வீட்டிலிருந்தே தலைமுடியை ரொம்ப சுலபமாக “V” கட் & “U” கட் செய்வது எப்படி? இது தெரிஞ்சா இனி பார்லருக்கு போய் நூற்றுக்கணக்கில் செலவு பண்ணவே மாட்டீங்க!

hair-cut
- Advertisement -

நம்முடைய தலைமுடி விதவிதமான வடிவங்களில் இருப்பதை நாம் விரும்புகிறோம். அதிலும் பெண்கள் என்றால் சொல்லவே வேண்டாம். வீ கட்டிங், யூ கட்டிங், ஸ்ட்ரைட் கட்டிங், கர்லி கட்டிங் என்று டிசைன்களுக்கு பஞ்சமில்லாமல் அடுக்கிக் கொண்டே போகலாம். அந்த அளவிற்கு ஹேர் கட் செய்வதில் மோகம் கொண்டவர்களுக்கு வீட்டில் இருந்தே பத்து பைசா செலவில்லாமல் எப்படி வீ கட் & யூ கட் செய்வது? என்பதை தான் இந்த அழகு குறிப்பு பதிவின் மூலம் இனி பார்க்க இருக்கிறோம்.

“V” கட் செய்வது “யூ” கட் செய்வது எல்லாம் ஐந்து நிமிடம் கூட ஆகாத வேலை! ஆனால் இதற்கு நூற்றுக்கணக்கில் வசூலிக்கும் அழகு நிலையங்கள் ஏராளம் நம் நாட்டில் உண்டு. நம்மை சுற்றி இருக்கக்கூடிய இந்த அழகு நிலையங்களில் இவ்வளவு செலவு செய்து தான் நம்முடைய தலைமுடியை அழகு படுத்த வேண்டுமா என்ன? ரொம்ப சிம்பிளா நம்ம வீட்டிலேயே நாமளே கூட செய்யலாம் அல்லது யாராவது ஒருவரை செய்யவும் சொல்லலாம்.

- Advertisement -

முதலில் ஹேர் கட் செய்வதற்கு தலையை நன்கு அலசி சுத்தம் செய்து ஹேர் வாஷ் செய்து கொள்ளுங்கள். அதன் பிறகு முடியை நன்கு உலர விட்டு, சிக்குகள் கொஞ்சம் கூட இல்லாமல் பார்த்துக் கொள்ளுங்கள். பிரஷ்ஷாக இருக்கக்கூடிய இந்த தலைமுடியை எண்ணெய் எல்லாம் போட்டு தடவிக் கொண்டு ஹேர் கட் செய்தால் சரியாக வராது.

சிக்குகள் எடுத்த பின்பு எல்லா முடியையும் ஒன்றாக வாரி மண்டை ஓட்டின் உச்சிக்கு வந்து ரப்பர் பேண்ட் ஒன்றை இறுக்கமாக போட்டுக் கொள்ளுங்கள். தலைமுடியின் உச்சியில் தான் நாடி துடிக்கும். அந்த இடத்தில் சரியாக எல்லா முடியையும் கொண்டு வந்து ரப்பர்பேண்ட் போட்டு பிறகு முடியை முன்புறமாக தொங்க விடுங்கள்.

- Advertisement -

தொங்கவிட்ட பின்பு முடியை ஒரு முறை நன்கு வாறிக் கொள்ளுங்கள். கடைசியாக இருக்கக்கூடிய பகுதியை எவ்வளவு தேவையோ, அந்த அளவிற்கு பிடித்து நல்ல ஷார்ப்பான கத்திரிக்கோலால் நேராக வெட்டுங்கள். எல்லா முடியும் சரிசமமாக நேராக வெட்டியதும், கூந்தலை பின்புறம் போட்டு ரப்பர் பேண்டை எடுத்து விடுங்கள். கடைசியாக ஒருமுறை சீப்பை கொண்டு முடியை நன்கு வாரி விடுங்கள். அவ்வளவுதான், இப்போது பார்த்தால் அவ்வளவு அழகாக, பிரமாதமாக கொஞ்சம் கூட வேலை மேழே கீழே செல்லாமல் V போல சரியாக இருக்கும்.

இதுவே நீங்கள் ‘யூ’ கட் செய்ய வேண்டும் என்றால். தலை முடியை காய வைத்ததும் நேராக முன்னிலிருந்து பின்புறம் வரை வகிடு எடுத்து முடியை இரண்டாக பிரித்துக் கொள்ளுங்கள். பிரித்த முடியை ரெண்டு பக்கமும் முன்புறம் கொண்டு வந்து நன்கு வாரிக் கொள்ளுங்கள். பின்னர் இரண்டு முடியையும் சேர்த்து கழுத்திற்கு கீழே கொண்டு வந்து ஒரு ரப்பர் பேண்டை இறுக்கமாக போட்டுக் கொள்ளுங்கள். பின்னர் அடிப்புறம் இருக்கும் முடியை ஒருமுறை வாரி, இடையே ஒரு ரப்பர் பேண்டை கடைசியாக கீழ்புறமாக ஒரு ரப்பர் பேண்டை போட்டுக் கொள்ளுங்கள்.

இதையும் படிக்கலாமே:
சென்சிடிவ் மற்றும் டேமேஜ் சருமத்திற்கு கடலை மாவு பேக் போட்டால் இப்படித்தான் போடணும்! 10 நிமிடத்தில் நம்ம முகமா? இதுன்னு நீங்களே வியப்பீங்க!

எந்த இடத்தில் நீங்கள் முடியை வெட்ட இருக்கிறீர்களோ, அதற்கு கீழே கடைசியாக ரப்பர் பேண்ட் போட வேண்டும். ரப்பர் பேண்ட் போட்ட இடத்திற்கு மேலே நேராக முடியை வெட்டி விடுங்கள். அவ்வளவுதான், இப்பொழுது எல்லா ரப்பர் பேண்டையும் கழட்டிவிட்டு, முடியை பின்னாடி போட்டு பாருங்கள். யூ ஷேப்பில் அழகாக வந்திருக்கும். அவ்வளவுதான், நமக்கு நாமே வீட்டிலேயே பத்து பைசா செலவு இல்லாமல் இப்படியும் ஹேர் கட் செய்து அசத்தலாம்.

- Advertisement -