியாது. புதன் மட்டுமே இரண்டு, ஐந்தாமிடங்களில் சுப வலுப்பெற்று வக்ரமடையாமல் இருக்கும் நிலையில் மிகப்பெரிய யோகங்களைச் தர வல்லவர். லக்னத்திலும், ஒன்பது, பத்தாமிடங்களிலும் இருக்கும் புதனாலும் ஜாதகருக்கு நன்மைகள் உண்டு.

- Advertisement -

மிதுனம் :
midhunamமிதுனத்திற்கு புதன் லக்னாதிபதியாவதால் சகல பாக்யங்களையும் தரும் அமைப்பினைப் பெறுகிறார். மிதுனத்தில் ஆட்சி பெற்றோ, கன்னியில் உச்சம் பெற்றோ, துலாம், கும்பம் போன்ற இடங்களில் நட்புடன் திரிகோண வலுப் பெற்றோ இருக்கும் நிலையில் ஜாதகருக்கு அனைத்து விதமான யோகங்களையும் வழங்குவார். மீனத்தில் முறையான நீசபங்கம் பெற்றிருந்தால் முற்பகுதி வாழ்வை கஷ்டமாக்கி, பிற்பகுதி வாழ்வில் உச்ச நிலைக்கு உயர்த்துவார்.

பனிரெண்டாமிடமான ரிஷபத்தில் இருந்தாலும் திக்பலத்திற்கு அருகில் இருப்பதால் கெடுபலன்களை தராமல் தனது தசையில் ஜாதகரை வெளியிடங்களில் அலைந்து பொருள் தேட வைப்பார். ஆனால் நான்காமிடமான கன்னியில் எவருடனும் சேராமல் தனித்து உச்சம் பெறும் புதனால் கேந்திராதிபத்திய தோஷம் பெற்று கெடுபலன்களை தருவார்.

கடகம் :
Kadagam Rasiகடக லக்னத்திற்கு புதன் மூன்று, பனிரெண்டிற்குடைய ஆதிபத்திய விஷேசமில்லாத பாவி என்பதால் சிக்கலான அமைப்பில் இருந்தால் மட்டுமே நன்மைகளைச் செய்வார். இந்த லக்னத்திற்கு புதன் ஆட்சி, உச்சம் பெறுவது சிறப்புகளைத் நிலையில்லை. கடகத்திற்கு அவரது தசையில் பெரும் நன்மைகளைச் செய்ய வேண்டும் என்றால் இந்த லக்னத்திற்கு பத்து அல்லது பதினொராமிடங்களில் மட்டுமே இருக்க வேண்டும்.

சிம்மம் :
simmam
சிம்ம லக்னத்திற்கு இரண்டு, பதினொன்றாம் வீட்டிற்க்கு புதன் அதிபதி. அதிலும் சிம்ம ராசிநாதன் சூரியனுக்கு புதன் நட்பாக இருப்பவர். எனவே புதன் ஆட்சி, உச்சம் பெற்றிருந்தால் பொருளாதார விஷயத்தில் மிகப் பெரிய ஏற்றங்களைத் தருவார்.

அதிலும் லக்னத்தில் அதி நட்பு மற்றும் திக்பலமுடன் இருப்பது மிகவும் சிறப்பான நிலை. லக்னாதிபதியின் உத்திர நட்சத்திர சாரத்தில் இருந்தால் புதன் தனது தசையில் மிகப்பெரும் நன்மைகளைச் செய்வார். மூன்று, பத்தாமிடங்களும் சிம்ம லக்னத்திற்கு அவர் நன்மை செய்யும் இடங்கள்தான்.

- Advertisement -

கன்னி :
Kanni Rasiகன்னிக் லக்னத்திற்கு அவர் லக்னாதிபதி மற்றும் ஜீவனாதிபதியாக இருப்பதால் வாழ்க்கைக்குத் தேவையான அனைத்தையும் செய்யக் கடமைப்பட்டவர் என்பதால் லக்னத்தில் ஆட்சி, உச்சம், மூலத் திரிகோணம், திக்பலம் ஆகியவற்றைப் பெற்று வக்ரமின்றி அமர்வது ஒருவரை மிகச் சிறப்பான நிலைக்கு கொண்டு செல்லும்.

நவாம்சத்தில் அவர் நீசம் பெறாமல் இருக்க வேண்டியது மிகவும் முக்கியம். ஐந்து, ஒன்பதாமிடங்களில் நட்பு நிலை பெற்றும், பத்தாமிடத்தில் கேந்திராதிபத்ய தோஷம் பெறாமல் இருப்பதும் சிறப்பு தரும்.

