பிரட்டில் தடவ தான் வெண்ணை என்று நினைத்திருப்போம்? ஆனால் முகம் கண்ணாடி போல பளபளக்க வெண்ணெய் வைத்து 10 குறிப்புகள் இதோ!

butter-face-beauty
- Advertisement -

வெண்ணெய் என்றாலே அதை ரொட்டியில் தடவி சாப்பிடுவது தான் நம் நினைவுக்கு வரும். வெண்ணை கொண்டு இப்போது பல சமையல் வகைகள் புதிது புதிதாக சமைத்து வந்தாலும், வெண்ணையின் மூலம் அழகையும் மேம்படுத்த முடியுமா? என்று நாம் யோசித்திருக்க மாட்டோம். வெண்ணெய் வைத்து நம்முடைய முகத்தை பளிங்கு போல பளிச்சுன்னு கண்ணாடி மாதிரி ஜொலிக்க என்னவெல்லாம் செய்யலாம்? என்பதை இந்த அழகு குறிப்பு பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம் வாருங்கள்.

குறிப்பு 1:
சுத்தமான வெண்ணை வாங்கி வைத்துக் கொள்ளுங்கள். வெண்ணை இரண்டு டேபிள் ஸ்பூன் அளவிற்கு எடுத்து அதில் ஒரு டேபிள் ஸ்பூன் ஆலிவ் ஆயில் சேர்த்து நன்கு கலந்து வைக்க வேண்டும். இந்த கலவையை முகம் முழுவதும் தடவி 15 நிமிடம் உலர விட்டு, பின்னர் துடைத்து எடுத்தால் இன்ஸ்டன்டாக உங்களுடைய முகம் பளிங்கு போல மின்னும்.

- Advertisement -

குறிப்பு 2:
அதிகப்படியாக முகத்தில் எண்ணெய் வழிவதை கட்டுப்படுத்த பாலில் ஒரு டேபிள் ஸ்பூன் வெண்ணெய் கலந்து கிரீம் போல கலந்து வைத்துக் கொள்ளுங்கள். இந்த கிரீமை முகம் முழுவதும் தடவி அப்ளை செய்து பின் துடைத்து எடுத்தால் ஆரம்பத்தில் முகத்தில் எண்ணெய் ஒட்டிக் கொண்டிருப்பது போல தோன்றினாலும், சிறிது நேரத்தில் நல்ல ரிசல்ட் தெரியும். வாரம் இரண்டு முறை இதை செய்யலாம்.

குறிப்பு 3:
பால் விற்பனையாகங்களில் பிரஷ் கிரீம் கிடைக்கும். அந்த பிரெஷ் கிரீம் உடன் தேவையான அளவிற்கு வெண்ணெய் சேர்த்து கலந்து முகத்தில் தடவினால், பார்ட்டிக்கு செல்ல இன்ஸ்டன்ட் க்ளோ கிடைக்கும். வாரம் இரண்டு முறை இதை முகத்தில் மசாஜ் செய்தால் முகப்பருக்கள் தோன்றாது.

- Advertisement -

குறிப்பு 4:
ஒரு கப் தயிரில் ஒரு டேபிள்ஸ்பூன் வெண்ணெய் சேர்த்து நன்கு கலந்து வைத்துக் கொள்ளுங்கள். வறண்ட சருமத்தினர் இதை முகத்தில் வாரம் ஒரு முறை தடவி, உலர விட்டு கழுவினால் மெத்தென்று மிருதுவாக ஈரப்பதத்துடன் உங்களுடைய சருமம் நீடிக்கும்.

குறிப்பு 5:
ரெண்டு ஸ்பூன் தேங்காய் எண்ணெயுடன், இரண்டு ஸ்பூன் வெண்ணெய் சேர்த்து நன்கு கலந்து வைத்துக் கொள்ளுங்கள். இது எண்ணெய் பசை தன்மை உள்ளதாக இருக்கும் இதை நீங்கள் முகம் முழுவதும் தடவி பத்து நிமிடம் உலர விட்டு ஒரு காட்டன் துணியால் துடைத்து எடுத்த பின் குளிர்ந்த நீரினால் கழுவினால் முகம் கண்ணாடி மாதிரி மினு மினுன்னு இருக்கும்.

- Advertisement -

குறிப்பு 6:
கால் கப் அளவிற்கு பாதாம் பருப்புகளை நன்கு பவுடராக பொடித்து சேர்த்துக் கொள்ளுங்கள். இதனுடன் மூன்று டேபிள் ஸ்பூன் வெண்ணெய் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும். பின்னர் இதை முகம் முழுவதும் அப்ளை செய்தால் சருமத்திற்கு நல்ல ஒரு ஊட்டச்சத்து கிடைத்து, முதிர்ந்த தோற்றத்திலிருந்து இளமையை தக்க வைக்க உதவும்.

குறிப்பு 7:
ரெண்டு கேரட்டை தோல் நீக்கி ஜூஸ் போல மிக்ஸியில் அடித்து வைத்துக் கொள்ளுங்கள். இந்த ஜூஸுடன் வெண்ணெய் சேர்த்து கிரீம் போல கலந்து முகத்தில் தடவி உலர விட்டு கழுவினால் நிறம் மெருகேற ஆரம்பிக்கும். வாரம் ஒரு முறை ட்ரை பண்ணி பாருங்க கருப்பா இருக்கிற சருமம் வெள்ளையா மாறும்.

குறிப்பு 8:
முகத்தில் இருக்கக்கூடிய இறந்த செல்களை நீக்க ரெண்டு டேபிள் ஸ்பூன் வெண்ணெயுடன் சிறிதளவு உப்பு சேர்த்து நன்கு கலந்து வைத்துக் கொள்ளுங்கள். இதை மசாஜ் செய்து ஃபேஸ் பேக்காக போட்டு 15 நிமிடம் கழித்து காட்டன் துணியால் துடைத்து எடுத்தால் இறந்த செல்கள் நீங்கிவிடும்.

குறிப்பு 9:
முகம் அடிக்கடி வறண்டு போனால் பப்பாளி பழத்தை கூழ் போல செய்து அதனுடன் ஒரு டேபிள் ஸ்பூன் பட்டர் சேர்த்து கிரீம் போல முகத்தில் தடவி உலர விட்டு துடைத்தால் நல்ல ரிசல்ட் தெரியும், எப்போதும் ஈரப்பதத்துடன் இருக்கும்.

இதையும் படிக்கலாமே:
வீட்டிலிருந்தே தலைமுடியை ரொம்ப சுலபமாக “V” கட் & “U” கட் செய்வது எப்படி? இது தெரிஞ்சா இனி பார்லருக்கு போய் நூற்றுக்கணக்கில் செலவு பண்ணவே மாட்டீங்க!

குறிப்பு 10:
அதிகப்படியான எண்ணெய் சருமத்தில் ஊறினால் ஒரு பாவக்காயை மிக்ஸியில் அடித்து கூழாக்கி கொள்ளுங்கள். அதனுடன் தேவையான அளவிற்கு வெண்ணெயை சேர்த்து கலந்து முகத்தில் தடவி, உலர விட்டால் சரும பிரச்சனைகள் பலவும் தீரும். எண்ணெய் பிசுக்கு கொஞ்சம் கூட இருக்காது.

- Advertisement -