வாரத்திற்கு ஒரு முறை இந்த ஒரு லட்டுவை சாப்பிட்டு வந்தால் போதும். பத்து பேரை சமாளிக்கக்கூடிய பலம் உங்களுக்கு வந்து விடும்

biotien
- Advertisement -

இன்றைய காலகட்டம் மனிதனின் உடல் ஆரோக்கியத்திற்கு பெரிதும் சவாலாக இருக்கிறது. சிறுவயதிலேயே எண்ணற்ற நோய்கள் பலருக்கும் வந்துவிடுகிறது. அதிலும் பெண்களுக்கு எலும்புத் தேய்மானம், ரத்தசோகை போன்ற அனைத்து பிரச்சனைகளும் மிகவும் விரைவாகவே வந்துவிடுகிறது. அவ்வாறு உடல் உபாதைகள் அனைத்தையும் பொறுத்துக் கொண்டு காலத்தை ஓட்ட வேண்டிய நிலைமைதான் அனைவருக்கும் இருக்கிறது. இவ்வாறான உடல் பிரச்சனைகளை சரிசெய்ய நாம் உண்ணும் உணவின் மூலமே உடலின் பலத்தை அதிகரிக்க முடியும். அதற்கு மிகவும் சத்துள்ள உணவுகளை எந்தவித தடையும், தயக்கமும் இல்லாமல் எடுத்து கொள்ள வேண்டும். இப்படி செய்தால் மட்டுமே நமது உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த முடியும். அப்படி சட்டென்று உங்களின் இரத்த சோகை, எலும்பு பிரச்சனை போன்ற அனைத்தையும் சரி செய்யும் இந்த சுவைமிக்க லட்டுவை எப்படி செய்ய வேண்டும் என்பதை பற்றி தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

தேவையான பொருட்கள்:
ஹலீம் சீட் – 100 கிராம், வெல்லம் – 100 கிராம், தேங்காய் – கால் மூடி, ஏலக்காய் தூள் – அரை ஸ்பூன், நெய் – 3 ஸ்பூன், பாதாம் பருப்பு – 15, பிஸ்தா பருப்பு – 15.

- Advertisement -

கால்சியம் லட்டு செய்முறை:
ஹலீம் விதை என்பது பார்ப்பதற்கு சப்ஜா விதை போன்று தான் இருக்கும். இதனை அருகில் உள்ள சூப்பர் மார்க்கெட்டிலும் அல்லது நாட்டு மருந்துக் கடைகளுக்குச் சென்றும் எளிதாக வாங்கிக்கொள்ளலாம். 100 கிராம் கலாம் விதையை ஒரு கிண்ணத்தில் சேர்த்துக் கொண்டு, அதனுடன் இரண்டு டம்ளர் தண்ணீர் ஊற்றி 3 மணி நேரத்திற்கு ஊற வைக்க வேண்டும்.

இவை நன்றாக ஊறிய பிறகு சப்ஜா விதை போன்று உப்பி வந்துவிடும். பிறகு 100 கிராம் வெல்லத்தை மிக்ஸி ஜாரில் சேர்த்து பொடியாக அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். பிறகு அடுப்பை பற்ற வைத்து, அதன் மீது ஒரு கடாயை வைக்க வேண்டும். கடாய் நன்றாக சூடானதும் அதில் மூன்று ஸ்பூன் நெய் சேர்க்க வேண்டும்.

- Advertisement -

பின்னர் பொடியாக அரைத்து வைத்துள்ள வெல்லத்தை சேர்த்து, அடுப்பை மிதமான தீயில் வைத்து, வெல்லம் கரையும் வரை கலந்து கொண்டே இருக்க வேண்டும். பிறகு இதனுடன் ஊற வைத்த கலாம் விதையை சேர்த்து நன்றாக கலந்து கொண்டே இருக்க வேண்டும். இவற்றில் இருக்கும் தண்ணீர் பதம் முழுமையாக வற்றி கெட்டி பதம் வரும் வரை கலந்து கொண்டு இருக்க வேண்டும்.

பின்னர் கால் மூடி தேங்காயை பொடியாக துருவிக் கொள்ள வேண்டும். பிறகு பாதாம் மற்றும் பிஸ்தாவை மிக்ஸி ஜாரில் சேர்த்து பொடி செய்து கொள்ள வேண்டும். பிறகு இவை இரண்டையும் கலாம் விதையுடன் சேர்த்து நன்றாக கலந்து விடவேண்டும். சிறிது நேரம் இவை அனைத்தும் சேர்ந்து ஒன்றாக வெந்து, சரியான பதம் வந்ததும் லேசாக ஏலக்காய் தூள் சேர்த்து கலந்து விட்டு, அடுப்பை அனைத்துவிட வேண்டும். இவை மிதமான சூட்டிற்கு வந்ததும் சிறு சிறு உருண்டைகளாக பிடித்துக் கொள்ள வேண்டும்.

- Advertisement -