துலாம் :
Thulam Rasiதுலாம் லக்னத்திற்கு புதன் ஒன்பது, பனிரெண்டிற்குடைய யோகர் ஆவார். மேற்கண்ட இடங்களில் வலிமை பெற்றிருக்கும் நிலைகளில் அவரால் ஜாதகருக்கு நல்ல யோகங்கள் உண்டு. பனிரெண்டாம் வீட்டில் புதன் வலுப்பெற்றால் வெளிநாடு செல்லும் யோகம் ஏற்படும். லக்னத்திலும், நான்கு, ஐந்தாமிடங்களிலும் நட்பு பலம் பெற்றிருப்பது நலம்.

விருச்சிகம் :
virichigamவிருச்சிக லக்னத்திற்கு எட்டு, பதினொன்றாம் வீட்டிற்குரிய புதன் கொடிய பாபி ஆகிறார். எட்டாமிடத்தில் சுபத்துவம் பெற்று சுப நிலையில் இருந்தால் ஜாதகரை வெளிநாட்டுக்கு அனுப்பி சம்பாதிக்க வைப்பார். அப்போதும் கூட முழுமையான யோகத்தைச் தர மாட்டார்.

பொதுவாக, புதன் தசை வராத விருச்சிகத்தினர் யோகசாலிகள். பதினொன்றாமிடத்தில் பலம் பெற்றிருந்தால் ஜாதகர் புத்திசாலியாகவும், புதன் சம்பந்தப்பட்ட கணினி போன்ற துறைகளிலிலும் பணிபரிபவராக இருப்பார். மூன்று, பத்தாமிடங்களில் நட்பு வலுவில் இருக்கையில் கெடுதல்களைச் ஏற்படுத்தமாட்டார்.

- Advertisement -

தனுசு :
Dhanusu Rasiதனுசு லக்னத்திற்கு ஏழு, பத்திற்குடைய மாரகாதிபதி, பாதகாதிபதி, கேந்திராதிபதி எனும் நிலை புதன் பெறுகிறார். இந்த லக்னத்திற்கு அவர் ஆட்சி, உச்சம் பெறாமலிருப்பது நன்று. மூன்று, ஆறு, பதினொன்றாமிடங்களில் சுப வலுப் பெற்றிருக்கும் நிலைகளில் தன் தசையில் யோகங்களைத் தருவார்.

மகரம் :
Magaram rasiமகர லக்னத்திற்கு ஆறு, ஒன்பதிற்குடைய இரண்டு எதிர் நிலைகளைப் புதன் பெறுகிறார், என்றாலும் ஒன்பதாம் பாவத்தின் பாக்யாதித்துவமே மேலோங்கியிருப்பதால் மகரத்திற்கு புதன் தசையில் பரிபூரண பாக்கியங்களைத தருவார்.

ஆனால் பனிரெண்டில் மறைந்து ஆறாமிடத்தைப் பார்த்து வலுப் படுத்தி விட்டால் பாக்யாதிபத்தியம் மறைந்து ஆறாமிடத்துப் பலம் ஓங்கி தன் தசா,புக்திகளில் ஜாதகரை கடுமையான கடன், நோய், எதிரி போன்ற பிரச்சனைகளைத் தருவார்.

இந்த லக்னத்திற்கு புதன் ஆறாமிடத்தில் ஆட்சி பெறுவதோ, சம்பந்தப்படுவதோ, பார்ப்பதோ கூடாது. லக்னம், இரண்டு, ஐந்து, பத்தாமிடங்களில் நட்புநிலை பெற்று தசை நடத்தும்போது யோகங்களைச் செய்வார்.

கும்பம் :
midhunamகும்ப லக்கினத்திற்கு புதன் ஐந்து, எட்டிற்குடையவர் என்பதால் ஐந்தில் ஆட்சி பெற்று தசை நடத்தினால் முழுக்க நன்மைகளையும், எட்டில் உச்சம் பெற்று தசை நடத்தினால் தன்னைதானே கெடுத்துக் கொள்ளும் செயல்களைச் செய்ய வைப்பார். எட்டில் சுபத்துவம் பெற்றால் வெளிநாடு செல்லும் யோகம் உண்டு. லக்னம், நான்கு, ஏழு, ஒன்பது ஆகிய இடங்களில் நன்மைகளைச் செய்வார்.

மீனம் :
Meenam Rasiமீன லக்கினத்திற்கு, தனுசு லக்னத்தைப் போலவே மாரகாதிபதி, பாதகாதிபதி, கேந்திராதிபதி நிலைகளை புதன் பெறுகிறார் என்பதால் இவர் ஆட்சி, உச்சம் பெற்றாலும் நன்மைகளைத் தராது. பதிலாக மூன்று, ஆறு, பதினொன்றாமிடங்களில் நட்பு நிலை பெற்று தசை நடத்தினால் யோகங்களைச் செய்வார்.

தினசரி தமிழ் காலண்டர் குறிப்புகளை அறிய இங்கு கிளிக் செய்யவும்.

- Advertisement -