வெண்ணெய் அழகு குறிப்பு

butter face
- Advertisement -

பால் மற்றும் பால் சார்ந்த பொருட்களுக்கு சருமத்தை பாதுகாக்கும் தன்மை அதிகமாக இருக்கிறது என்று நம் அனைவருக்கும் தெரியும். நம்முடைய பெரும்பாலான ஃபேஸ் பேக்கில் பால் அல்லது தயிரை சேர்த்து நாம் உபயோகப்படுத்தி இருக்கிறோம். அந்த வகையில் வெண்ணையை முகத்தில் பயன்படுத்துவதன் மூலம் என்னென்ன பிரச்சனைகள் சரியாகும் என்றுதான் இந்த அழகு குறிப்பு குறித்த பகுதியில் நாம் பார்க்க போகிறோம்.

வெண்ணையில் ஒமேகா 6 மற்றும் ஒமேகா 3 இருக்கின்றன. அது மட்டும் அல்லாமல் ஆன்டி-ஆக்சைடும் நல்ல கொழுப்பு சத்துகளும் அதிகமாக இருக்கிறது. இதை நாம் முகத்தில் தடவுவதன் மூலம் முகத்திற்கு தேவையான அனைத்து விதமான சத்துக்களும் நமக்கு கிடைக்கும். சருமத்தில் ஏற்படக்கூடிய அனைத்து வகையான பிரச்சனைகளையும் தீர்ப்பதற்கு இந்த வெண்ணெய் உபயோகப்படுகிறது.

- Advertisement -

இதை தனியாக பயன்படுத்துவதை விட இதனுடன் சில பொருட்களை சேர்த்து பயன்படுத்தும் போது அதன் பலன் மிகவும் அதிகமாகவே தென்படும். முகத்திற்கு நாம் வெண்ணையை பயன்படுத்தும் பொழுது மிகவும் சுத்தமான வெண்ணையாக பார்த்து வாங்கிக் கொள்ள வேண்டும். முடிந்த அளவிற்கு வீட்டிலேயே தயாரிக்கப்படும் வெண்ணெய் உபயோகப்படுத்துவது மிகவும் சிறந்ததாக இருக்கும்.

எண்ணெய் சருமம் இருப்பவர்கள் பால் மற்றும் வெண்ணையை கலந்து முகத்தில் தடவி உலர விட்டு வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும். இப்படி வாரத்திற்கு இரண்டு முறை செய்வதன் மூலம் அவர்களின் முகத்தில் இருக்கக்கூடிய அதிகப்படியான எண்ணெய் பசை குறைய ஆரம்பிக்கும். வறண்ட சருமம் இருப்பவர்கள் தயிருடன் வெண்ணையை கலந்து முகத்தில் ஃபேஸ் பேக் போட்டு 20 நிமிடம் கழித்து வெதுவெதுப்பான நீரில் கழுவுவதன் மூலம் வறண்ட சருமம் நீங்கி புத்துணர்ச்சியுடன் இருக்கும்.

- Advertisement -

வெண்ணெயுடன் கஸ்தூரி மஞ்சள் தூளை கலந்து முகத்தில் தடவி 20 நிமிடம் கழித்து முகத்தை வெதுவெதுப்பான நீரில் கழுவ முகத்தில் ஒருவித பொலிவு ஏற்படும். ஆலிவ் எண்ணெய் மற்றும் உருக்கிய வெண்ணையை சம அளவு எடுத்து கலந்து முகத்தில் தடவுவதன் மூலம் உடனடியான புத்துணர்ச்சி ஏற்படும். வெள்ளரிக்காய் சாறுடன் வெண்ணெயை சேர்த்து கலந்து முகத்தில் தடவுவதன் மூலம் முகத்தில் இருக்கக்கூடிய தழும்புகள் அனைத்தும் மறைய ஆரம்பிக்கும். முக சுருக்கங்கள் நீங்கும். பன்னீருடன் வெண்ணையை கலந்து முகத்தில் தடவி உலர விட்டு பிறகு வெதுவெதுப்பான நீரில் கழுவி வர சருமத்தின் நிறம் மேலோங்கும்.

முகப்பருக்கள், வடுக்கள் என்று எது இருந்தாலும் அது அனைத்தையும் நீக்குவதற்கு வெண்ணெய் உதவி புரியும். காயங்கள் மற்றும் தழும்புகளில் வெண்ணையை தடவுவதன் மூலம் காயங்கள் விரைவிலேயே ஆற ஆரம்பிக்கும். தழும்புகளும் மறைய ஆரம்பிக்கும். வாரத்திற்கு இரண்டு முறை என்ற வீதம் எந்த ஃபேஸ் பேக் ஆக இருந்தாலும் வெண்ணையை பயன்படுத்தி உபயோகப்படுத்துவதன் மூலம் நல்ல பலனை பெற முடியும்.

இதையும் படிக்கலாமே: முகத்தை என்றும் இளமையாக வைத்திருக்க உதவும் வெள்ளரிக்காய் ஃபேஸ் க்ரீம்

மிகவும் அற்புதமான பலன்களை தரக்கூடிய வெண்ணையை நம் முகத்தில் பயன்படுத்தி என்றும் இளமையுடனும் பொலிவுடன் திகழ்வோம்.

- Advertisement -