காலையில் எழுந்தவுடன் உள்ளங்கையை பார்க்கலாமா?

ULLANGAI1

சிலர் காலையில் எழுந்தவுடன் மற்றவர்கள் முகத்தில் விழிப்பதற்கு முன், தங்களது இரண்டு கைகளையும் ஒன்றாக சேர்த்து உள்ளங்கையை பார்ப்பார்கள். இத்தகைய செயலால் என்ன பயன் என்பதை பற்றி இந்த பதிவில் பார்ப்போம் வாருங்கள்.

பொதுவாக ஒருவருடைய விரல்களின் நுனியில் மகாலட்சுமியும், உள்ளங்கையில் சரஸ்வதியும், கீழ் மணிக்கட்டுப்பகுதியில் பார்வதியும் இருப்பதாக ஐதீகம். ஆகையால் காலையில் எழுந்து கண் விழித்ததும் கைகளை பார்ப்பதன் மூலம் நல்ல பலன்களை தரும் மூன்று தேவியரை தரிசிக்கலாம். இதனால் அந்த நாள் முழுவதும் நல்லதே நாடாகும் என்பது நம்பிக்கை.