10 நிமிடத்தில் சூப்பரான முட்டைக்கோஸ் பக்கோடா இப்படி செய்ய முடியும்னா எதுக்கு வேற எதையாவது தேடனும்? குழந்தைகள் கேட்டால் உடனே ரெடி பண்ணி கொடுக்கலாமே!

cabbage-pakkoda_tamil
- Advertisement -

குழந்தைகள் எதையாவது வேண்டுமென்று கேட்கும் பொழுது எதுவுமே தேட வேண்டாம். உங்களிடம் கொஞ்சம் முட்டைகோஸ் இருந்தால் சட்டுனு பத்து நிமிடத்தில் இந்த மொறு மொறு கிரிஸ்பியான பக்கோடா செய்து கொடுத்து அசத்தலாம். ரொம்பவே ஆரோக்கியம் நிறைந்த இந்த சூப்பரான, க்ரிஸ்பியான முட்டைக்கோஸ் பக்கோடா ரெசிபி எப்படி எளிதாக தயாரிப்பது? என்பதைத் தான் இந்த பகுதியின் மூலம் இனி தெரிந்து கொள்ள இருக்கிறோம்.

தேவையான பொருட்கள்

நறுக்கிய முட்டைகோஸ் – ரெண்டு கப், பெரிய வெங்காயம் – ஒன்று, உப்பு – சிறிதளவு, மஞ்சள் தூள் – கால் ஸ்பூன், மிளகாய்த்தூள் – அரை ஸ்பூன், பெருங்காயத்தூள் – கால் ஸ்பூன், இஞ்சி பூண்டு விழுது – கால் டீஸ்பூன், அரிசி மாவு – கால் கப், கடலை மாவு – முக்கால் கப்.

- Advertisement -

செய்முறை

ரெண்டு கப் வரும் அளவிற்கு முட்டைகோசை நன்கு கழுவி சுத்தம் செய்து நீளவாக்கில் மெல்லியதாக குட்டி குட்டியாக நறுக்கி வைத்துக் கொள்ளுங்கள். வெங்காயத்தையும் இதே போல தோல் உரித்து சுத்தம் செய்து மெல்லியதாக நீளவாக்கில் பச்சடிக்கு நறுக்குவது போல நறுக்கி வைத்துக் கொள்ளுங்கள். மற்ற தேவையான எல்லா பொருட்களையும் தயாராக எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.

இப்பொழுது ஒரு பெரிய பவுல் ஒன்றை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் நீங்கள் பொடிப்பொடியாக நறுக்கி வைத்துள்ள முட்டைகோஸ்களை சேர்த்துக் கொள்ளுங்கள். அதனுடன் பொடியாக நறுக்கிய வெங்காயத்தையும் உதிர்த்து சேருங்கள். பின்னர் இவற்றுடன் அரை ஸ்பூன் அளவிற்கு தனி மிளகாய் தூள், 1/4 ஸ்பூனுக்கும் குறைவாக மஞ்சள் தூள், தேவையான அளவிற்கு உப்பு சேர்த்து நன்கு கலந்து விடுங்கள். ஜீரணத்திற்கு பெருங்காயத்தூள் சிறிதளவு, இஞ்சி பூண்டு விழுது கால் டீஸ்பூன் அளவிற்கு சேர்த்துக் கொள்ள வேண்டும். பின்னர் பக்கோடா சுடுவதற்கு தேவையான அளவிற்கு அரிசி மாவு மற்றும் கடலை மாவு கடைசியாக சேர்த்து ஒரு முறை நன்கு கலந்து விடுங்கள்.

- Advertisement -

வெங்காயத்தில் இருக்கும் ஈரப்பதமே இதற்கு ஓரளவுக்கு போதுமானது. அப்படியும் பத்தவில்லை என்றால் கொஞ்சம் போல தண்ணீர் சேர்த்து கெட்டியாக பக்கோடா மாவு பதத்திற்கு பிசைந்து உருட்டி வைத்துக் கொள்ள வேண்டும். வாசனைக்கு சிறிதளவு கறிவேப்பிலை மற்றும் மல்லி தழைகளை சுத்தம் செய்து பொடியாக நறுக்கியும் சேர்க்கலாம். அனைத்தையும் நன்கு கலந்து வைத்த பின்பு அடுப்பை பற்ற வைத்து அதில் ஒரு வாணலியை வையுங்கள். அதில் போதுமான அளவிற்கு சமையல் எண்ணெய் விட்டு காய விடுங்கள்.

இதையும் படிக்கலாமே:
வயிற்றுக்கு இதமான இஞ்சி, எலுமிச்சை ரசம் ஒரு முறை இப்படி செஞ்சி பாருங்க. இந்த ரசம் மட்டும் இருந்தா போதும் சைடிஷ் இல்லாம தட்டு சோறும் நிமிஷத்துல காலி ஆயிடும்.

எண்ணெய் காய்ந்ததும் அடுப்பை மிதமான தீயில் வைத்துக் கொண்டு மாவிலிருந்து சிறு சிறு பகுதிகளாக கையில் எடுத்து பக்கோடாவிற்கு போடுவது போல போட்டுக் கொள்ள வேண்டும். போட்டதும் உடனே நீங்கள் கரண்டியை பயன்படுத்தக் கூடாது. தனித்தனியாக பிரிந்து விடும். ஒரு 30 வினாடிக்குப் பிறகு திருப்பி போட்டு எல்லா புறமும் நன்கு சிவக்க பொன்னிறமாக வறுத்து எடுத்துக் கொள்ள வேண்டும். அவ்வளவுதாங்க, ரொம்ப ரொம்ப சுவையா ஆரோக்கியமான முட்டைக்கோசு பக்கோடா நொடியில் தயார்! எதுவுமே இல்லைன்னா சட்டுனு இத செஞ்சு கொடுங்க, உங்களை வீட்டில் இருப்பவர்கள் அனைவரும் பாராட்டி தள்ளிடுவாங்க.

- Advertisement -