நாம் அணிந்திருக்கும் நகைகளை சொர்ணாபிஷேகத்திற்கு தருவது தவறா?

abishegam

பொதுவாக பல கோவில்களில் இறைவணனுக்கு சொர்ணாபிஷேகம் நடப்பதுண்டு. அப்போது சிலர் தாங்கள் அணிந்துள்ள நகைகளை சொர்ணாபிஷேகத்திற்கு கொடுப்பார்கள். அப்படி கொடுப்பது சரியா தவறா என்பதை பற்றி இந்த பதிவில் பார்ப்போம் வாருங்கள்.

lord muruga

சொர்ணாபிஷேகத்திற்கு நகைகளை கொடுப்பதில் தவறில்லை அனால் அது புதிய நகையாக இருக்கவேண்டுமே தவிர நாம் அணிந்த நகையாக இருக்க கூடாது. இறைவனுக்கு அபிஷேகம் செய்யும் எதுவுமே மனிதர்கள் உபயோக படுத்தியதாக இருக்க கூடாது. பால், சந்தனம், பண்ணீர், தேன் என அபிஷேகத்தில் இருக்கும் அனைத்து பொருட்களுமே புதிதாக இருக்கும் பட்சத்தில் நாம் அணிந்திருந்த தங்கத்தை இறைவனுக்கு அணிவிப்பது எப்படி சரியாகும்.

நாம் தினமும் துவைத்து பல வருடங்களாக உபயோகித்த ஆடையை இறைவனுக்கு அணிவிப்பது சரியாகுமா? அதுபோல தான் இதுவும். தங்கம் என்பது பெரும் மதிப்புடைய பொருள் என்றாலும் இறைவனுக்கு கீழ் தான் அனைத்தும் என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும். ஆகையால் சொர்ணாபிஷேகத்தின்போது தங்கம் கொடுக்கவேண்டும் என்று நினைப்பவர்கள் கோவிலிற்கு புதிய தங்கத்தை கொண்டு சென்று அதை கொடுப்பதே சிறந்தது.